தலித் பண்பாடு

தலித் பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை 100ரூ. சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் எவ்வாறு கட்டமைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள நுால். சாதிப்படி நிலையில் அங்கீகாரம் பெற செய்து வரும் பூஜை, தான, தர்மம் முதலானவற்றை, மக்கள் வாழ்வியலில் உள்ளபடி படம்பிடிக்கிறது. தலித் பண்பாடு ஒரு கலந்துரையாடல், பெரிய புராணத்தில் மேல், கீழ் வரிசையும் முறைமீறல்களும், தமிழ் தலித் இலக்கியம் உட்பட, புத்தகம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கைக் கட்டமைப்புக்கு ஆலோசனை சொல்கிறது. […]

Read more

ஆதி இந்தியர்கள்

ஆதி இந்தியர்கள், டோனி ஜோசஃப், தமிழில்:பி.எஸ்.வி.குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை: ரூ.350 சாதி என்றொரு கற்பிதம் மரபணு அறிவியலின் வளர்ச்சியானது தொல்பழங்காலம் குறித்த ஆய்வுகளில் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இதுவரை அனுமானங்களாகவும் கற்பனைகளாகவும் இருந்துவந்த தொல்பழங்காலத்திய வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமாக எழுதுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆனால், அது சிலரின் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் மாறாகவும் இருக்கக்கூடும். இந்தியாவின் பழங்கால வரலாறு என்பது கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலிருந்து தொடங்கி ஹரப்பா, மொஹஞ்சதாரோவின் பெருமைகளைப் பேசி, வேத காலத்துக்கு நகர்வதே வழக்கம். அதன் அடிப்படையில், […]

Read more

சிறப்புப் பெயரகராதி

சிறப்புப் பெயரகராதி, சு.அ.இராமசாமிப் புலவர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, விலை: ரூ.745 தவளகிரி முதலியாரின் இல்லத்துக்குச் சென்ற கம்பர், விருந்தின்போது முதலியாரின் மகன் பாம்பு கடித்து இறந்ததை அறிந்து, ‘ஆழியான் பள்ளியணையே’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். முதலியாரின் மகன் உயிர் பெற்றானாம். இறந்தவர்களைப் பாடல்கள் மூலம் உயிர்ப்பித்த சமயக் குரவர்கள்போல கம்பரும் செய்திருக்கிறார் என்று கூறுவதை அறிவீர்களா? கம்பராமாயணத்தில் வருவதைப் போல இன்னொரு தாடகையும் உண்டாம். இவள் திருப்பனந்தாளில் வசித்தவள். சிவபெருமானுக்குத் திருமஞ்சனம் செய்யும்போது தாடகையின் உடை சரிகிறது. இவளின் வருத்தத்தைக் […]

Read more

துர்க்கையின் புதுமுகம்

துர்க்கையின் புதுமுகம், என்.சண்முகலிங்கன், தமிழில் பக்தவத்சல பாரதி, சந்தியா பதிப்பகம், விலை 190ரூ. மாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை வழிபாடு தொடங்கப்பட்டு ஈழம் முழுவதும் துர்க்கை அம்மன் கோயில்களும் வழிபாடும் பரவியது தொடர்பான சமூகவியல், மானுடவியல் ஆவணம் இந்நூல். தாய் தெய்வ வழிபாடுகள் தொடரும் மரபும் அதற்கான சமூகக் காரணங்களையும் பேசும் முக்கியமான மானுடவியல் நூல் இது. தென்னிந்திய, தமிழ் சமய, கலாச்சாரம் மரபுகளுடன் தொன்மையான உறவு கொண்டவர்கள் ஈழத் […]

Read more

சங்க கால வானிலை

சங்க கால வானிலை, கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், விலைரூ.300 வானிலைக்கும், காலநிலைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத் துவங்கி, சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்தும் வானிலைச் சிந்தனைகளை ஆய்வு நோக்குடன் வெளிப்படுத்தியுள்ள நுால். காற்று வீசுதல் குறித்தும், மழை பொழிவது குறித்தும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கொண்டிருந்த கருத்தை, இலக்கியச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. புகை மேகம், பஞ்சு மேகம், யானை மேகம் என்று உருவெளித் தோற்றத்தை வைத்து மேகத்தை அடையாளப்படுத்தியது அறிவியல் நுட்பத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு காலங்களாக, ஓர் ஆண்டு பிரிக்கப்பட்டுள்ள தன்மை, மாறாமல் இருப்பதை, வானிலை […]

Read more

புதிய கல்விக் கொள்கை நன்மையா? தீமையா?

