செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்,  பதிப்பாசிரியர்  த.மலர்க்கொடி, அய்யா நிலையம்,  பக். 296, விலை ரூ.300. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து (மூன்று நாள்கள் மார்ச் (4-6, 2015) நடத்திய கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைத் தமிழர்களுடைய வாழ்க்கை, மரபு வழிப்பட்ட வாழ்க்கை. சங்ககாலம் தொடங்கி,இக்காலம் வரை அவர்கள் நடைமுறைப்படுத்திய மரபுகள் சில கொள்ளப்பட்டன; சில தள்ளப்பட்டன. இதற்குக் காரணம், தலைமுறை இடைவெளி என்றுகூடச் சொல்லலாம். மேலும், ஆணாதிக்கம் தலைதூக்கி […]

Read more

பரம(ன்) இரகசியம்

பரம(ன்) இரகசியம், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை, விலை 550ரூ. இலக்கியச் சிந்தனை உட்பல பல பரிசுகளைப் பெற்றவை இந்நூலாசிரியரின் படைப்புகள். சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி ஆழ்மன சக்தி, ஆன்மீகம், சுய முன்னேற்றம், வாழ்வியல் போன்றவை குறித்தும், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப நவீன சிந்தனையுடன் இவரது படைப்புகள் உள்ளதால், வாசகர்களிடையே அவற்றிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் 600 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்த நாவலும், ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான, திகிலான, நிகழ்வுகளுடன் தொய்வின்றிக் கதை […]

Read more