சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 600017, பக், 382, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html

கடந்த 1959ம் ஆண்டு முதற்பதிப்பாக வெளிவந்த இந்நூல் கி.பி. 7 முதல் 10ம் நூற்றாண்டு வரையிலான, சைவ இலக்கிய வரலாற்றை உள்ளடக்கியது. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் துவங்கி, மற்பந்த மார்பன் மணியன் மகன் மதில் வேம்பையர் கோன் நற்பந்த மார் தமிழ் நாராயணன் ஈறாக 14 சைவப் பெரியார்களின் இலக்கிய வரலாறு, தமிழக வரலாற்றுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சைவ இலக்கிய நூல்கள் பலவற்றிற்கு, முன்னோடி நூலான இதில், சமயக் குரவர் நால்வர் மட்டுமின்றி, சேரமான் பெருமான், ஏனாதி சாத்தஞ்சாத்தனார், பட்டினத்துப் பிள்ளையார், சேத்தனார், அவ்வையார், முதற்கண்டராதித்தர், நம்பியாண்டர், நம்பி, வேம்பையர் கோன் நாராயணன் ஆகியோரது இலக்கியங்களும் அவற்றின் சிறப்பும், வரலாற்று நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்தி மொழி பேசும் மக்களுக்கிருக்கும், மொழிப்பற்றில் நூற்றில் ஒரு கூறு தானும் தமிழர்ககு அமையுமாயின் எத்துணையோ நலங்கள், தமிழ்த்துறையில் தோன்றிவிடும். இன்னம் அது தோன்றவில்லை(பக்.361) என்று, 58 ஆண்டுகளுக்கு முன் நூலாசிரியர் கொண்ட ஆதங்கம் இன்றளவும், நீடிப்பதுதான் வேதனையான ஒன்று, முன்னோடி நூல் என்பதால், பலருக்கும் இது பயன் தரும் என்பதில் ஐயமில்லை. -பின்னலுரான்.  

—-

 

மனதை சற்று திறந்தால், டாக்டர் விஜயலட்சுமி பந்தையன், நர்மதா பதிப்பகம், பக். 112, விலை 60ரூ.

நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும் மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள்கூட, இந்த ஆல்பா நிலை தியானப் பயிற்சியால், மனதில் மாற்றம் நிகழப்பெற்றுள்ளனராம். நூல் ஆசிரியை, பல ஆண்டுகளாகப் பலவிதமான, தியான முறைகளைப் பயின்று ஆராய்ச்சி செய்து வருபவர். இந்த நூலில் ஆல்பா நிலைத் தியானம் என்பது என்ன என்பதற்கு விளக்கம் தருவதோடு, அவரிடம் பல்வேறு பிரச்னைகளுடன் வந்த பலரது அல்லல்கள் தீர, அவர் செய்த முயற்சிகளையும் மிக அருமையாக வர்ணிக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல். -மயிலை சிவா. நன்றி: தினமலர்,1/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *