சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், மானோஸ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 200ரூ. To buy this Tamil book online  – www.nhm.in/shop/100-00-0001-432-6.html

தமிழ்நாட்டு சித்தர்களான அகத்தியர், கபிலர் முதற்கொண்டு கயிலாய கம்பளிச்சட்டை முனி நாயனார் வரையிலான சித்தர்களின் பாடல்களை உள்ளடக்கிய நூல் இது. பாடல்கள் அனைத்தும் எளிய நடையில் அமைந்திருப்பதுடன், அருஞ்சொற்பொருள் விளக்கமும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் உரைநடையில் விளக்கப்பட்டுள்ள சித்தர் தத்துவங்கள் நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/12/13.  

—-

 

தொடர்ச்சியான முழுமையான மதிப்பீடு (சிசிஇ) ஓர் அறிமுகம், வேதா டி. ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம், 142, கிரீன்வேவ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, விலை 250ரூ.

பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு கையேடு. சிசிஇ கல்வி குறித்த அனைத்தையும் விரிவாக அலசியும், இன்றைய நிலையை ஆராய்ந்தும் இதனை மாற்றி கல்வி கற்பித்தலை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவாதித்து எவ்வாறு இப்பிரச்சினைகளை தீர்க்க சிசிஇ ஓர் உருப்படியான தீர்வு என்பதை விவரித்துள்ளார் ஆசிரியர். சிசிஇ என்கிற மிக நுட்பமான விஷயத்தை பற்றி நடைமுறை உதாரணங்கள், குட்டிக் கதைகள், அன்றாடத் தீர்வுகள் போன்றவை மூலமாக கதை நூலுக்கான சுவாரசியத்துடன் கூறியுள்ளார். 2 தொகுப்பாக வெளிவந்துள்ள புத்தகத்துடன் டி.வி.டி. ஒன்றும் இலவசமாக கிடைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *