நடைவழி நினைவுகள்

நடைவழி நினைவுகள், சி.மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175. சி.மோகன் தனது ஐம்பது ஆண்டு கால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவருக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். புதிதாக வாசிப்புக்குள் வரும் ஒருவருக்கு 16 எழுத்தாளர்களைப் பரந்த தளத்தில் அறிமுகப்படுத்தும் நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 14.03.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030470_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!, கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.190. உடல்நிலையில் தோன்றும் பிரச்சினைகளுக்கு, மருத்துவ சந்தேகங்களுக்கு எங்கே பதில் கிடைக்கும் என்று தேடுவோம். அப்படிப் பரவலாகவும் பொதுவாகவும் தோன்றும் மருத்துவப் பிரச்சினைகளுக்கு பதில் தரும் புத்தகம் இது. ஆரோக்கியம் காக்கும் பதில்களை வழங்கியவர் பிரபல மருத்துவரும் மருத்துவ எழுத்தாளருமான கு.கணேசன். கேள்வி-பதில் பாணியில் அமைந்திருக்கும் இந்நூல் வாசகர்களை மருத்துவ அறிவு பெற்றவர்களாக மாற்றிவிடும். நன்றி: தமிழ் இந்து, 21.12.2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை

தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை, ஜெ.ஜெயரஞ்சன், மின்னம்பலம் வெளியீடு, விலை: ரூ.180. காவிரிப் படுகையில் நில உடைமையாளர்களின் ஆதிக்கம் எவ்வாறு தகர்ந்தது என்பதைப் பற்றிய பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சனின் ஆழமான ஆய்வுப் புத்தகம்தான் ‘தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை’. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமான உணவுத் தேவையில் காவிரிப் படுகையின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். காவிரிப் படுகையின் உணவு உற்பத்தியில் காலங்காலமாக நமக்காக உழைத்துக்கொண்டிருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் நிலையையும், நிலமற்ற விவசாயிகளின் குத்தகை முறைகளையும், இவர்கள் மீதான நிலப்பிரபுக்களின் உழைப்புச் சுரண்டலையும் பற்றிய ஆழமான […]

Read more

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள்

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள், பகுதி 1,  ப.மருதநாயகம், எழிலினி பதிப்பகம்,  விலை: ரூ.350. ஆங்கிலத்தின் வாயிலாகவே தமிழில் நாவல் வடிவம் அறிமுகமானது. ஆனால், தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனங்களில் மேலை இலக்கியக் கோட்பாடுகளையெல்லாம் பொதுவாகக் கவனத்தில் கொள்வதில்லை. ரசனை அடிப்படையே நாவல்களின் தரம், குணம் யாவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழ்-ஆங்கில இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான ப.மருதநாயகத்தின் இந்த நூல், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி தற்காலம் வரையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல் படைப்புகளை மேலை இலக்கியக் கோட்பாடுகளின் பார்வையில் திறானாய்வு செய்யும் முயற்சி. […]

Read more

ஓவியம் தேடல்கள் புரிதல்கள்

ஓவியம், தேடல்கள், புரிதல்கள், கணபதி சுப்பிரமணியம், யாவரும் பதிப்பகம்,  விலை: ரூ.350. ஓவியரும் ஓவியத்தைப் பற்றி எழுதும் மொழியைக் கொண்டவருமான கணபதி சுப்பிரமணியம், சுயமுயற்சியில் ஓவியம் பயின்றவர். உருவப் படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, அனிமேஷன் என்று தொடங்கி மெய்சாரா ஓவியங்களில் நிலைகொண்டு தற்போது பூனைகளைக் கீற்றிவருகிறார். இவர் எழுதி சமீபத்தில் ‘யாவரும் பதிப்பக’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஓவியம்: தேடல்கள், புரிதல்கள்’ புத்தகமானது ஓவிய மாணவர்களுக்கும் ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் மிக முக்கியமானது. நன்றி: தமிழ் இந்து, 04.04.2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மனசு போல வாழ்க்கை 2.0

மனசு போல வாழ்க்கை 2.0, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.150. மனம் குறித்த அலசல் கட்டுரைகள், கேள்வி-பதில் பகுதியின் தொகுப்பே இந்தப் புத்தகம். இதைப் படிக்கும் வாசகருக்குத் தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் உதவும். நன்றி. தமிழ் இந்து. 04.04.2020 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030478_/ இந்தப் […]

Read more

‘ஒரு’வில் தொடங்கும் கதைகள்

‘ஒரு’வில் தொடங்கும் கதைகள், தமிழக நாட்டுப்புறக் கதைகள், முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பக வெளியீடு, விலை: ரூ.250. ஒரு ஊரிலே’ என்று தொடங்கும் கதைகள் நவீன இலக்கியத்தில் தேய்வழக்காகிவிட்டன. ஆனால், கிராமத்திலே தாத்தா, பாட்டிகளிடம் கேட்ட அப்படியான கதைகளுக்கு ஒரு தனி ருசி உண்டு இல்லையா? சின்னச் சின்ன நாட்டுப்புறக் கதைகள் இருநூறைத் தொகுத்துப் படங்களுடன் பதிப்பித்திருக்கிறார் முல்லை பிஎல்.முத்தையா. இந்தக் கதைகளிலே நீதி போதனை உண்டு. கிராமத்துக்கே உரிய நிறைய நகைச்சுவை உண்டு. நிறைய தந்திரங்கள் இருக்கின்றன. கதைசொல்லும் பாட்டிகளையும் தாத்தாக்களையும் நாம் […]

Read more

சிறுகதை என்னும் கலைவடிவம்

சிறுகதை என்னும் கலைவடிவம், காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி வெளியீடு,  விலை : ரூ.300. சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய மேதமைகள் பல்வேறு சோதனைகளை நிகழ்த்திப் பார்த்து வெற்றிகண்ட வடிவம் தமிழ்ச் சிறுகதை வடிவமாகும். சிறுகதை வரலாறு, எழுத்துப் போக்குகள், இயக்கங்கள் அடிப்படையில் இருபது சிறுகதை ஆசிரியர்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் காண்பிப்பதாக உள்ளன. தமிழ்ச் சிறுகதைகளில் சாதனை நிகழ்த்திய புதுமைப்பித்தன், மௌனி, கு. ப.ரா, ந.பிச்சமூர்த்தி ஆகிய முதல் தலைமுறையினர் […]

Read more

கதைகளின் கடல்

கதைகளின் கடல், கதா சரித் சாகரம்.சோமதேவர், தமிழில்: வே.ராகவன், செம்பதிப்பு: கால சுப்ரமணியம், தமிழினி வெளியீடு, விலை: ரூ.170. மத்திய கிழக்கு நாடுகள் கதைகளின் உலகத்துக்கு அளித்த கொடையாக ‘ஆயிரத்தொரு இரவுக’ளைக் கூறினால் இந்தியா அளித்த கொடையாக ‘கதா சரித் சாகரம்’ நூலைக் கருத வேண்டும். 11-ம் நூற்றாண்டில் காஷ்மீரைச் சேர்ந்த சோமதேவர் சம்ஸ்கிருதத்தில் இயற்றியது இந்த நூல். 22 ஆயிரம் பாடல்களால் ஆனது இந்த நூல். இந்தியாவில் உலவும் பல நூறு கதைகளுக்கான மூலம் இந்தப் புத்தகம். இந்த நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா பதிப்பகம், விலை: ரூ.1000. பத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில […]

Read more
1 2 3 4 5 9