கிராமத்து ராட்டினம்

கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 118.

சமகாலப் பிரச்சினைகளின் கலை வடிவம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-1.html சிறுகதைகள் அருகிவரும் சூழலில் ஜி. மீனாட்சி பெயரைப் புதிதாக அறிய நேர்த்து. நல்ல தமிழில் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கதைச் கருக்கள் எளிமையானவை. மிக நுட்பமான விஷயங்களைப் பேச அவ்வளவாக சிரமமற்ற சம்பவங்களை அவர் தேர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. மாறியிருக்கிற சமூகச் சூழல் நம்மிடம் விட்டுச் செல்லும் பிரச்சினைகளைத் தகுந்த கோணத்தில் படைப்புகளாக்கியுள்ளார். கதைகள் முதலில் சம்பவ அடுக்குகளாக அமைகின்றன. கதை இன்ன விஷயத்தில்தான் இயங்குகிறது என்பதை அந்தச் சம்பவங்களின் ஊடாக முதலில் அறிய முடியவில்லை. சடைசிக் கட்டத்தில்தான் முடிச்சு அவிழ்கிறது. கதையின் கட்டுமானத்தை அதன் பிறகு சரியென்று நாம் ஒப்புக்கொள்கிறோம். தெளிவற்ற பாவனையில் இயங்கி ஒரு தெளிவைத் தருவதும் புதிய பாணியாகும். இது ஒருவகையான படைப்புத் தந்திரம். அவளுக்கென்று ஓர் மனம், கிராமத்து ராட்டினம் போன்ற கதைகள் இதற்கு எடுத்துக்காட்டுகள். கிராமத்து ராட்டினம் கதை நெடும்போக்காக வந்து இறுதியில் நகர கிராம வாழ்க்கையின் ஒப்பீடாகிறது. அது நுட்பமான மன இயல்புகளை எடுத்துரைப்பதால் கதையுடன் நாம் ஒன்றுகிறோம். இதன் மறுபக்கம் என்னவெனில் பாத்திர வகைமைகளைக் கவனத்தல் எடுத்துக்கொள்ளமலிருப்பது. ஆனால் சொல்லவரும் நேரடித் தன்மைக்குள் கதை பயணமாகும்போது அந்தக் குறை நேர்வதில்லை. சிறகொடிந்த பறவைகள் கதை இதற்கு நல்ல உதாரணம். நாகரிகச் சமூகம் பெற வேண்டிய உயரிய பண்புகளை, அந்த நாகரிகச் சமூகத்தின் கல்வி முறையே அழித்தது எப்படி சின்னாபின்னப்படுத்துகிறது என்பதை ஒரு குடும்பத்தின் அன்றாடச் சம்பவங்களில் காட்டுகிறார். மதிப்பெண்களைக் குறிவைத்து மாணவப் பருவம் இயந்திரமயமாக்கப்படுவதைப் பிரச்சாரத் தன்மையில்லாமல் உணரவைக்கிறார். தாய் மனசு, காக்கைக்கும் தன்குஞ்சு கதைகள் இரண்டும் உளவியல் ரீதியானவை, அவரவர் மனநிலையைப் பிரதிபலிப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் வைத்துச் செதுக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நவீன காலத்தின் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்து அதற்குரிய கலை வடிவத்தை வழங்கியிருப்பதில் ஜி.மீனாட்சி கவனத்திற்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறார். நன்றி: தி இந்து, 12/3/2014.  

—-

மாசறு அகலிகை, முல்லை பி. எஸ். முத்தையா(பதிப்பாசிரியர்), முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர், மேற்கு, சென்னை 40, பக். 192, விலை 100ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-211-2.html

ராமாயணத்திலும் பாரதத்திலும் வரும் கிளைக்கதைகளில் ஒன்றாகிய அகலிகையின் கதையை, தமிழ் எழுத்தாளர்கள் பலர் பல்வேறு கோணங்களில் அலசியுள்ளார். ராஜாஜி, புதுமைப்பித்தன், கம்பதாசன், சிட்டி, எம்.வி.வெங்கட்ராம், க. கைலாசபதி உள்ளிட்ட 19 அறிஞர்கள் புதிய கண்ணோட்டத்தில் அகலிகையைப் பார்த்திருக்கிறார்கள். அவற்றை ஒருசேர பருகும் வாய்ப்பு இந்நூலில் கிட்டுகிறது. படிக்கப் படிக்க அகலிகை பற்றிய படிமம் நம்முன் புதுவிதமாக காட்சிப்படுத்தப்படுகிறது. நல்ல முயற்சி. நன்றி: குமுதம், 19/3/2014,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *