வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள் ,சிறுகதைகளும் குறுநாவல்களும் , ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி; தமிழில் – ரா. கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 394, விலை ரூ. 350. உலகின் தலைசிறந்த பத்து நாவலாசிரியர்கள் என எவரொருவர் பட்டியலிட்டாலும் அவர்களில் ஒருவராக இடம்பெறுபவர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி. “குற்றமும் தண்டனையும்’, “அசடன்’, “கரமசோவ் சகோதரர்கள்’ போன்ற பெருநாவல்களை எழுதிய ரஷிய எழுத்தாளர். நாவலைப் பற்றிப் பேசினாலே குற்றமும் தண்டனையையும் விட்டுவிட்டுப் பேச முடியாது.<br>இத்தனை பெருமைமிக்க தஸ்தயேவ்ஸ்கியால் 1848-இல் – இன்றைக்கு 172 ஆண்டுகளுக்கு முன் – எழுதப்பட்ட குறுநாவல் “வெண்ணிற […]

Read more

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ.   ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநாவல்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்த ககால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more

பிராந்தியம்

பிராந்தியம், நாராயணி கண்ணகி, தேனீர் பதிப்பகம், விலைரூ.55 அமரர் கல்கி நுாற்றாண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல். காட்சி மயமாக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. உரையாடல்கள் மிக இயல்பாக உள்ளன. மதுக்கடை ஏலம் பற்றி பேசுகிறது. மிகவும் முதிர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. அருமையாக தயாரிக்கப்பட்டுள்ளது நுால். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வால்வெள்ளி

வால்வெள்ளி, எம்.கோபாலகிருஷ்ணன், தமிழினி வெளியீடு, விலை 130ரூ. மனநெருக்கடிகளின் கதைகள் உளவியல் சிக்கல்களை நுட்பமாகக் கையாளும் படைப்பாளிகளுள் ஒருவரான எம்.கோபாலகிருஷ்ணனின் புதிய குறுநாவல் தொகுப்பு இது. நான்கு குறுநாவல்கள். பிள்ளைகளுக்கு அம்மாவாகவும், கணவனுக்கு மனைவியாகவும் வாழ்க்கை நடத்தும் பெண் ஒருத்தி தன்னுடைய அடையாளத்தைக் கண்டுகொள்ளும் தருணங்களைப் பேசுகிறது ‘வால்வெள்ளி’; ஏற்கெனவே இந்தக் களம் பலமுறை கையாளப்பட்டிருந்தாலும் கவித்துவமான வரிகளும் நுட்பமான தருணங்களும் புதுமையான வாசிப்பைத் தருகின்றன. செய்யாத குற்றத்துக்காகக் காவல் துறையிடம் சிக்கிக்கொள்ளும் ஒருவர் எப்படியான மனநெருக்கடிக்கு உள்ளாகிறார் என்பதைச் சொல்கிறது ‘ஊதாநிற விரல்கள்’. […]

Read more

கார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை

கார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை, என்.ராமகிருஷ்ணன், மதுரை புத்தக மையம், விலை 15ரூ. உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதைமார்க்ஸியத் தலைவர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எளிய முறையில் எழுதிய அனுபவம் கொண்ட என்.ராமகிருஷ்ணன், ‘கார்ல் மார்க்ஸ் – உலகிற்குப் புத்தொளி தந்த மாமோதை’ என்ற குறுநாவலை எழுதியிருக்கிறார். இந்தக் குறுநூல் மார்க்ஸின் வாழ்க்கையைவிடவும் அவருடைய கொள்கைகளை, அடிப்படைகளைச் சுருக்கமான வகையில் தருகிறது. அறிமுக நூல் என்ற வகையில் இதுவும் குறிப்பிடத்தக்கதே. – ஆதி வள்ளியப்பன், நன்றி: தி இந்து, 5/5/2018. இந்தப் […]

Read more

வாழ்ந்தவர் கெட்டால்

வாழ்ந்தவர் கெட்டால், க.நா. சுப்ரமண்யம், நற்றிணை பதிப்பகம், விலை 60ரூ. ‘எனக்கு 200, 600 பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட, சிறிய சிறிய நாவல்கள் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி’ என்று சொல்லும் க.நா.சு. எழுதிய, 75 பக்கங்களே கொண்ட நாவல் இது. நாவலின் பரப்பும், அதில் வலம்வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும்கூட மிகக் குறைவு. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது வாசகன் பெறும் சுகமான அனுபவம் நம்மைப் பெரும் வியப்பிலாழ்த்துகிறது. கதைதக்களனில் புதிய உலகம், புதிய பாணி எனத் தொடர்ந்து தனது நாவல்களில் புதுமை படைத்துவந்த […]

Read more