புதிய கல்விக் கொள்கை நன்மையா? தீமையா?, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, இந்து தமிழ் திசை, விலை 90ரூ. புதிய கல்விக் கொள்கை புரிதல் வேண்டும் புதிய கல்விக் கொள்கை இன்றைய நாளின் மிக முக்கியமான விவாதமாகியிருக்கிறது. இது எதிர்காலச் சமூகத்தை நிர்ணயிக்கக் கூடியது என்ற வகையில் ஆழஅகலத் தெரிந்துகொள்வதும் ஆக்கபூர்வமாக உரையாடுவதும் அவசியமானது. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் புத்தகம் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோது எழுதப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அது கேள்விக்குறிதான். அதனால்தான் […]

Read more

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்,  முத்தாலங்குறிச்சி காமராசு,  காவ்யா, பக்.343, விலை ரூ.350.  திருநெல்வேலி -திருச்செந்தூர் சாலையில் ஆதிச்சநல்லூர் பரம்பு என்றழைக்கப்படும் 114 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கே ஜெர்மனியைச் சேர்ந்த சாகோர் என்பவர் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல அரிய உண்மைகள் வெளிவந்தன. அதைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது. ஆதிச்ச நல்லூரில் தொல்லியல்துறையினர் 3 கட்டங்களாக அகழாய்வு செய்தனர். அவ்வாறு அகழாய்வு செய்யும்போது நிறைய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் அருகே சிறிய மண்குடங்கள், குவளைகள், மூடிகள், தீப […]

Read more

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, ஆசிரியர் : மு.நீலகண்டன்,  கனிஷ்கா புத்தக இல்லம், விலை160ரூ. பரந்து காணப்படும் பவுத்த சமய வரலாற்றில், ‘கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு’ என்ற பகுதியை எடுத்து, ஆசிரியர் நீலகண்டன் கொங்கு நாட்டில் பவுத்த மத வளர்ச்சியை சிறப்பாகவும், மிக நுணுக்கமாகவும் காட்டியுள்ளார். புத்தரது பெயரைக் கொண்ட புலவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்தனர் என்பதையும் இவரது நுாலின் மூலம் அறியலாம். கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக அழைக்கப்படும் கரூர் என்னும் கருவூர்ப் பற்றியும், கரூரில் வாழ்ந்த சங்கப் […]

Read more

அகக்காட்சி

அகக்காட்சி,(அஞ்சனம்), கிளார் வோயான்ட் சுந்தரராஜன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 200, விலை 200ரூ. உள்ளத்தின் இயல்புகளை, ஏழு இயல்களாக பகுத்து ஆராய்ந்துள்ள நூல். அகக்கண் பெற்ற அதிசயப் பிறவிகளான, ஹெலானா ப்ளாவாட்ஸ்கி, சார்லஸ் லெட்பீட்டர், க்ராய்செட், ஹெர்கோஸ், பால் கோல்டின் ஆகியோரையும், நெற்றிக்கண் பெற்றவராக நம்மாழ்வாரையும் அறிமுகம் செய்துள்ளார். மனம், உள் மனம் பற்றி விளக்கும் நூல். நன்றி: தினமலர், 24/5/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மானுட வாசிப்பு

மானுட வாசிப்பு, தொகுப்பாசிரியர் தயாளன், வானவில் புத்தகாலயம், பக். 120, விலை 112ரூ. தமிழக பண்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் தொ.பரமசிவம். தமிழகத்தில் அறிவு எழுச்சி பற்றி, தயாளனும், சண்முகானந்தமும் அவருடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு நூல். பண்பாட்டு, கல்வி, அரசியல், நாட்டார் வழக்காற்றியல், சுற்றுச்சூழல், சித்தர் இலக்கியம் என பல தளங்களில் உரையாடல் நடத்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் ஒரு பகுதியை, மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறது. தொன்மையை துலக்க முயலும் நூல். புதிய கோணத்தில் சிந்திக்க தூண்டும். நன்றி: தினமலர், 24/5/2020 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 77