பண்டைக்கால இந்தியா

பண்டைக்கால இந்தியா,  எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.எஸ்., புக்ஸ் வேர்ல்டு, விலை ரூ.230. இரண்டாம் உலகப்போரின் உச்சமான ஸ்டாலின்கிரேட் போர்க்களத்தில், கடுமையான வான்வழி குண்டுவீச்சுகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, எரவாடா சிறையில், 1942 -வாக்கில் பெரும்பான்மையான பகுதி எழுதப்பட்டதாகக் கூறப்படும் நுாலின் மறுபதிப்பே இந்நுால்.பண்டைக்கால இந்தியாவில் குடும்பங்கள், தனியுடைமைப்போக்கு, வர்க்கங்கள், அரசு போன்றவற்றின் தோற்றத்தை விவாதிக்கிறது.  பண்டைக்காலச் சுவர்கள், அகழிகள் பதுக்கி வைத்திருந்த வரலாற்றுத் தடயங்கள், பண்டைய மக்களின் கோரைத்தாள்கள், இலைகள் போன்றவற்றிலும் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டன. ஆயினும், இந்தியாவைப் பொறுத்தவரை ஏராளமான அன்னிய படைெயடுப்புகளும், தொடர் போர்களும், ஆட்சி […]

Read more

பொருளிலக்கணக் கோட்பாடு, உவமவியல், தொல்காப்பியம்

பொருளிலக்கணக் கோட்பாடு, உவமவியல், தொல்காப்பியம்,  செ.வை. சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை ரூ.240. உவமையும் உருவகமும் சாதாரண மக்களின் பேச்சில் மிகவும் இயல்பாக வெளிப்படும். ‘அவன் மனது ஒரு கல்லு’ எனச் சொல்லும் தொடரில், மனதைக் கல்லாக உருவகப்படுத்துவதைக் காண முடியும். ‘மலை போல் வந்த துன்பம் எல்லாம் பனி போல் விலகி விடும்’ என்னும் உவமைத் தொடரையும், வேறு உவமைத் தொடர்களையும் சாதாரண மக்கள் மிகுதியாகப் பயன்படுத்துவர். சாதாரண மக்களின் மனதில் இயல்பாகப் பதிந்து விட்ட இந்த உவமை பற்றித் […]

Read more

அன்று ஆறு ஆறாயிருந்தது

அன்று ஆறு ஆறாயிருந்தது,  நா.நாகராஜன், காவ்யா, விலை ரூ.110. கலை, இலக்கியம், சமூகம் பற்றிய தன் அனுபவப் பிழிவுகளைத் தருகிறார் நாகராஜன். ஆயிரம் பூக்கள் மனதில் என்றொரு கட்டுரை. கல்லுாரியில் படிக்கின்ற காலத்திலேயே கவிதைகள் பிடிக்கும் எனக்கு. இரண்டு பக்க சிறுகதையில் சொல்ல முடியாத விஷயத்தை இரண்டே வரிகளில் நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லி, கைத்தட்டு வாங்க கவிதைக்கு தான் முடியும்… ஆயிரம் கவிதைகள் வாசித்தால், ஆறு கவிதைகள் தான் மனதில் நிற்கும். ஆனாலும் கவிதை இன்பம் நாடி, வாசிப்பை விட முடியவில்லை என்கிறார் கட்டுரையாளர். […]

Read more

உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய்,  இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை ரூ.180. ‘உன்னுள் யுத்தம் செய்’ என்னும் நுாலின் மூலம் அறிமுகமான இரா.திருநாவுக்கரசு, ‘தன்னிலை உயர்த்து’ என்னும் தலைப்பில், இளைஞர் மணி மற்றும் ‘தினமலர், தினத்தந்தி’ நாளிதழ்களில் எழுதி வருகிறார். மனதை ஒருமுகப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகும் என்ற கருத்தை முத்து பேராசிரியர், யஸ்வந்த், கணேசன் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் தந்திருக்கிறார். அனுமன் போன்ற இதிகாசப் பாத்திரங்கள் மூலமும் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது இந்நுால். காலையில் கண் விழித்ததும், நேர்மறை எண்ணங்களை மாணவர்களுக்குத் தேவையான விதத்தில் பதிய […]

Read more

நிலவென வாராயோ!

நிலவென வாராயோ!,  வரலொட்டி ரெங்கசாமி,  தாமரை பிரதர்ஸ், விலை ரூ.300. அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார், நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. கதை மாந்தர்களின் பெயர்கள் அனைத்தும், அன்னையின் பல்வேறு பெயர்களைத் தாங்கியே நடைபயணிக்கிறது. காதல், பாசம், அன்பு, நேசம், கோபம், வேதனை, கசப்பு கலந்த உணர்வு குவியலாய் எழுத்துக்கள் படைக்கப்பட்டுள்ளது சிறப்பு.  வாழ்வின் எதார்த்தங்களை எழுத்தோட்டமாய் கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். புத்தகம் முழுதும் அன்னையை தவழவிட்டு,உலவவிட்டு, ‘நிலவென வாராயோ’ […]

Read more

திருக்கயிலாய தரிசனம்

திருக்கயிலாய தரிசனம்,  டி.கே.எஸ். கலைவாணன்,  வானதி பதிப்பகம், விலை ரூ.125. உச்சியில், 22 அடி உயரம் கொண்ட இடத்தில் சிவபெருமான் உறைந்துள்ளதாகப் புராணங்கள் குறிப்பிடும். வெள்ளிப் பனிமலையில் சிவன் வீற்றிருப்பதாக எண்ணுவோர், திருக்கயிலாய நாதரைக் காண்பதற்குப் புனிதப் பயணம் செய்வது அரிய செயல். கடல் மட்டத்திலிருந்து, 23 ஆயிரம் அடி உயரம் கொண்ட திருக்கயிலாயப் பயணம் என்பது எல்லாருக்கும் கிட்டிவிடாது. இம்மலையைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஞானிகளின் கூற்று. இப்புனிதத் தலத்தைக் கண்டு வந்து, தாம் பெற்ற அனுபவத்தை இந்நுால் வழியாக நமக்கு […]

Read more

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ், மு.பி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், விலை  ரூ.200. தமிழ்மொழி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தன்னைப் புதுப்பித்து, புத்துணர்வோடு பயணித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய அளவிலும் எல்லா வடிவத்திலும் எள்முனையளவும் குறையின்றி, எங்கெங்கும் தமிழ்மொழி கொண்டாடப்பட்டு வருகிறது என்பதே தனிச்சிறப்பு. தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்திலும் கருத்தரங்குகள், மாநாடுகள், தமிழர் பண்பாட்டுத் திருவிழாக்கள் எனப் பல்வேறு தளங்களில் தமிழ் பரவிப் படர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால், இடைப்பட்ட காலத்தில் தமிழ் தன் மித வளர்ச்சியான காலங்களைக் கடந்து வந்தபோது, 19ம் நுாற்றாண்டு […]

Read more

நீதிக் கதைகள்

நீதிக் கதைகள்,  சுவாமி கமலாத்மானந்தர், வெளியீடு: ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், விலை ரூ.70. இந்நுாலில், ‘10 ரூபாய் பெறாத சிலை ஒன்றை, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய கலைப்பொருள் ஆர்வலர் முட்டாள்’ என்று நினைத்துக் கொண்டார் உழவன். ‘விலை மதிக்க முடியாத இந்த செப்புச் சிலையை வெறும், 10 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்த உழவன் முட்டாள்’ என்று நினைத்துக் கொண்டார் கலைப்பொருள் ஆர்வலர் என, ஒரு கதை தெரிவிக்கிறது. இரு வேறு மனநிலையை சிறுவர்களின் மனதில் பதிய வைக்கும் வகையில், இந்த கதை […]

Read more

திருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்

திருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்,  செந்தமிழருவி, சிவாணி பதிப்பகம், விலை ரூ.150. சங்க காலத் தமிழர்கள் வழிபட்ட தெய்வங்களுள் முதன்மையானவர் முருகப்பெருமான். குறிஞ்சி நிலத் தலைவன் குமரவேள் என்கின்றன, சங்க நுால்கள். நக்கீரரின் திருமுருகாற்றுப்படையே முருகன் மீது பாடப்பட்ட முதல் பாமாலை எனலாம். கந்த கடவுளை சொந்த கடவுளாய் வைத்து வழிபடுவது, ‘கவுமாரம்’ என்ற சமயம் ஆகும். திருவேலிறைவனை தித்திக்கும் தேனாய் திருப்புகழ் அருளிய அருணகிரியார். அவர் பாடிய திருப்புகழ் பதினாறாயிரம் எனக் கருதப்படுகிறது. ஆனால், கால வெள்ளம் அடித்துச் சென்றது போக மீதமுள்ள, […]

Read more

குருதியுறவு

குருதியுறவு, கமலதேவி,  வாசக சாலை பதிப்பகம், பக். 126, விலை ரூ.130.  ‘குருதியுறவு’, ‘பிம்பங்கள் அலையும் வெளி’, ‘ஊசல்’, ‘பூ முள்’, ‘ஒரு பந்தலின் கீழ்’ உள்ளிட்ட 17 சிறுகதைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றன. வட்டார வழக்கு மொழிநடையில் அமைந்திருப்பதால் சில கதைகளை ஒருமுறைக்கு இருமுறை படித்து அனுபவிக்க வேண்டும். பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் அழைத்துச் செல்லும் புலவர் கபிலர் வரும் ‘குன்றத்தின் முழு நிலா’ கதையில் முல்லைக் கொடி மீது […]

Read more
1 3 4 5 6 7 9