நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் 2, ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இன்று உலகில் சில நியதிகள் என்றென்றும் நிலையாகவே இருக்கின்றன. உதாரணமாக, தண்ணீர் சூடாவதோ அல்லது பனிக்கட்டியாவதோ குறிப்பிட்ட டிகிரி என்றால் அது அதிலிருந்து மாறுவதே இல்லை. மாறும் உலகில் மாற்றம் இல்லாமல் நிலைத்திருக்க வேண்டுமானால், உள்ளும் புறமும் அறிந்திருக்க வேண்டும். புறத்தைக் கண்களால் பார்க்கும் நாம், அகத்தைப் பார்க்கக் கற்றால், முழுமையான மனிதராக வாழலாம். பிதகோரஸின் பின்புலத்தோடு, நமக்கு அதை விளக்கும் ஓஷோவின் முயற்சியே இந்த […]

Read more

ஐந்தாம் வேதம் பாகம் 1, பாகம் 2

ஐந்தாம் வேதம் பாகம் 1, பாகம் 2, ஜெ.கே.சிவன், கிருஷ்ணார்ப்பணம் சேவா சொஷைட்டி. இந்த நாட்டின் ஒப்பற்ற காவியமான மஹாபாரதத்தை, ‘ஐந்தாம் வேதம்’ என, பலரும் புகழ்கின்றனர். மஹாபாரதத்தை தமிழில், வில்லிபுத்துாரார் பாடியுள்ளார். பலரும் உரைநடையாக, எழுதிஉள்ளனர். எத்தனை முறை படித்தாலும், அலுப்பு தட்டாத மஹாபாரதத்தை, விலாவாரியாக, ஒரு சம்பவத்தை கூட விடாமல், ஐந்தாம் வேதம் என்ற பெயரில் ஆசிரியர் எழுதியுள்ளது, மிகச் சிறப்பு. மஹாபாரத கதையை ஆதியிலிருந்து, முடியும் வரை, ஆசிரியர் எளிமையாக, குழந்தைகளும் விரும்பி படிக்கும் வகையில் தந்துள்ளார். எந்த கதாபாத்திரத்தின் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 2, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 514, விலை 200ரூ. மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவராக தொண்டாற்றி வரும் இந்நூலாசிரியன் சீரிய முயற்சியினால், இரண்டாண்டுகளுக்கு முன் இந்நூலின் முதல் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்நூலின் 2-ஆம் பாகமும் அவரால் தொகுக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. மகான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், ஆன்மிகம், இந்திய விடுதலைப் போராட்டம், பெண்கள் முன்னேற்றம், சமூக […]

Read more

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2)

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2),  டாக்டர் சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், பக். 672, 440, விலை 550ரூ, 400ரூ. அந்நாளில், வணிகத்தின் பொருட்டு புதுச்சேரிக்கு வரும் கப்பல்கள், சரக்குகளை துறைமுகத்தில் இறக்கிவிட்டு, புதுச்சேரியிலிருந்து பல பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும், துறைமுகப் பகுதியை ஒட்டி இருந்த மணற்குளங்களில், குடிநீரைச் சேமித்து வைத்திருப்பர். அந்த நீரை கப்பல்கள் சேகரித்து, தங்கள் பயணத்தை துவங்கும். இந்த மணற்குளங்களுள், விநாயகர் வீற்றிருந்த சிறிய கோவிலை ஒட்டிய மணற்குளமும் ஒன்று. மக்கள் அடையாளத்திற்காக, மணற்குளத்து விநாயகர் என்று அழைக்க […]

Read more