மணி மணி மணி! பணத்தை பெருக்கும் வழிமுறைகள்
கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன், டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 70
ஈரோட்டில் பிறந்த கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு. ராமானுஜன் வாழ்வில் நடைபெற்ற சுவையான, முக்கிய சம்பவங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. 33 வயதே வாழ்ந்த இந்த வாலிபரின் கண்டுபிடிப்புகள், கணக்கியலில் புரட்சியை, மறுமலர்ச்சியை நேரடியாக ஏற்படுத்தி உள்ளது. தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு.
—
துளிர்க்கும், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், 13, சிவப்பிரகாசம் சாலை, சுக்கான்ஸ் அப்பார்ட்மெண்ட்ஸ், தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 125
இந்த நாவலில் நெஞ்சைத் தொடும் சம்பவங்களும், நல்ல திருப்பங்களும் உள்ளன. விடாமல் படிக்கத் தூண்டுகிறது.
—
500 சைவ – அசைவ சமையல், சாந்தி தணிகாசலம், கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை – 16. விலை ரூ. 250
500 வகையான சைவ, அசைவ உணவுகளை தயாரிப்பதற்கு வழிவகை கூறும் புத்தகம். சமையல் குறிப்பு புத்தகங்களில் குறிப்பிடத்தக்க நல்ல புத்தகம்.
—
குழம்பிய கலங்கரை, ப. தயாநிதி, பல்லவி பதிப்பகம், 194, கண்ணா காம்ப்ளக்ஸ், மேட்டூர் சாலை, ஈரோடு – 11. விலை ரூ. 50
சிறு சிறு கவிதைகள் அடங்கிய சிறு நூல். “தீவுக்குள் திருடன், திரையில்லா பயணி” போன்ற ரசிக்கத்தக்க வரிகள்.
—
தமிழ்த்தேசிய எண் சுவடி, தொகுத்தவர்: அ.சி. சின்னப்பத்தமிழர், தமிழம்மா பதிப்பகம், 59, விநாயகபுரம், அரும்பாக்கம், சென்னை – 106. விலை ரூ. 25
தமிழின் தொன்மை எண்களை பயன்படுத்தி பெருக்கல், கூட்டல், கழித்தல் எப்படி கணக்கிட வேண்டும் என்று சொல்லித்தரும் நூல்.
—
2013 (ஸ்ரீநந்தன – ஸ்ரீவிஜய வருட) பஞ்சாங்கம், தொகுப்பாசிரியர்: இரா.இளையபெருமாள், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை – 1. விலை ரூ. 25
2013-ம் வருடத்திய இந்த பஞ்சாங்கத்தில், சுபமுகூர்த்த தினங்கள், கனவுகளுக்கான பலன்கள், வாஸ்து சாஸ்திரம், வீடு கட்டுவதற்கு உகந்த நாட்கள் முதலிய விவரங்கள் உள்ளன.
—
மணி மணி மணி! பணத்தை பெருக்கும் வழிமுறைகள், அனிதாபட், எழுத்தாக்கம்: பானுமதி அருணாசலம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 80
பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவது, மருத்துவ காப்பீடு, மியூச்சுவல் பண்ட், பங்கு சந்தை, தங்கத்தில் முதலீடு என பணத்தைப் பெருக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. அதில் எதையெல்லாம் நாம் தேர்ந்தெடுத்து நமது பணத்தைப் பெருக்கலாம் என விளக்கும் கட்டுரைகள். மிகவும் பயன்தரும். நன்றி: தினத்தந்தி 19.12.12