காலமறிந்து கூவிய சேவல்
காலமறிந்து கூவிய சேவல், கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஏ1பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 95ரூ.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கவிதைகளை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். அவரைப்பற்றி வெளிவராத தகவல்களும் இதில் உள்ளன. நன்றி: தினத்தந்தி 8/5/2013.
—-
மைனஸ் ஒன், நந்தாகுமாரன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, பக். 112, விலை 90ரூ.
நவீன உலகின் மனித செயற்பாடுகள் அவனது பேச்சில் மொழியில் நடையில் அந்தரங்கத்தில் என்று ஒன்றுவிடாமல் அவன் பெற்ற அனுபவங்களின் குரல்களாகவே இக்கவிதைகளைக் காண முடிகிறது. அறிவியல் உலகை எதிர்கொள்ளும் மனிதனின் வாழ்வை பிரதிபலிக்கும் பதிவுகள் என்ற அளவில் மட்டுமே இவற்றின் மீதான வாசிப்புகள் ஈர்க்கின்றன. அந்த நவீன உலகத்தை எதிர்நோக்கியிருக்கும் மனிதனின் பேச்சில் ஊடாடும் ஆங்கில கலப்புகள் கவிதையாக வந்து கவிதையின் உயிரை அவ்வப்போது இல்லாமல் ஆக்கிப்போகிறது. இது ஒரு உத்தியோ நடையோ அமைப்போ அல்ல. அத்தனைக்குமான ஆக்கிரமிப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 15/5/2013.
—-
சாந்தா‘ஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும், சாந்தா ஜெயராஜ், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 170ரூ.
இதுவரை நாம் கேட்டிராத வெளிநாட்டு அசைவ உணவுகளைப் பற்றியும், அவற்றின் செய்முறைகளைப் பற்றியும் அந்தந்த நாடுகளுக்கு சென்று செய்து பார்த்த அனுபவங்களுடன் எழுதியுள்ளார். பிரெஞ்சு, அல்ஜீரியன், ஆஸ்திரேலியா, சீனா, இலங்கை, மலேசியா என இன்னும் பல ஏராளமான நாட்டு அசைவ உணவு செய்முறைகள் தரப்பட்டுள்ளன. அசைவ உணவுகளை பயன்படுத்துவோருக்கு மிகவும் பயன்படும் நூல். நன்றி: தினத்தந்தி 8/5/2013.