காந்தி கணக்கு

காந்தி கணக்கு, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 100ரூ.

காந்திக் கணக்கு என்னும் இந்த நூல் வ.உ.சி.க்கும் காந்தியடிகளுக்கும் இடையே நடந்த கணக்கு வழக்குப் போராட்டத்தையே விவரிக்கிறது. காந்தியடிகளின் மறுபக்கம் பற்றி பல வினாக்கள் தொடுக்கிறார் நூலாசிரியர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி. வ.உ.சி. வரலாற்று நூலுக்காக தமிழக அரசின் விருது பெற்ற நூலாசிரியர். காந்திக் கணக்கு நூலிலும் பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார். காமராஜர் நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனம், காமராஜருக்காக வழக்காடிய வ.உ.சி. காந்தியின் அஸ்தியை தலையில் சுமந்த தமிழர் அவினாசிலிங்கம், தனக்கான பணத்தை பெறுவதற்காக வ.உ.சி. காந்திஜி இடையே நடந்த அரிய கடிதப் போக்குவரத்து பற்றிய தகவல்கள் நூலுக்கு சுவை சேர்க்கிறது. ஆனாலும் நூல் கோர்வையில் ஆசிரியர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.  

—-

 

மதுரைக்கு அரசி மீனாட்சி, குன்றில் குமார், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 60ரூ.

மதுரை மீனாட்சி பற்றிய சிறப்புகள், வரலாறு, கோவில் பற்றிய விவரங்களை ஆய்வு செய்து தொகுத்து பரவசம் ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது நன்றி: தினத்தந்தி, 30/10/2013.  

—-

 

இலக்கியமும் இலக்கிய ரசனையும், ஜனகன், கங்கை புத்தக நிலையம், பக். 208, விலை 80ரூ.

வாசிப்பதையே, சுவாசமாக கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தில் தற்போது வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது இன்றைய தமிழ் சமுதாயம், வாசிப்பிற்கும், குறிப்பாக, தமிழ் இலக்கிய வாசிப்பிற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் தமிழ் வாசகர்களின் வாசிப்பு தளம், விரிவடைய வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர். இந்த நூலில் உலகம் முழுவதும் உள்ள பல எழுத்துலக சாதனைகள், சாதனையாளர்களை பற்றிய தகவல்கள் வாசகர்களின் இலக்கிய தாகத்தை தணிக்கும் என்றே கூறலாம். நன்றி; தினமலர், 1/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *