நிலத்தின் மீதான போர்

நிலத்தின் மீதான போர், தேனி மாறன், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, விலை: ரூ.60. ஹைட்ரோகார்பன் திட்டம் , எட்டு வழிச் சாலை திட்டம், மீத்தேன் திட்டம் என அரசின் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர் என இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் தங்கள் நிலங்களின் மீது கார்ப்பரேட்டுகள், அரசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் போரை மக்கள் வலுவான குரல் எழுப்பி […]

Read more

குறுந்தொகை மூலமும் உரையும்

குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர்.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, விலை: ரூ.500. தமிழர்கள் பண்பாட்டின் முக்கியமான விளைச்சல் குறுந்தொகை. அந்த நூலை 1937-ல் உ.வே.சாமி நாதையர் பதிப்பித்தார். அதற்கான காலத்துக்கேற்ற செம்பதிப்பை சமீபத்தில் உ.வே.சா. நூல் நிலையம் கொண்டுவந்திருக்கிறது. காதலைப் பாடும் சங்கப் பாடல்கள் ஊடாக, தமிழரின் வாழ்க்கை முறையையும் இந்த நூலில் உணர முடிகிறது. குறிப்பாக, இலக்கியத்தோடும் வாழ்க்கையோடும் இயற்கை எந்த அளவுக்கு ஊடாடுகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தமிழ் இந்து, 07.01.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030465_/ இந்தப் […]

Read more

காயமே இது மெய்யடா

காயமே இது மெய்யடா, போப்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160. நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 21.12.2019. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030466_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சிறார்களுக்கான அறிவியல்

சிறார்களுக்கான அறிவியல்,சயின்ஸ் விக்னெட்ஸ், ஜந்தர் மந்தர்,சயின்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.110. சிறுவயதில் இருந்தே அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ‘துளிர்’ என்ற மாத இதழின் மூலம் 1987முதல் தமிழகச் சிறார்களுக்கு பெரும் சேவையாற்றிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆங்கிலம் வழி பயிலும் மாணவர்களையும் கணக்கில்கொண்டு 1993-ல் ‘ஜந்தர் மந்தர்’ என்ற ஆங்கில மாத இதழும் வெளிவரத் தொடங்கியது. அவ்விதழின் வெள்ளிவிழாவை ஒட்டி வெளியாகியுள்ள இச்சிறப்பு மலர் பொது அறிவு கேள்வி-பதில், வேதியியல், புவியியல், வானியல் என அறிவியலின் பல்வேறு புதிர்களை அவிழ்க்கும் […]

Read more

தொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்

தொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார், கே.சுப்ரமணியன், வெளியீடு: ஏஐடியுசி, (சரோஜினி பதிப்பகம் மூலமாக),விலை: ரூ.80. கட்டற்ற வேலை நேரம், அன்றாட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உழன்றுகொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ 1918 ஏப்ரல் 27-ல் உருவானது. திரு.வி.க., சிங்காரவேலர், வ.உ.சி., பி.பி.வாடியா ஆகியோர் முன்முயற்சியில் சென்னையில் தொடங்கப்பட்டபோது, அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வழக்கறிஞரான சக்கரைச் செட்டியார். தன் வாழ்நாள் முழுவதையுமே தொழிலாளர் நலன் காக்க, தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார் அவர். பஞ்சாலை, மின்னுற்பத்தி – விநியோகம், மண்ணெண்ணெய் […]

Read more

நீலகண்டம்

நீலகண்டம், சுனில் கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம், விலை ரூ.270. மிலன் குந்தேராவின் சொற்களில், ‘நாவல் என்பது ஆசிரியரின் வாக்குமூலம் அல்ல; எலிப்பொறியாக மாறிவிட்ட இன்றைய உலகத்தில், மனித வாழ்க்கை மீதான விசாரணை’. துளி அமுதமும் நிறைய விஷமுமாக இறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையின் மீதான விசாரணையாக விரிகிறது சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் ‘நீலகண்டம்’. காதல் திருமணம், குழந்தைக்கான தவிப்பு, பெண் குழந்தையைத் தத்தெடுப்பது, ஆட்டிஸம் பாதித்த அந்தக் குழந்தையை வளர்ப்பதன் துயர சாகசம் – இதையெல்லாம் ஒற்றை வரிசையில் அல்லாமல் பல்வேறு முனைகளில், பல்வேறு […]

