சட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம்

சட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம்,தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி, சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், தொகுதி 1, பக்.296, விலை ரூ.190, தொகுதி 2; பக்.720; விலை ரூ.450. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கல்யாணசுந்தரம் சட்டமன்றத்தில் 1952 முதல் 1956 வரை ஆற்றிய உரைகள் முதல் தொகுதியாகவும், 1957 முதல் 1961 வரை ஆற்றிய உரைகள் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவரின் பிரச்னைகளும், சாலை வசதி,தண்ணீர்ப் பிரச்னை, மருத்துவவசதி, விவசாயம், கல்வி, மொழிப் பிரச்னை என அனைத்தும் […]

Read more

எளிமையின் ஏந்தல்

எளிமையின் ஏந்தல், தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 240ரூ. கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர். நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். மொத்தம் 48 கட்டுரைகள், எல்லாம், படிப்பவர்களை சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். “கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்” என்ற கட்டுரையில் நல்லகணணு கேட்கிறார்- “ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை இலங்கை அரசுமதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருதமுடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், ப்ரியாபாலு, கண்ணப்பன் பதிப்பகம், பக். 560, விலை 400ரூ. நன்னெறிகளை கதாபாத்திரங்களின் மூலம் எடுத்துரைக்கும் இக்கதைகள், மந்திரங்கள், தந்திரங்கள், மாயாஜாலங்கள் நிறைந்தவை. வாழ்க்கைக்குத் தேவையன ஆலோசனைகளையும் வழங்கும் கதைகள் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 04/5/2016.   —- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரை இசைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்களில் கண்ணியத்தையும் பகுத்தறிவையும் பொதுவுடமையையும் சிறப்பாகக் காணலாம் என்பதற்கு இத்தொகுப்பு நூலே சான்று. -இரா. மணிகண்டன். […]

Read more

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு, தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 288, விலை 180ரூ. பொதுவுடைமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவின் உயர்ந்த பண்புகளையும் ஆளுமைத் திறனையும், போராட்ட வாழ்க்கையையும் எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டிருக்கும் நூல். அவருடன் பழகியவர்கள், போராட்டங்களில் பங்கேற்றவர்கள், சிறையில் உடனிருந்தவர்கள், அவரைப் பற்றி எழுதிய கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல கண்ணுவின் துணைவியார் ரஞ்சிதம் நல்லகண்ணுவுடனான நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, தனி வாழ்க்கையிலும் எவ்வாறு ஒரு புரட்சிகரமான தோழராகவே […]

Read more