இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக்.160, விலை 80ரூ. இலக்கியத்தின் ஆரம்ப கால படைப்புகள் அனைத்தும், கவிதைகளாக, காவியங்களாக வெளிவந்தன. அவை காலமாற்றத்தால், நவீன இலக்யி வெளிப்பாட்டால், கட்டுரைகளாக உருமாற்ற துவங்கின. இந்த ஆய்வு புத்தகத்தில் பெண்யிம், திருக்குறளில் கல்வி, சிலப்பதிகாரம் காட்டும் மானுட விழுமியங்கள் உள்ளிட்ட, பல ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், விலை 80ரூ. இலக்கியச் சுடர், எழுத்துச் சிற்பி முதலான விருதுகளைப் பெற்றுள்ள ச.உமாதேவி, “இலக்கிய அமுதம்” என்ற தலைப்பில், நூல் எழுதியுள்ளார். பாவேந்தர் கவிதைகளில் பெண்ணியம், அருட்பா காட்டும் பண்பாட்டுக் கூறுகள், திருக்குறளில் கல்வி உள்பட 15 ஆய்வு கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. எல்லாம், இலக்கியச் சிறப்பு வாய்ந்த கட்டுரைகள். சிந்தனைக்கு விருந்தளிப்பவை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், தொகுப்பு முனைவர் இரா. மோகன், திருவரசு புத்தக நிலையம், விலை 180ரூ. வெறும் உணர்வுகள் – வெறும் வார்த்தைகள் என்ற நிலைகளைக் கடந்து தமிழுக்கும், வாழ்வியலுக்கும் புதிய பரிமாணங்கள் கொடுக்கும் படைப்புகளாக இந்த ‘இலக்கிய அமுதம்’ தொகுக்கப்பட்டிருக்கின்றன. மனித குலத்திற்கு இலக்கினை இயம்பி, அவன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையினை – வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழும் நெறியினை எடுத்துரைப்பதால் இலக்கியத்தையும் இவ்வரிசையில் ‘அமுதம்’ எனச் சுட்டுவது சாலப் பொருந்தும் வகையில் 30 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மனித […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், பேராசிரியர் இரா. மோகன், திருவரசு புத்தகநிலையம், பக். 282, விலை 180ரூ. மனித குலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையை, நெறியை ஏடுத்தியம்பும் இலக்கிய கட்டுரைகள் முப்பதைக் கொண்ட நூல். கவிஞர்களைப் பற்றிய கவி அமுதம், சங்க இலக்கியம் குறித்த செவ்வியல் அமுதம், இக்கால நடப்பியலை பதிவு செய்யும் சிந்தனை அமுதம் என இலக்கிய அமுதத்தை மூவகையாகத் தந்து சுவைக்க சுவைக்க இன்பமூட்டுகிறார் பேராசிரியர் இரா. மோகன். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.

Read more