வெற்றியே இலட்சியம்

வெற்றியே இலட்சியம், கவிதாசன், குமரன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. வெற்றி என்பது முதன்மையாக இருப்பதல்ல. முன்னேறிக்கொண்டே இருப்பது போன்ற முன்னேற்ற முயற்சிகளுக்கு உந்துதலாக இருக்கும் நூல். நன்றி: குமுதம், 18/4/2016.   —- எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. பாரதியார் எழுதிய ‘புதிய ஆத்திச்சூடி’ க்கு விளக்கவுரை எழுதியுள்ளார். பாரதியின் கீர்த்தியை பரப்பும் வண்ணம் எளிய நடையில் புத்துரை அமைந்துள்ளது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.

Read more

இலக்கிய மாண்புகள்

இலக்கிய மாண்புகள், செம்மூதாய் பதிப்பகம், ஒவ்வொரு நூலும் விலை 60ரூ. குறுந்தொகை காட்சிகள், சிற்றிலக்கியங்களில் வாழ்வியல், அனுமனின் வீரச்செயல்கள், பெரியு புராணத்தில் பக்தி, பாரதியின் பாஞ்சாலி போன்ற தலைப்புகளில் முனைவர் தா. நிலகண்ட பிள்ளை இந்த நூலில் இலக்கிய நயங்களை எழுத்தோவியங்களாக்கித் தருகிறார். இதேபோல அவர் எழுதிய சிலப்பதிகாரச் சிந்தனைகள், செம்மொழிச் சிந்தனைகள், செவ்விலக்கியப் பதிவுகள் ஆகிய நூல்களிலும் இலக்கிய மணம் வீசுகிறது. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.   —- வெற்றி உங்களுக்காக, கவிதாசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. வெற்றியை விரும்பாதவர்கள் […]

Read more

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. பன்முக திறமை கொண்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா எழுதியுள்ள இந்த ஆய்வு நூலின் மிக பழமைவாய்ந்த மகாபாரம் இதிகாசத்தை இதுவரையில் யாரும் செய்யாத அளவுக்கு அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புகழ் மாலையும் சூடியிருக்கிறார். ஆங்காங்கு பல கண்டன கணைகளையும் வீசியிருக்கிறார். மகாபாரதம் என்ற ஆழ்கடலில் மூழ்கி அங்கு இருக்கும் முத்துக்களை மட்டுமல்லாமல், விமர்சனத்துக்குரிய பல கருத்துக்களையும் அடையாளம் காட்டியிருக்கிறார். மகாபாரதத்தை நேசிப்பவர்களுக்கும், அதை முழுமையாக எல்லா கோணங்களிலும் […]

Read more

சிந்தனைக் களஞ்சியம்

சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. பல நூல்களைப் படித்த திருப்தியை தரக்கூடிய அளவுக்கு பல்வேறு செய்திகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, பிரபலமானவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும்போது, அவற்றிலுள்ள பலம், பலவீனங்களையும் ஆரோக்கியமான விமர்சனத்துடன் குறிப்பிடுவது இந்நூலாசிரியரின் தனிப் பணியாகும். இந்நூலின் முதல் கட்டுரையான காந்தியடிகளுக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை? என்ற காரணங்களை படிக்கும்போது, தேர்வு கமிட்டியினர் இப்படியெல்லாமா யோசிப்பார்கள் என்று தோன்றுகிறது. எத்தனையோ இக்கட்டான நேரங்களில் மிகச் சரியான […]

Read more