பதிவு சட்டம்

பதிவு சட்டம், அ.பரஞ்சோதி, ராஜாத்தி பதிப்பகம், பக். 98, விலை 100ரூ. நடைமுறையில் பதிவு செய்ய வேண்டியவை பல. அவற்றுக்கான சட்ட விதிகளையும், பதிவுத்துறையின் அமைப்பையும் விளக்கும் நூல். நிலம் வாங்கும் போது பதிவு செய்கிறோம். பிறப்பு, இறப்பு, திருமணத்தையும் பதிவு செய்கிறோம். இவை எல்லாம் கட்டாயமானவை. அனைவரும் சட்டப்படி செயல்படுகிறோம். அதற்கு, அடிப்படை அறிவு தேவை. அதை நிறைவு செய்கிறது இந்த நூல். மிக எளிமையான பதிவு சட்டம் தொடர்பான விபரங்களை சொல்கிறது. கேள்வி பதில் பாணியிலும், சிறு குறிப்புகளாகவும், முழு சட்ட […]

Read more

சுவடுகள் மறையாத பயணம்

சுவடுகள் மறையாத பயணம்,  பெ.சிதம்பரநாதன்,  பழனியப்பாபிரதர்ஸ், விலை 300ரூ. வள்ளலாகிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா ஒரு மாமனிதர். அவருடன் நெருங்கிப் பழகும் பேறுபெற்ற சிதம்பரநாதன், அருட்செல்வரின் பல்வேறு முகங்களைப் பதிவுசெய்கிறார். வேளாண் உற்பத்தி, தொழில்மேம்பாடு, மொழிப்பிரச்னை, வெளியுறவுக்கொள்கை, உலகமயமாதல், இடஒதுக்கீடு, கல்விமறுமலர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகப்பிரச்னைகள், சமூகசேவை எனப் பல பிரச்னைகளுக்குத் தம்அறிவுத்திறனாலும், அனுபவத்தாலும், தொழில்நுட்பத்தாலும் காந்தியக்கொள்கை வழிநின்று தீர்வுகளைச்சொன்னவர் அருட்செல்வர். ஒரு மாபெரும் மனிதனின் பன்முகங்களைச் சொல்லும் மகத்தான நுால். நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029926_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

பன்னிருதிருமுறை

பன்னிருதிருமுறை, இராம.லெட்சுமணன், சகுந்தலை நிலையம், விலை 1200ரூ. சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல், ஒன்பது வரையிலானவை தோத்திரம். 10வது சாத்திரம். 11வது பிரபந்தம். 12வது புராணம். முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் பாடியது, ‘திருக்கடைக்காப்பு’ எனவும், நாவுக்கரசர் பாடிய, நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் ‘தேவாரம்’ எனவும், சுந்தரர் பாடிய ‘திருப்பாட்டு’ ஏழாம் திருமுறையாகவும், மாணிக்கவாசகர் அருளியது, எட்டாம் திருமுறையாகும். ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, ஒன்பதாம் திருமுறையாகும். இதில் […]

Read more

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும், புலியூர்க்கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 176, விலை 165ரூ. ஜாதக நம்பிக்கை சார்ந்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. 21 எளிய தலைப்புகளாக உள்ளது. புரிந்து கொள்வது நல்லது. கிரகங்களும் ராசிகளும் போன்ற தலைப்புகள் வைத்துள்ளார். நூலில் இருந்து மனந்தான் முழுமையாக ஒருவரை நிர்வகிக்கிறது. அதன் தன்மையே வெற்றி தோல்விகளுக்கு காரணமாகிறது. வலுவான உடலமைப்பு பெற்றும், மன வலுவில்லாதவர் கோழையாக இருக்கலாம். உடல் வலு குறைந்தவர்கூட, மன வலிமையால் துணிச்சலுடன் பல காரியங்களை சாதித்து புகழும், பொருளும் குவிக்கலாம். குடும்ப […]

