மங்களம் – சிகரம்
மங்களம் – சிகரம், ச.செந்தில் நாதன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-0.html
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குறைஞராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நாவல் இது. கணவன் மீது ஜீவனாம்ச வழக்குத் தொடுப்பதற்காக வரும் மங்களத்தின் கதைதான் இந்நாவல். ஆசிரியரே சொல்வது போல, இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் அவர் வழக்குரைஞர் தொழிலில் சந்தித்த பாத்திரங்கள், சம்பவங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்த நாவல் மங்களம் என்ற பெண்ணின் அவலமிக்க வாவைச் சொல்வதாக இருந்தாலும், பல்வேறு மனிதர்களை, அவர்களுடைய அனுபவங்களை வரலாற்றை விவரித்தபடி செல்கிறது. இன்னொருபுறத்தில் இதுவரை ஊடகங்களில் சித்திரிக்கப்பட்டிருக்கிற நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த சம்பவங்களுக்கு மாறாக உண்மையான நீதிமன்ற நடவடிக்கைகளைச் சித்தரித்திருக்கிறது. இவ்வாறு இரண்டு தளங்களில் நாவல் இயங்குகிறது. இது நாவலின் கட்டுக்கோப்பை இறுக்கமின்றி ஆக்கிவிட்டிருக்கிறது. எனினும் இதுவரை வெளிவந்த நீதிமன்றம் தொடர்புடைய தமிழ்ப் படைப்புகளில் மங்களம் வேறுபட்டு நிற்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நன்றி : தினமணி
—-
பொன்னியின் செல்வன் (சுருக்கம்),(இளைஞர் பதிப்பு), கல்கி, ஆர்.கே.எஸ். புத்தகாலயம், 25, பந்தடி 1வது தெரு, மதுரை 625001, விலை 66ரூ.
2 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட மாபெரும் வரலாற்று நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். அந்த மகத்தான கதையை அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் படித்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 480 பக்கங்களில் சுருக்கி, இளைஞர் பதிப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள். கதையை சுருக்குவதில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார் ஆர்.கே.எஸ். மூலத்தின் சுவைகுன்றாமல் கல்கியின் எழுத்துக்களை மாற்றாமல் நூலை உருவாக்கியிருக்கிறார். பாராட்ட வேண்டிய முயற்சி. நன்றி: தினத்தந்தி 15/02/2012.