ஒன்ஸ் அபான் ய டைம்

Once upon A Time, சேது, மொழிபெயர்ப்பு கே.டி. ராஜகோபாலன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 180ரூ. மலையாள நூலாசிரியர் சேது எழுதி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ எனும் புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நூல். மொழிபெயர்த்திருப்பவர் கே.டி.ராஜகோபாலன். குறிப்பாகத் தளங்கள் எதையும் புனையாவிட்டாலும், கேரளாவில் நடப்பதாக களங்கள் சித்தரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. கருத்து வேறுபாட்டால் கணவனைப் பிரிந்து மகளோடு வாழும் கதையின் நாயகி, ஒரு மாபெரும் கூட்டாண்மை நிறுவன குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியும்கூட. பெரும் போராட்டங்களுக்கு இடையே, […]

Read more

பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ.நீலன், அருள் பதிப்பகம், பக். 190, விலை 125ரூ. பிரம்மம் எது? என்று தேடும் தத்துவச் சிந்தனை கொண்ட நூல். சங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம் காட்டும், ‘பிரம்மம்’ பற்றிய வாதங்களைத் தொகுத்துள்ளார். தாளில் போட்ட வட்டத்தை அளக்கலாம். ஆனால், வானில் போட்ட வானவில்லை அளக்கும் முயற்சி தான் பிரம்மத்தை வரையறை செய்வது. ஆனாலும், தெளிவாக தேடி அறிய முயற்சித்துள்ளார். வினா – விடைப் பாங்கில் நூல் முழுவதும் ஆர்வமாக நகர்கிறது. ஆன்மா எது? பிரம்மம் எது? உலகம் […]

Read more

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு, தொகுப்பு டாக்டர் ஆர். வைத்தியநாதன், பக். 208, விலை 250ரூ. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் குரு பரம்பரையை வரிசைப்படுத்தி, வண்ணத்தாளில், உரிய படங்களுடன், அதற்கான தகவல்களுடன் இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் முனைவர் மட்டும் அல்ல பட்டயக்கணக்காளரும் கூட. வழிவழியாக இந்த மடத்தின் சீடர் கூட்டத்தில் பிரதானமானவர் என்பதை முன்னுரையில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காஞ்சி மாமுனிவர், அவரது அருளுரைகள் தாங்கிய, ‘தெய்வத்தின் குரல்’ தமிழகம் நன்கு பழகியதொன்றாகும். நம் நாட்டில் வேதநெறி தழைக்கவும், […]

Read more

பக்தி யோகம்

பக்தி யோகம், (ஸ்ரீமத் பகவத் கீதை 12வது அத்தியாயம்), மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜி), பக். 192, விலை 80ரூ. சனாதன தர்மம் எனப்படும் இந்து மத நெறியை, பகவத் கீதை பார்வையில் அழகாக விளக்கும் நூல். பக்தி நெறி மூலம் பழகும், இறையின் நாம கீர்த்தனமே உயிருக்கு ஆதாரமான உரமூட்டும் சிந்தனையை வளர்க்கும் என்ற பார்வையில், முரளிதர சுவாமிகள் பகவத் கீதையில் பக்தியோகத்தை தன் சொற்பொழிவுகளில் தெரிவித்த கருத்து, இங்கே அழகிய மாலையாக உருவாகியிருக்கிறது. பக்தியில் பிரகலாதன் போல அல்லது துருவன் போல […]

Read more

அறிஞர் அண்ணாவின் சுய முன்னேற்ற சிந்தனை

அறிஞர் அண்ணாவின் சுய முன்னேற்ற சிந்தனை, சாலமோன் மனுவேல், பக். 448, விலை 80ரூ. குமரி மாவட்டத் தமிழரின் படைப்பு இந்நூல். நூலின் முதல் 80 பக்கங்கள் அணிந்துரை, கருத்துரை, மதிப்புரை, என்னுரை, முன்னுரை என, தனி நூலளவுக்கு நீளுகிறது. அண்ணாவின் பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம், கல்வி, அரசியல், பேச்சுகள், எழுத்துகள் என்று தொடரும் நூலில், ஆங்காங்கே அண்ணாவின் சிந்தனைகளும், அவற்றில் சுய முன்னேற்றம் அடங்கி இருப்பதும் எழுதப்பட்டு உள்ளது. புத்தகங்கள் இல்லாத அறை ஆன்மா இல்லாத உடல். இதயத்தின் மகிழ்ச்சியே முகத்தின் மலர்ச்சி. […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 90, விலை 60ரூ. முழுநேர வாசகன் என்பது மிகவும் உயர்ந்த விஷயம் என்று இந்திய இலக்கியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார், க.நா.சு., வாழ்நாள் முழுவதும் படிப்பதிலேயே தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் அழகிய சிங்கர். சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட, 3,000 பக்கங்களுக்கு மேல் அவர் படித்த, 20 புத்தகங்களின் விபரங்கள் தான், ‘நீங்களும் படிக்கலாம்’ என்ற இந்த சிறிய நூல். எல்லாரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் தான் இவை. எஸ்.ராமகிருஷ்ணன் […]

Read more
1 6 7 8