ஐந்தாம் கட்ட விடுதலை போர்
ஐந்தாம் கட்ட விடுதலைப் போர், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதி நகர், வியாசார்பாடி, சென்னை 39, பக். 534, விலை 225ரூ.
தமிழீழம் தேவையா? தேவையில்லையா? என்று பேசும் பலரும், அது இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் பிரச்னைகளாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அத்தகையோரை கடுமையாக சாடுவதோடு, அது நம் சகோதரர்களின் பிரச்னை என்ற உறுதியோடு நூல் முழுவதும் பேசுகிறார் கண்மணி, கடந்த 10ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வந்த வரலாற்று நிகழ்வுகளை நூல் முழுதும் பதிவு செய்கிறார். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே போரை நடத்துதல் தொடங்கி, தமிழ் இனப் படுகொலைகளைத் தடுக்காமல்போன தமிழக அரசியல் கட்சிகளின் கோமாளித்தனமான பேச்சுகள் வரை ஒன்றுவிடாமல் பேசுகிறார். பல கட்டுரைகளில் பிரபாகரன் பேசப்படுகிறார். ஒரு தனிப் பெருந்தலைவராக தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையை நூலைப் படிப்போருக்கும் உறுதி செய்கிறார் ஆசிரியர்.
—-
பீமாயணம், தீண்டாமையின் அனுபவங்கள், navayana, காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோயில், பக். 106, விலை 245ரூ. To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0000-398-6.html
இந்தியாவின் துணிச்சல்மிக்க மகத்தான தலைவர்களில் ஒருவரான டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் வாழ்வில் நடந்த சம்பவங்களை அவரது வாழ்க்கையை சித்திரங்கள் வாயிலாக வடிக்கும் புதுமுயற்சி இந்நூல். மேற்கத்திய சித்திரக்கலை மரபை உடைத்து, இந்திய மண்ணின் சொந்தக் கலையான பர்தான் கோண்ட் ஓவியங்களைப் பயன்படுத்தி, துர்காபாய் வ்யாம், சுபாஷ் வ்யாம் என்ற இரு கலைஞர்கள் உருவாக்கிய நூல் இது. இதை ஒரு சவாலான நூல் என்றே சொல்ல வேண்டும். அம்பேத்கரைப் பற்யும், அவரது சாதி தொடர்பான கருத்துக்களும் இன்றைக்கும் ஏன் அவசியப்படுகிறது என்பதை விளக்கவே இந்த ஆக்கம் பயன்பட்டிருக்கிறது. அரவிந்தன் இதனை தமிழாக்கம் செய்துள்ளார். நன்றி: குமுதம், 29/5/2013.
—-
நரபட்சணி, நானக் சிங், தமிழில்-முத்துமீனாட்சி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 235ரூ.
டாகூர் சிங் என்ற சிறுமுதலாளி, பிரீத்பால் என்ற முற்போக்கு எண்ணம் கொண்ட அவனுடைய மகன், சிங்காரா சிங் என்ற தொழிலாளி, அவன் மனைவி சுலோசனா ஆகியோருக்கு இடையே நடக்கும் மனப்போராட்டம்தான் நரபட்சணி என்ற இந்த நாவல். நானக் சிங் எழுதிய இந்த பஞ்சாப் நாவலை முத்துமீனாட்சி தமிழாக்கம் செய்துள்ளார். இந்த நாவல் விறுவிறுப்பாக இருப்பதுடன் சுவாரசியத்தையும் அதிகப்படுத்துகிறது. சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 22/5/2013.