வளர்பிறைகளும் தேய்பிறைகளும்

வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. சிலரது வாழ்க்கை வளர்பிறை போல வளரும். சிலரது வாழ்க்கை தேய்பிறைபோல தேயும். இதற்கு என்ன காரணம் என்பதை இஸ்லாமியப் பின்னணியில் விளக்கும் சமூக நாவல். நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாகிய பனையடியூரில் இஸ்லாம் எவ்வாறு வேரூன்றி செழித்து வளர்ந்தது என்பதை இப்பகுதி மக்களின் கலாச்சார பண்பாட்டு நோக்கில் பதிவு செய்யப்பட்ட நாவல் இது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/1/2017.

Read more

வான் தொட்டில்

வான் தொட்டில், முனைவர் ஆ. மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக். 192, விலை 125ரூ. தன்னை உணர்ந்தவன் ஞானி. சமுதாயத்தை உணர்ந்தவன் மனிதன். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கலைஞன் என்ற கவிதையாய் கொட்டுகிறது இந்நுல். நன்றி: தினமலர், 06/11/2016.   —-   வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. ஆசிரியர் தன் முதல் நாவலில் அனைத்து வகை சுவைகளையும் கூட்டி எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

செவக்காட்டு சொல் கதைகள்

செவக்காட்டு சொல் கதைகள், கழனியூரன், புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 140ரூ. செவக்காட்டு சொல்கதைகள் என்ற இந்த நாட்டுப்புற கதைக் களஞ்சியத்தை படைத்திருக்கிறார் எழுத்தாளர் கழனியூரன். கர்ணன் என்கிற மகாபாரதப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு நாட்டுப்புற மக்கள் உருவாக்கி இருக்கும் கதைகளை விவரிக்கும் அத்தியாயம் சுவாரசியம். அன்னதானம் மிக முக்கியமான மானுடப்பண்பாகப் பேணப்பட்டது என்பதைக் காண்பிக்கும் கதை இது. அத்துடன் கெட்டது செய்பவன் ஜெயிக்க முடியாது என்பதை தீர்மானமாக கிட்டத்தட்ட இதில் உள்ள எல்லா கதைகளும் சொல்கின்றன. நமது ஐதீகங்களில் புழுங்கும் ஐந்து […]

Read more