தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், சாத்தான்குளம் அ.இராகவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.168, விலை ரூ.150.  பண்டைக்காலத்தில் இந்தியாவுக்குத் தெற்கே, இந்து மகாசமுத்திரத்தில் பூமியின் நடுக்கோடு வரை பரவிக் கிடந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு சாவக நாடு. அது தமிழகம் அல்லது லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாகும். கடல்கோள்களால் இந்நிலப் பரப்பின் பெரும்பகுதி அழிந்தது போக, சிதறுண்ட தீவுகளில் ஒன்றாக இன்றைய சாவகத் தீவு (ஜாவா) உள்ளது. இத்தீவு பண்டைய தமிழகத்தின் தொடர்ச்சி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல சான்றுகள் […]

Read more

வள்ளுவர் காட்டும் உவமைகள்

வள்ளுவர் காட்டும் உவமைகள்,  பு.சி. இரத்தினம்,  மணிமேகலை பிரசுரம், விலை 90ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு இல்லாத சிறப்புகளே இல்லை எனலாம். ஏழு சீர்களில், உலகமே வியக்கும் படியான பல கருத்துகளைக் கூறியுள்ள நுால் திருக்குறளாக இருப்பதால், பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீரிய கருத்துகளைக் கூற வந்த திருவள்ளுவர், அக்கருத்தை மேலும் தெளிவாக உணர, பல உவமைகளையும் கூறி விளக்குகிறார். உவமைகள் பாடல்களுக்கு மேலும் அழகு தருவதால், அவை அணிகளாகின்றன. பிறருக்கு உதவி செய்பவரிடம் உள்ள செல்வம், ஊர் நடுவே பயன்மரம் பழுத்தது போல […]

Read more

தேசத் தந்தை மகாத்மா காந்தி

தேசத் தந்தை மகாத்மா காந்தி,  இராம.மெய்யழகன்,  ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 200ரூ. இன்றைய உலகிற்கு ஏற்ற விதை புத்தகங்கள். அந்த வகையில், ‘தேசத் தந்தை மகாத்மா காந்தி’ என்ற புத்தகம், இன்று மற்றும் நாளைய எதிர்கால மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இருக்கும்.இப்புத்தகம் காந்தியடிகளின் பிறப்பு முதல், இறப்பு வரையில் உள்ள வாழ்க்கை வரலாறு, காந்தியடிகள் பெற்றோரின் நன்னடத்தையைப் பார்த்து, அதைப் போலவே தன்னுடைய வாழ்க்கை நெறிமுறைகளையும் அமைத்துக் கொண்டார். மகான் அவருடைய மனைவியை மதிப்பும், மரியாதையுடனும் நடத்தினார். அஹிம்சையின் மூலம் தன் […]

Read more

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, ஆசிரியர் : மு.நீலகண்டன்,  கனிஷ்கா புத்தக இல்லம், விலை160ரூ. பரந்து காணப்படும் பவுத்த சமய வரலாற்றில், ‘கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு’ என்ற பகுதியை எடுத்து, ஆசிரியர் நீலகண்டன் கொங்கு நாட்டில் பவுத்த மத வளர்ச்சியை சிறப்பாகவும், மிக நுணுக்கமாகவும் காட்டியுள்ளார். புத்தரது பெயரைக் கொண்ட புலவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்தனர் என்பதையும் இவரது நுாலின் மூலம் அறியலாம். கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக அழைக்கப்படும் கரூர் என்னும் கருவூர்ப் பற்றியும், கரூரில் வாழ்ந்த சங்கப் […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, ஆசிரியர் : இரா. மோகன், வெளியீடு: வானதி பதிப்பகம், விலை 150 ரூ. மூல நுாலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அணிந்துரைகள் ஏற்படுத்தும். ஏற்றுக்கொண்ட நுாலின் ரசமான பகுதிகளை ஆசிரியர் குறிப்பிடுவது நேர்த்தியானது. மு.வ.,வின் செல்லப் பிள்ளை’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அழைக்கப் பெறும் இரா.மோகன், சாகித்ய அகாடமிக்காக எழுதிய கு.ப.ராஜகோபாலன், கல்கி, முடியரசன், மீரா குறித்த ஆய்வு நுால்கள் எல்லாம் தனிப் பெரும் சாதனை எனச் சொல்லலாம். அணிந்துரை அணிவகுப்பு என்ற இந்த நுாலிலும் ஆழம் […]

Read more

சிந்தனை, செயல், வெற்றி

சிந்தனை, செயல், வெற்றி,  மெ.ஞானசேகர், கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்,  பக்.260, விலை ரூ.200,  சிந்தனை, செயல், வெற்றி என்ற தத்துவத்தைப் பின்பற்றினால் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதற்கான வழிகளை பல்வேறு வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய எடுத்துக்காட்டுகளுடன் கூறியுள்ளார் நூலாசிரியர். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் நம்மைவிட மேலானவர் என்று நினைப்பது நல்லது. அத்துடன் நம்முடைய கற்பனை, சிந்தனை, முன்னேற்றத்துக்கான செயல்பாடுகள், நேர்மறை எண்ணங்கள், பழக்க வழக்கங்களில் சிறிய அளவிலான மாற்றம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே போதும், நாம் எண்ணிய வாழ்க்கையைப் […]

Read more

பாரதி ஓர் ஆச்சரியம்

பாரதி ஓர் ஆச்சரியம்,  ஜெ.கமலநாதன்,  குமரன் பதிப்பகம், பக்.96, விலை ரூ.50. “பாரதி என்ற மகாகவிஞனிடம் நான் காணும் ஐந்து மிகப் பெரும் பெருமைகளை நீங்கள் உணரும்படி செய்வதே இந்நூலின் நோக்கம்” என்று கூறும் நூலாசிரியர் அந்த ஐந்து பெருமைகளைப் பற்றி இந்நூலில் எடுத்துரைத்துள்ளார். உரை விளக்கம் எதுவும் தேவையில்லாமல், எளிய நடையில் பாரதியார்தான் தமிழில் முதன்முதலில் கவிதை புனைந்தார்; அதற்குப் பின் அவர் மரபைப் பின்பற்றி பலரும் கவிதைகள் எழுதினர். தமிழில் புதிய போக்கு உருவாக பாரதி காரணமாக இருந்தார். இது பாரதியின் […]

Read more

நகுலன் கதைகள்

நகுலன் கதைகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா, பக்.349, விலை ரூ.350. ஐந்து குறு நாவல்கள், 32 சிறுகதைகள், இரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் என 1959 முதல் 1995 வரை கணையாழி உள்பட பல்வேறு இதழ்களில் வெளியான நகுலனின் 39 கதைகளின் தொகுப்பு இது. சில கதைகள் விடுபட்டுள்ளன. யதார்த்த நிகழ்வுகளை காட்சிப்படுத்தி தேவைக்குத் தக்க சில இடங்களில் புனைவை சேர்த்து இரண்டையும் வாசகரால் பிரித்தறிய முடியாதவாறு ஒவ்வொரு கதைகளும் உள்ளன. சிறுகதைகளில் வர்ணனைகளை மிகவும் மட்டுப்படுத்தி ஓரிரு நிமிடங்களில் கதைகள் முற்றுப் பெறுகின்றன. […]

Read more

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) , மலர் -விசு, வாசக சாலை பதிப்பகம், பக்.392, விலை ரூ.380.   சுதந்திரப் போராட்டத்தின் விதையான சிப்பாய் புரட்சி முளைத்த வேலூரின் காந்தி நகரில் தொடங்கும் கதை, பாஸ்டன் விமான நிலையத்தில் முடிகிறது. கிச்சா என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் கதைநாயகன். கிளிமூக்கு என்று அவனால் செல்லமாக அழைக்கப்படும் உமா கதையின் நாயகி. பிளஸ் 2, கல்லூரி, சிஏ என அவர்களுடைய படிப்புடன் காதலும் வளருகிறது. அம்மா உள்பட தான் நேசிப்பவர்களை இழந்துவிடும் உமா, “விச்சு பயமா இருக்கு. நாம […]

Read more

64 யோகினிகள் மர்மங்கள்

64 யோகினிகள் மர்மங்கள், வேணு சீனிவாசன், சங்கர் பதிப்பகம், பக். 288, விலை 275ரூ. சக்தி தெய்வ வழிபாடு வழங்காலத்திலே உள்ளது. குடும்பங்களில், ‘இல்லுறை தெய்வம்’ என, கண்ணகியை வழிபட்டுள்ளனர். கொற்றவை, மாரியம்மன் தெய்வ வழிபாடு, கோவிலில் உள்ளது என, 64 யட்சிணி, யோகினி, டாகினியர், வரலாறு, வசியம், வழிபாடு பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார். யோகினிகள், தெய்வங்களா, பரிவார தேவதைகளா, ஏவல், பில்லி, சூனியம், வசியம் செய்ய உதவும் கூலிப்படைகளா என ஆய்ந்துள்ளார். ஆடு, மாடு, மனிதன் என்று காளிக்கு பலி தரும் வழக்கம், […]

Read more
1 5 6 7 8 9