ஸ்பெக்ட்ரம் ஊழல்

மணிச்சுடர் வெள்ளி விழா மலர், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை – 1, விலை 300 ரூ.

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த அப்துல் சமது நிறுவிய “மணிச்சுடர்” நாளிதழ் 25 ஆண்டுகளைக் கடந்து, வெள்ளிவிழா கொண்டாடுகிறது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள வெள்ளி விழா மலரில், கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். சிரமப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள மலர், சிறப்பாய் அமைந்துள்ளது.  

ஸ்பெக்ட்ரம் ஊழல், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ்ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை 195 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-703-9.html

இந்தியாவையே அதிரச் செய்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி அலசும் புத்தகம். சுப்பிரமணியன் சுவாமி ஆங்கிலத்தில் எழுதிய நூலை, சேக்காழான் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.  

மணவாழ்வில் வெற்றி பெறுங்கள், சஞ்சீவியார் பதிப்பகம், 11,கவரைத்தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை – 15, விலை 48 ரூ.

மணமக்கள் இல்லற வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளைக் கூறுகிறார் சி.எஸ். தேவநாதன். புதுமண மக்களுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்.  

பன்னிரு ஆழ்வார்கள், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை – 4, விலை 25 ரூ.

பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல்.  

தாமஸ் ஆல்வா எடிசன், மெர்வின், சுவாமிமலை பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை -17, விலை 40 ரூ.

உலகுக்கு ஒளி கொடுத்த தாமஸ் ஆல்வா எடிசனின் வரலாற்றைக் கூறும் நூல். நன்றி: தினத்தந்தி 31-10-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *