கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ்

கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ், ஜெகதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.80. பாவம் செய்பவர்களுக்கு ஆண்டவனால் தரப்படும் தண்டனையே நோய் என்ற கருத்தை உடைத்து நொறுக்கிய மருத்துவ அறிவியல் முன்னோடி பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பேய், பயம், கடவுள் கோபத்தால் நோய் வருகிறது என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என நிரூபித்து, அறிவியல் அணுகுமுறையால் வெற்றி பெற்றவர். இவரது கருத்துகள் மருத்துவ உலகில் இன்றும் அறியப்படுகின்றன. மருத்துவ சேவை புரிய விழையும் டாக்டர் எடுக்கும் சத்தியப் பிரமாணத்துக்கு, ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி என பெயர். பல நாடுகளில் […]

Read more

மவுண்ட் பேட்டன் பிரபு

மவுண்ட் பேட்டன் பிரபு, ஜெகதா, செண்பகா பதிப்பகம், விலைரூ.175 பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ராஜதந்திரியாக நிர்வாகத் திறமை கொண்ட மவுண்ட் பேட்டன் பற்றிய நுால். இந்தியாவில் பெரும் பதவி வகித்தவரின் வாழ்க்கை வரலாறு, 32 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. அறியாத செய்திகளைத் தகவலாக தந்துள்ளார். நேருவுடன் இருந்த ஆழமான நட்பு, படேல், காந்தி போன்றோரிடம் மதிப்பு, முகமது அலி ஜின்னாவின் பிடிவாதம் போன்றவை புதிய தகவலோடு எடுத்தாளப்பட்டுள்ளன. படேல் – நேரு முரண்பாடு, மவுண்ட் பேட்டன் கருத்துகளுக்கு எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்தது, ஜின்னா இந்தியாவை இரண்டாக்க வேண்டும் […]

Read more

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம்

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம், ஜெகதா, சங்கர் பதிப்பகம், விலைரூ.260. கால பைரவரின் புராணத்தில் துவங்கி, பைரவர் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் கூறி, பைரவ வழிபாட்டால் கிட்டும் பலன்கள், தமிழகத்திலுள்ள பைரவர் தலங்கள், பைரவர் சஷ்டி கவசம், அஷ்ட பைரவர் அவதாரங்கள், பைரவர் ஆற்றல்கள், பிரபஞ்ச ரகசியம், நட்சத்திர கோவில்கள் போன்ற பல தகவல்கள் தொகுக்கப்பட்ட நுால். சனி பகவானுக்குக் குரு என்பதாகக் கூறி, ஒவ்வொரு ராசிக்காரரும் முறைமையோடு வழிபாடு செய்ய வேண்டிய கிழமைகள் தரப்பட்டுள்ளன. பைரவர் விரதம் மேற்கொள்ள வேண்டிய […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும், ஜெகதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-058-2.html வைணவர்களால் போற்றி வணங்கப் பெறுபவரும், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவருமான மகான் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை முறைப்படி தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் ஜெகதா. ஒன்றே குலம் என்று எல்லோரையும் சமமாகக் கொண்டாடிய உத்தமர் ராமானுஜர். குருவின் ஆணையையும் மீறி, திருக்கோட்டியூர் சவும்ய நாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி நின்று, எல்லோரையும் உரத்த குரலில் அழைத்து, […]

Read more

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ்

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ், சேவியர், அருவி, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 100ரூ. கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகள் இல்லை, இரண்டு கைகள், கால்கள் இல்லாத நிலையில் பிறந்த குழந்தையை (நிக்வாயிச்சஸ்) பெற்றோர் வெறுத்து ஒதுக்கிவிடாமல் வளர்த்து ஆளாக்கி இருப்பதற்கே சபாஷ் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தையும் வளர்ந்து இன்றைக்கு தன்னம்பிக்கை பேச்சுக்களால் உலகத்துக்கே தன்னம்பிக்கையூட்டி கொண்டிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. மனம் வைத்தால் எந்த நிலையிலும் வாழ்வில் வென்று காட்ட முடியும் என்பதற்கு நிவ்யிச்சஸ் உதாரணமாகி […]

Read more