முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல்
முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல், ச. சாணக்கியன், தமிழ் மாணவர் பேரவை, 2, தெற்கு கணேசன் தெரு, ராஜீவ்காந்தி நகர், நெசப்பாக்கம், சென்னை 78, விலை 300ரூ.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம். முள்ளிவாய்க்காலில் நடந்தது. அப்போது இலங்கை ராணுவம் கையாண்ட அராஜகத் தாக்குதலால் மாண்ட தமிழர்கள் பல்லாயிரம் பேர், தமிழர்களின் பிணக்குவியல் மீது நின்றுகொண்டு ராணுவத்தினர் வெற்றி விழா கொண்டாடினர். முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை, நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், நூலாசிரியர் ச. சாணக்கியன். தமழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் படிக்கும்போது, கண்கள் குளமாகின்றன. தமிழர்களின் பிணங்கள் குவியல் குவியலாகக் கிடக்கும் படங்களைப் பார்க்கும்போது இதயமே பிளந்து விடும்போல் இருக்கிறது. முள்ளி வாய்க்காலில் சம்பவங்களுக்கு இப்புத்தகம் ஓர் ஆவணம்.
—-
நோய் தீர்க்கும் பழங்கள், சிவ. ஜெகஜோதி, அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜெகன்னநாத நகர், வில்லிவாக்கம், சென்னை 49, விலை 45ரூ.
நமது ஊரிலேயே எளிதாக கிடைக்கும் இயற்கை பழ வகைகளில் பல மருத்துவ குணங்கள் இருப்பதையும், அதில் இருக்கும் சத்துப்பொருட்கள் பற்றியும் இந்த புத்தகத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு பழத்திலும் சத்துப்பொருட்கள் எந்த அளவு உள்ளன? பழங்களை சாப்பிட வேண்டிய நேரம், பழங்களை எப்போது, ஏன் சாப்பிட வேண்டும்? என பல அரிய தகவல்கள் இந்த புத்தகத்தில் இருப்பது தனிச்சிறப்பு.
—-
லவ்வாலஜி, எஸ்.கே.முருகன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரு To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-836-6.html
காதலர்கள் செய்யக்கூடியது எவை? செய்யக்கூடாதவை எவை, காதலினால் வரும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் பிரச்சினைகள், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றை விவரித்து காதலில் தோல்வி அடையாமல் வளர்க்க பத்து உத்திகளை கூறி இருக்கிறார் ஆசிரியர் எஸ்.கே.முருகன். நன்றி: தினத்தந்தி, 30-1-2013.