உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், சீத்தாகந்த் மகாபாத்ரா, தமிழில் முனைவர் ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாடமி, பக். 208, விலை 125ரூ. பழங்குடி மக்களை விவரிக்கும் சிறுகதைகள்! இந்த நூல் 13 கதைகள் வழி, வித்தியாசமான பாடுபொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியர், புகழ்மிக்க கோபியாத் மொகந்தி, பழங்குடி மக்களின் வாழ்வியலைத் தம் கதைகளில் படம் பிடித்துக் காட்டுவதில் ஈடுபாடுடையவர். இந்த நூலிலும், ஒன்றிரண்டு கதைகள் அந்த பின்புலத்தில் அமைந்துள்ளன. இருப்பினும் குடும்பப் பாங்கான கதைகளும் இதில் உள்ளன. ‘அம்புப் படுக்கை, இருவீரர்கள், வீடு […]

Read more

இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்

இஸ்லாத்தின் ஐந்து தூண்கள், கமருன் பப்ளிகேஷன், நெ.7, தனலட்சுமி காலனி முதல் தெரு, சாலிகிராமம், சென்னை 93, விலை 75ரூ. மனிதனிடத்தில் நற்பண்புகள், இறையம்சம், மனிதநேயம் போன்றவற்றை உருவாக்குவதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக இறைவன் அறிமுகப்படுத்திய இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்றழைக்கப்படும் கலிமா (உறுதிமொழி), தொழுகை, நோக்பு, ஜக்காத் (ஏழை வரி), ஹஜ் ஆகியவை குறித்து பல ஆதார நூல்கள் உதவியுடன் அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அல்ஹாஜ் என். முகம்மது மீரான். மேலும் இந்நூலில் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும் […]

Read more

இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு

இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு, எஸ். ராமன், ஆங்கில மூலம்-எஸ். லட்சுமி நாராயணன், இந்துத்துவப் பதிப்பகம், 46, அனுமந்தபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005, பக். 278, விலை 150ரூ. ஸ்ரீ ராம பிரான் அவதரித்து 5000 ஆண்டுகள் ஆன பிறகும், அவருடைய மனிதாபிமான குணங்கள் இன்றும் பலருக்கு முன் மாதிரியாக இருந்து வழி காட்டும். ராமரின் வாழ்க்கைச் சம்பவங்களை நன்றாக அறிந்து கொண்டதால்தான், ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்காக நடத்த முடியும் என்று வாதிடும் ஆசிரியர், […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், தொகுப்பாசிரியர்-கோபிநாத் மொகந்தி, தமிழில்-ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 208, விலை 125ரூ. ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன. உதாரணமாக எறும்பு என்ற சிறுகதையில் ஓர் […]

Read more