என் கடமை – ஊழல் ஒழிக!

என் கடமை – ஊழல் ஒழிக!, நல்லம நாயுடு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்: 216; ரூ. 225. காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நல்லம நாயுடுவின் வாழ்க்கை வரலாறும், பணிக்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூகக் குற்றங்களுக்கு எதிராகவும் போராடி வென்ற அவரது அரிய அனுபவங்களும் இந்நூலில் இரண்டு பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டி என்கிற கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நல்லம நாயுடு. மாணவப் பருவத்திலேயே விளையாட்டு வீரராக விளங்கினார். கூடைப்பந்து விளையாட்டில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றவர். […]

Read more

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. தமிழகம் கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக பல ஆண்டுகள் காட்டில் மறைந்து வாழ்ந்து, அதிகாரிகள் கொலை, முக்கிய பிரமுகர்கள் கடத்தல் உள்ளிட்ட பல கொடூரச் செயல்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் 2004-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்கள் மனதில் இன்னும் நிழலாடிக் கொண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது. வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் […]

Read more

இயர்புக் 2019

இயர்புக் 2019, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. பொது அறிவுப் பெட்டகம் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் பலனடையும் விதத்தில் நக்கீரன் பதிப்பகம் ஆண்டுதோறும் வெளியிடும் இயர்புக் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த நூலில் கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், திட்டங்கள், விருதுகள், தமிழ்நாடு, இந்தியா, விளையாட்டுகள், உலகம் ஆகிய தலைப்புகளில் பொது அறிவுத்தகவல்கள் தரப்பட்டுள்ளன. 1120 பக்கங்கள் கொண்ட இந்நூல் 160 ரூபாய் விலையில் கிடைக்கிறது. தமிழ் வழியில் போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு எளிமையான […]

Read more

சோத்துக் கட்சி

சோத்துக் கட்சி, கஸ்தூரி, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஏப்ரல் வரை நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் போது, நடிகை கஸ்தூரி வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இப்போது தனி புத்தகமாக வந்து இருக்கிறது. நித்தியானந்தா, அரசியலில் ரஜினி, கமல், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் நடிகை கஸ்தூரி அலசி ஆராய்ந்த அவற்றுக்குப் பொருத்தமான கதைகளுடன் சொல்லி இருப்பதால் காலம் கடந்த பின்னரும் ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 456, விலை 360ரூ. கடந்த, 1988ம் ஆண்டு, வீரப்பன் குறித்த செய்திகள் பத்திரிகையில் வெளிவரத் துவங்கின. 1991ல் கர்நாடக மாநில, டி.எப்.ஓ.,வை கொடூரமாக கொலை செய்தது; 1993ல் வைத்த கண்ணிவெடியில், தமிழக கர்நாடக அதிரடி படை வீரர்கள், 22 பேரை பலியாக செய்தது உள்ளிட்ட சம்பவங்கள், இந்தியாவையே அதிர வைத்தன. யார் இந்த வீரப்பன் என்பதை அறியும் ஆர்வம், மக்களிடம் அதிகரித்தது. இங்ஙனம் ஆரம்பிக்கிறது, […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ. தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘ காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்.456, விலை ரூ.360; சந்தனக் கடத்தல் வீரப்பனை நூலாசிரியர் சந்தித்துப் பேட்டிகள் எடுத்த சம்பவங்களின் தொகுப்பு, திகில் நாவல் வடிவில் உருவாகியுள்ளது. வீரப்பன் சபாரி சூட் அணிந்து கையைக் கட்டியிருக்கும் பழைய போட்டோ மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வீரப்பனின் புதிய போட்டோவை தனது பத்திரிகையில் பிரசுரிக்க நூலாசிரியர் நிருபர் குழுவை அனுப்புவதில் தொடங்கும் விறுவிறுப்பு, நூலின் கடைசிப் பக்கம் வரை நீடிக்கிறது. வீரப்பனைச் சந்திக்க இரண்டரை நாள் 300 […]

Read more

பொய் வழக்கும் போராட்டமும்

பொய் வழக்கும் போராட்டமும், பெ. சிவசுப்பிரமணியன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 395ரூ. சந்தன கடத்தல் வீரப்பன் வழக்கு தொடர்பாக தமிழக கர்நாடக அதிரடிப்படையின் அடக்குமுறைகளை எதிர்கொண்ட நக்கீரன் செய்தியாளரும், நூலாசிரியருமான பெ.சிவசுப்பிரமணியன் தான் சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட சிறைக்குறிப்புகள் அடங்கிய நூல். வண்ணபுகைப்படங்களுடன் 51 தலைப்புகளில் பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026649.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தினத்தந்தி, 21/2/2018.

Read more

குஷ்பு பக்கம்

குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 120ரூ. சாமானியர்களுக்குள் எழும் உணர்ச்சிகளை எல்லாம், அவர்களின் பக்கம் நின்று அழுத்தமாய் சொல்லியிருக்கிறது, இந்த நூல். ‘இவரின் துணிச்சலும், போர்க்குணமும் தான், இவரை நக்கீரன் ஏந்தியதற்கு காரணம்!’ எனும், முதற்பக்கத்தோடு துவங்குகிறது இந்த நூல்; ஆம், நக்கீரன் இதழில், குஷ்பு எழுதிய தொடர் தான், இந்த நூல். 20 தலைப்புகள் இதில் உள்ளன.நிறவெறியின் வால் பிடித்தே பயணிக்கும் ஒரு கூட்டத்தையும், படையெடுத்து நிற்கும் உலக பிரச்னைகள் அனைத்தையும் எளிதாய் கடந்துவிட்டு, ‘நாங்கள் கலாசார […]

Read more

உறவுகள்

உறவுகள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், விலை 150ரூ. உழைப்பால் உயர்ந்து இன்று பெரும் தொழில் அதிபராக விளங்குபவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். அவருடைய பரந்து விரிந்த உலக அனுபவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நூலை எழுதியுள்ளார். 108 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல உறவு முறைகள் பற்றி விவரிப்பதுடன், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் நுட்பமான கருத்துக்களை கூறுகிறார் ஆசிரியர். சிலரைப்பற்றிய கட்டுரைகளில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது. “உறவுகள் […]

Read more
1 2 3 4