Read more

சூரிய வம்சம்

சூரிய வம்சம் (இரண்டு பகுதிகள்), சிவசங்கரி, பதிவு – எழுத்து: ஜி.மீனாட்சி, வானதி பதிப்பகம், விலை: ரூ.600. நினைவை மீட்டுவதென்பது காலச் சக்கரத்தில் ஏறிப் பின்னோக்கிப் பயணித்து மீள்வதைப் போன்றது. ‘சூரிய வம்சம்’ நினைவலைகளின் மூலம் அதை நிகழ்த்துகிறார் சிவசங்கரி. வாழ்க்கை சுரத்தில்லாமல் நிறமிழக்கும் நேரத்தில், மலர்ந்து சிரிக்கிற வசந்தத்தைப் போல எழுத்துலகில் புதுப் பாய்ச்சலுடன் புகுந்தவர் அவர். மானசீகமாகத் தன்னை அம்மாவாக ஏற்றுக்கொண்ட லலிதாவுக்காகத் தன் நினைவலைகளைத் தொகுத்திருக்கிறார். இது சுயசரிதை அல்ல என்று சொல்லும் சிவசங்கரி, சிலரது முகமூடிகளைக் கிழிக்க வேண்டிவரும், […]

Read more

கடவுள் சந்தை

கடவுள் சந்தை, மீரா நந்தா, தமிழாக்கம்: க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு, விலை ரூ.300. மூடநம்பிக்கை, பேராசை, அதிகார வேட்கையைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கடவுள்களையும் ஆன்மிகத்தையும் சரக்காக விற்பனை செய்யும் ‘நவீன மோஸ்தர்’ சாமியார்கள் பெருகிவருகின்றனர். அவர்கள் ஈட்டும் பரிவர்த்தனை மதிப்பில் 99%-ஐத் தங்கள் ‘ஆன்மிகக் கூடங்களில் பதுக்கி வைத்துக்கொள்ளவும், தொழில், வணிகத்தில் முதலீடு செய்துகொள்ளவும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் உதவுகிறார்கள். மக்களின் மத உணர்வு, மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களது வாக்குகளைப் பெற இந்த நவீன ஆன்மிகவாதிகள் துணைபுரிகிறார்கள்.இந்தியாவிலுள்ள முக்கிய ஊடகங்களும் […]

Read more

நிலமடந்தைக்கு

நிலமடந்தைக்கு, நரோலா, தடாகம் வெளியீடு, விலை: ரூ.100. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை நிலவுரிமை பெறுவதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தம்பதியர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இளமைக் காலம் தொடங்கி இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் வரை என அவர்களுடைய எழுபதாண்டு கால சமூக வாழ்க்கையைச் சுருக்கமாக அறிந்துகொள்வதற்கான புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து, 01.02.2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழகத் தடங்கள்

தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை, விலை: ரூ.300. ஒரு பத்திரிகையாளராகத் தமிழகம் முழுக்க மேற்கொண்ட பயணங்களின் வழியே கிடைத்த கள யதார்த்தங்களைக் கட்டுரையாக்கியிருக்கிறார் மணா. ஏற்கெனவே 40 கட்டுரைகளோடு வெளிவந்த புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பு இது. ‘சாம்பல் நத்தம்’ தொடங்கி ‘கீழடி’ வரை என 75 இடங்களின் தொகுப்பாகப் பதிவாகியிருக்கும் இந்தக் கட்டுரைகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்ட வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 08.02.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000000330_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 9