தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள்

தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள், எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 104, விலை 65ரூ. இலக்கிய விமர்சனம் குறித்த ஆழமான கருத்துகள் அடங்கிய நூல். எவ்வாறு விமர்சனம் அமைய வேண்டும்? என்பதை விளக்கும் நூலாசிரியர், கலை, இலக்கியங்களின் தோற்றம், இலக்கியம் படைப்பவரின் அனுபவம், அறிவு, அவருடைய வாழ்க்கைப் பார்வைக்கும், இலக்கியத்துக்கும் இடையிலான உறவு, இலக்கியத்தின் உள்ளடக்கத்துக்கும் அதன் வடிவத்துக்குமான தொடர்பு, ஓர் இலக்கியம் உருவான காலம், சமூகப் பின்னணி, வாசகர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக […]

Read more

நவக்கிரகஹங்கள்

நவக்கிரகஹங்கள், உமா ஹரிகரன், லட்சுமி மந்திர், பீச், ஆலப்புழை 688012, கேரளா மாநிலம். இந்து சமய புராணங்களில் நவக்கிரகங்களின் ஆதிக்கம், தாக்கம் மற்றும் குணாதிசயங்கள் மற்றும் ஒவ்வொரு ராசியிலும் தான் இருக்கும் இடத்தில் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்ட நூல். ஆண்டவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கோவில்களின் மூலமாகத்தான் அருள் பாலிக்கிறான். கோவிலில் உள்ள மூர்த்தியின் மூலமாகத்தான் அருள் கிடைக்கிறது. இது இந்து சமயத்தின் ஒரு மரபு. அந்த அடிப்படையிலே தமிழகத்திலேயே நவக்கிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளன. சூரியன் ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும், சந்திரன் […]

Read more

ஊமைத்துரை வரலாறு

ஊமைத்துரை வரலாறு, வே. மாணிக்கம், மகிழ் பதிப்பகம், 4ஆ, பக்தராய் பணிவார் தெரு, பாளையங்கோட்டை 627002, பக்கங்கள் 102, விலை 70ரூ. இந்திய விடுதலை வரலாற்றில், கயத்தாற்றில் தூக்குத்தண்டனை பெற்ற கட்டபொம்மனின் வரலாறு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பகுதி. கட்ட பொம்மனின் இளவல் ஊமைத்துரையின் பங்களிப்பு இந்த வரலாற்றோடு இணைந்ததுதான் என்ற போதிலும், பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்ததாகச் சொல்ல முடியாது. வே. மாணிக்கம் ஊமைத்துரையின் வீரவரலாற்றை, ஆவணங்களின் துணையுடனும் நேரடி தொடர்பு கொண்டு ஆய்வு நோக்கி எழுதியிருக்கிறார். நல்ல பணி, பாராட்டுக்குரியவர். அவசியம் […]

Read more