Read more

அகக்காட்சி

அகக்காட்சி,(அஞ்சனம்), கிளார் வோயான்ட் சுந்தரராஜன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 200, விலை 200ரூ. உள்ளத்தின் இயல்புகளை, ஏழு இயல்களாக பகுத்து ஆராய்ந்துள்ள நூல். அகக்கண் பெற்ற அதிசயப் பிறவிகளான, ஹெலானா ப்ளாவாட்ஸ்கி, சார்லஸ் லெட்பீட்டர், க்ராய்செட், ஹெர்கோஸ், பால் கோல்டின் ஆகியோரையும், நெற்றிக்கண் பெற்றவராக நம்மாழ்வாரையும் அறிமுகம் செய்துள்ளார். மனம், உள் மனம் பற்றி விளக்கும் நூல். நன்றி: தினமலர், 24/5/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார், முகிலை ராசபாண்டியன், முக்கூடல், பக். 64, விலை 60ரூ. நம்மாழ்வாரை மட்டுமே பாடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானவர் மதுரகவி ஆழ்வார். சாதி வேற்றுமைக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதை உணர்ந்து, உணர்த்தியவர். அதனால்தான், மன்னர் குலத்தில் உதித்த நம்மாழ்வாருக்குச் சீடரானார். அவரைப் போற்றி, ‘கண்ணி நுண் சிறுத்தரம்பு’ என்ற நூலையும் பாடினார். மதுரகவி ஆழ்வாரின் வரலாறு மிக எளிய நடையில் நூலாக்கப்பட்டுள்ளது. ஆழ்வார் வரலாற்று நூல்களில் தனிச்சிறப்புப் பெற்றது. நன்றி: தினமலர், 24/5/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

மானுட வாசிப்பு

மானுட வாசிப்பு, தொகுப்பாசிரியர் தயாளன், வானவில் புத்தகாலயம், பக். 120, விலை 112ரூ. தமிழக பண்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் தொ.பரமசிவம். தமிழகத்தில் அறிவு எழுச்சி பற்றி, தயாளனும், சண்முகானந்தமும் அவருடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு நூல். பண்பாட்டு, கல்வி, அரசியல், நாட்டார் வழக்காற்றியல், சுற்றுச்சூழல், சித்தர் இலக்கியம் என பல தளங்களில் உரையாடல் நடத்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் ஒரு பகுதியை, மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறது. தொன்மையை துலக்க முயலும் நூல். புதிய கோணத்தில் சிந்திக்க தூண்டும். நன்றி: தினமலர், 24/5/2020 இந்தப் புத்தகத்தை […]

Read more

கர்ணன் – காலத்தை வென்றவன்

கர்ணன் – காலத்தை வென்றவன், மராத்தி மூலம்: சிவாஜி சாவந்த், தமிழில் – நாகலட்சுமி சண்முகம்;மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.862; விலை ரூ.899. மகாராஷ்டிர அரசின் விருது, குஜராத் இலக்கிய அமைப்பின் விருது, ஞானபீடத்தின் மூர்த்திதேவி விருது உள்பட பல விருதுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம் இது. சூரிய பகவானுக்கும், குந்திக்கும் பிறந்த கர்ணனை குந்தி அசுவநதியில் போட்டுவிட, அதிரதன் என்னும் தேரோட்டி கர்ணனை அசுவநதியில் கண்டெடுத்து தனது மகனாக வளர்த்தார். பிறந்த கணம் தொட்டு பாரதப் போரில் அர்ஜுனனால் கொல்லப்படும் வரை கர்ணன் […]

Read more

கேரக்டர் (பாகம் 1)

கேரக்டர் (பாகம்-1), கலைஞானம், பக்.336; ரூ.280- (பாகம்-2) நக்கீரன் வெளியீடு, பக். 328; விலை: ரூ.280;  திரைப்பட கதாசிரியர், நடிகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறன் கொண்ட கலைஞானம் எழுதிய திரையுலக அனுபவங்களின் தொகுப்பு. சென்னை பாண்டிபஜாரில் கார் ஓட்டுநர்கள் 4 பேர் சினிமா கனவுகளுடன் இருந்தார்கள்.அவர்களின் கனவு நிறைவேறியதா… என்பதை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். அந்த 4 பேரில் ஒருவரான பாலகிருஷ்ணன் என்கிற கலைஞானம். கே.பாக்யராஜின் “இது நம்ம ஆளு” படத்தில் ஐயர் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர். […]

Read more

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்,  வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.604. விலைரூ.520; தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 – ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்நூல் கிராம ஊராட்சிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தொகுத்து தந்திருக்கிறது.கிராம ஊராட்சிகளின் அதிகார எல்லைகள் எவை? ஊராட்சித் தலைவரின், இதர பணியாளர்களின் பணிகள் எவை? குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு என அனைத்தையும் கிராம ஊராட்சி அமைப்பு பார்த்துக் கொள்ள வேண்டும். சாலை அமைப்பது, அதைப் பராமரிப்பது, மேம்படுத்துவது என […]

Read more
1 6 7 8 9