தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு

தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு, மு.கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், விலைரூ.500. தமிழ் மொழியை எளிதாக கற்பிக்கும் வகையில் நுட்பமாக ஆய்வு செய்து, உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். பெற்றோரும், ஆசிரியரும் பயன்படுத்த தக்க வகையில் உள்ளது. பின்தங்கிய கிராம அரசுப்பள்ளி மாணவ –மாணவியரிடம் சோதனை முறையில் அமல்படுத்தி, மேம்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரியின் பாராட்டும் பெற்றுள்ளது. தாய்மொழி கற்பித்தலில், பெற்றோர், ஆசிரியருக்கு உள்ள பங்கை துல்லியமாக உணர்த்தி, எளிய அணுகு முறையில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. புரிந்து கற்க ஏதுவாக, 45 நாட்களுக்கு […]

Read more

கசடறக் கற்க கற்பிக்க…

கசடறக் கற்க கற்பிக்க…, முனைவர் மு.கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், பக். 156, விலை 140ரூ. ஷெனாய் நகரிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இந்நூலாசிரியர், இதற்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். பி.ஹெ.டி வரை கல்வித் தகுதி பெற்றுள்ள இவர், ஆரம்பக் கல்வி மாணவர்கள் மிக எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை எழுதி, படிக்க புதிய முறைகளை ஆய்வு செய்து இந்நூலை உருவாக்கியுள்ளார். முதலில் குழந்தைகள் மொழி கற்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து, […]

Read more

கோழிப்பாட்டி

கோழிப்பட்டி, ஐ.சிவசுப்பிரமணி ஜெயசேகர், அய்யா நிலையம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 128, விலை 100ரூ. சமகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்களை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாயிலாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்துமே கற்பனை அல்ல. நெஞ்சை உலுக்கும் நிஜங்கள். ஒவ்வொரு சிறுகதையைப் படித்து முடிக்கும்போதும் சோகத்தால் மனம் கனத்துப் போகிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோழிப்பாட்டி கதையில் கொள்ளி வைக்க ஆம்புளப்புள்ள வேணும் என்று மார்தட்டும் கோழிப்பாட்டி, அதே ஆம்புளப்புள்ளைகளால் துன்புறுத்தப்படும்போது தானே தனக்குக் கொள்ளி […]

Read more

விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி, கவிஞர் பத்ம தேவன், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி. நகர், சென்னை 17, பக். 200, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-878-8.html தனிப்பாடல்கள் பலவற்றைத் தொகுத்து, விவேக சிந்தாமணி என்ற பெயரில் நூலாக முதலில் வெளியிட்டவர் யார் என அறிய இயலவில்லை. முற்காலத்தில், பெரியோர்கள் அனைவரும் படித்து பாதுகாத்த நூல். இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களும், நீதிக் கருத்துக்களை கூறும் பாடல்களும் உள்ளன. புராணச் செய்திகளும் பஞ்சதந்திரக் கதைச் செய்திகளும் […]

Read more