தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில்

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 60ரூ. ஹைக்கூ என்று அழைக்கப்படும் நவீனகால சுருக்கமான கவிதைகள் எப்போது, எவ்வாறு தோன்றியது? கடந்த நூறு ஆண்டுகளில் ஹைக்கூ எவ்வாறு தனது பயணத்தை வரலாற்றில் தடம் பதித்தது? ஹைக்கூ தமிழில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்று அனைத்தையும் விரிவாக அலசி ஆய்ந்து, ஹைக்கூக்களின் பொக்கிஷமாகத் தந்து இருக்கிறார், கவிஞர் மு.முருகேஷ். அவரை கவர்ந்த 100 ஹைக்கூ கவிதைகள் படித்து சுவைக்கத் தகுந்தவை. நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

பாலம்

பாலம், பி. வெங்கட்ராமன் சிறப்புமலர், விலை 20ரூ. 16 வயதில் பத்திரிகை ஆசிரியர்! “பாலம்” கல்யாணசுந்தரனார் நடத்தும் “அன்பு பாலம்” பத்திரிகை, “பி.வெங்கட்ராமன் சிறப்பு மலர்” வெளியிட்டுள்ளது. யார் இந்த வெங்கட்ராமன்? சுதந்திரத்துக்குப் பின், புதுக்கோட்டையில் இருந்து புற்றீசல் போல் குழந்தைகளுக்கான பத்திரிகைகள் புறப்பட்டன. பாலர் மலர், டமாரம், சங்கு, சுதந்திரஜோதி, டிங் டாங் என்பவை அவற்றில் சில. “டிங் டாங்” பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் 16 வயது மாணவர் பி. வெங்கட்ராமன்! தமிழ்நாட்டில் மிகக் குறைந்த வயதில் பத்திரிகை ஆசிரியர் ஆனவர் இவர்தான். […]

Read more

எப். எம். ரேடியோ புகழ் யாழ் சுதாகர் கவிதைகள்

எப். எம். ரேடியோ புகழ் யாழ் சுதாகர் கவிதைகள், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. இலங்கையில், யாழ்ப்பாணத்தில் பிறந்த யாழ் சுதாகர் தமிழ்நாட்டில் குடியேறி, “எப்.எம்.” ரேடியோ ஒன்றில் இசைப்பாடல்களைத் தொகுத்து வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகிறார். அவர் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்பதை, இந்த நூல் மூலம் நிரூபித்திருக்கிறார். அதைவிட ஒரு சிறப்பு இந்த நூலுக்கு இருக்கிறது. “என்னுரை” என்ற தலைப்பில், யாழ் சுதாகர் தன்னைப் பற்றி எழுதியுள்ள குறிப்புதான் அது. ஒரு சிறந்த சிறுகதையைப்போல் அது உள்ளது. புகழ் பெற்ற ஒரு […]

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு

வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், விலை 350ரூ. தமிழ்நாட்டின் வரலாற்றை ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார், தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் தமிழ் புகழேந்தி. தமிழ் உணர்வுடன் இந்த நூலை அவர் எழுதியிருப்பது பாராட்டுக்கு உரியது. உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்தான் என்று உறுதிபடக் கூறுகிறார். “உலகில் முதன் முதலில் மனிதன் தோன்றியது தென்னிந்தியாவில்தான்” என்று சர்ஜான்ஸ் இவான்ஸ் என்ற மேல்நாட்டு அறிஞர் கூறியுள்ளதை எடுத்துக்காட்டுகிறார். “குமரிக்கண்டம் (லெமூரியா) கடலில் அமிழ்ந்தபோது, அதில் வசித்த மக்கள் எட்டுத் […]

Read more

ஸ்ரீ ராகவேந்திர மகிமை

ஸ்ரீ ராகவேந்திர மகிமை, அருள்மிகு அம்மான் பதிப்பகம், விலை 280ரூ. அம்மன் சத்தியநாதன் எழுதிய “ஸ்ரீராகவேந்திர மகிமை” நூலின் பத்தாம் பாகம் வெளிவந்துள்ளது. இந்த வரலாற்று நூல் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதில் இருந்தே இதன் சிறப்பை அறிந்துகொள்ளலாம். 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த மாபெரும் வரலாற்று காவியத்தை சிறப்பாக எழுதியுள்ள அம்மான் சத்தியநாதன் பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல்

தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல், தமிழில் நா.முருகேசன், சாமிநாதன் பதிப்பகம், விலை 200ரூ. இந்த நூலில் எழுதப்பட்ட திட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள், அணுகுமுறைகள் யாவற்றிற்கும் உந்து சக்தி “அம்மா” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ஜெயலலிதாவே ஆவார். அம்மாவை மையப்படுத்தியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வளர்ச்சி, நல்வாழ்வு, நலத்திட்டங்கள், மிகச்சிறந்த ஆட்சி முறை என்ற தலைப்பின் கீழ் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில், அம்மாவின் வாழ்க்கைக் குறிப்பும், தமிழ்நாடு பற்றிய புள்ளி விவரங்கள், 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது போன்றவை தரப்பட்டுள்ளன. சாதனை என்பது அவரவர் […]

Read more

இலக்கியத்தில் இன்பரசம்

இலக்கியத்தில் இன்பரசம், க. முத்துநாயகம், தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ. இலக்கியம் என்றவுடன் பயந்துவிட வேண்டாம். எல்லோரும் படிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த புத்தகம்.அதில் இருந்து சில இனிய காட்சிகள். காதல் வயப்படுகிறவர்களுக்கு முதலில் தொலைந்து போவது, தூக்கம்தான்.காதலியை நினைத்து ஒரு இளைஞன் இரவெல்லாம் தவிக்கிறான். அவளை தேடிச்சென்று கட்டித் தழுவ நினைக்கிறான்.இயலவில்லை. அவன், “மீன் உறங்கும் நேரம்கூட கண் உறங்கவில்லை”யாம்! ஒரு காதலன் தவிப்புக்கு எவ்வளவுஅற்புதமான உவமை! ஒரு புதுப்பெண், கட்டித் தயிரை கையால் பிசைகிறாள். பின் புடவையில் துடைத்துக் கொள்கிறாள்.அந்த […]

Read more

முதுமை இனிமை

முதுமை இனிமை, பேராசிரியர் ச. வின்சென்ட், பன்முகம், பக். 80, விலை 80ரூ. முதுமை தவிர்க்க முடியாதது. முதுமையை ரசிக்கும் பண்பை கொண்டிருந்தால், முதுமையை வெல்லலாம் என, இந்த நூலில் பல உதாரணங்களை காட்டி அழகாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். முதுமையின் தனிமையிலிருந்து தப்பிக்க, குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், நகைச்சுவை வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் முதுமையை மறக்கச் செய்யும் என விளக்கியிருப்பது வித்தியாசமாக இருக்கிறது. முதுமையில் உடல் நலம் பேணுவதில் அக்கறை காட்டுவதன் அவசியத்தை, கதைகளுடன் விளக்கியிருப்பது, நூலைப் படிக்க அலுப்பு தட்டாமல் […]

Read more

நான் ப்ரம்மம் (முதல் பகுதி)

நான் ப்ரம்மம் (முதல் பகுதி), மராத்தி ஒலிப்பதிவுகள், ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், ஆங்கிலத்தில் மோரிஸ் பிரைட்டன், தமிழில் சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப் பெரும் ஞானிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர் ஸ்ரீ நிசர்கத்த மஹராஜ். மஹாராஷ்டிராவில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மாருதி என்பதே இயற்பெயர். திருமணம் செய்து கொண்டு (ஒரு மகன், மூன்று மகள்கள்) சிறு வியாபாரம் செய்வதன் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவருக்கு, ஸ்ரீசித்தராமேஷ்வர் மஹராஜ் என்ற ஆன்மிக குரு […]

Read more

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கா. அப்பாதுரை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 352, விலை 200ரூ. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம். இதன் வரலாற்றை ஆய்ந்து, ‘1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலாக வி.கனகசபை ஆங்கிலத்தில் எழுதினார். இதைப் பழகு தமிழில் பன்மொழிப் பாவலர் பேரறிஞர் க.அப்பாதுரையார் இந்த நூலில் தந்துள்ளார். பழமைக்குச் சான்றளிக்கும் சங்கப் புலவர்களின் பாடல்கள் ஆராயப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கூறும் மகத நாட்டுச் சதகர்ணியும், இலங்கைக் கயவாகு […]

Read more
1 5 6 7 8