இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை; ஆசிரியர். மு.நீலகண்டன், வெளியீடு: கனிஷ்கா புத்தக இல்லம், விலை ரூ. 200/- பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்ற அளவை வைத்துத்தான் ஒரு சமுதாயத்தை அளவிட முடியும்’ என்ற அம்பேத்கர் சிந்தனையை அடிப்படையாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நுால். பெண்ணிய விபரங்களை தொகுத்து வழங்குகிறது. இந்தியப் பெண்ணியச் சிந்தனையையும், குறிப்பாக, அதில் அம்பேத்கரின் பார்வையையும் ஆய்வு நோக்கில் கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. இப்போதுள்ள பெண்ணிய நிகழ்வுகள், உட்தலைப்புகளில் அழகாக தொகுத்து எழுதப்பட்டுள்ளது. வரலாற்றுக் காலத்திலிருந்து இன்று வரையில், பெண்களின் நிலையை தெளிவுடன் எடுத்துரைக்கிறது. புத்தரின் […]

Read more

தொல்காப்பியம்

தொல்காப்பியம்; ஆசிரியர் ; புலியூர்க்கேசிகன்,வெளியீடு: ஜீவா பதிப்பகம், விலை ரூ. 400/- வடமொழிக்கு இலக்கண வரம்பை தெரிவிக்கும் நுால், பாணினீயம். இதற்கு முன்பாகவே, தமிழ் மொழிக்கு இலக்கண வரையறை தரும் நுாலான, தொல்காப்பியம் தோன்றிவிட்டது. வடவேங்கடம் முதல், தென்குமரிக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கை இணைத்து, இலக்கணம் கண்டவர் தொல்காப்பியர். இந்த நுாலுக்கு, இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையர் உட்பட பலர் உரை எழுதியுள்ளனர். அதில், இளம்பூரணரின் உரையைத் தழுவி புலியூர்க்கேசிகன் தெளிவான உரை எழுதி உள்ளார். […]

Read more

விறலி விடுதுாதுக்களில் தேவதாசியர்

விறலி விடுதுாதுக்களில் தேவதாசியர்; ஆசிரியர்; சி.எஸ்.முருகேசன், வெளியீடு: சங்கர் பதிப்பகம், விலை ரூ. 160/- தமிழ் மொழியில், 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களில் நண்டு, நாரை, வண்டு, கிளி போன்றவை துாது சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ் இலக்கியங்களுக்கு, நாயக்க மன்னர்கள் ஆதரவு அளிக்காததால், துாது இலக்கியங்களை புலவர்கள் இயற்றியதாக கூறப்படுகிறது.தேவதாசியரின் குடும்ப நிலை, பழக்கவழக்கங்கள், குலதெய்வ வழிபாடு போன்றவற்றை விறலி விடு துாதுக்களில் புலப்படுவதை நுால் விளக்குகிறது. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மன உறுதி பெறுவது எப்படி

மன உறுதி பெறுவது எப்படி; ஆசிரியர்; அனிதா பானர்ஜி, வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், விலை ரூ. 40/- குறிக்கோளில் வெற்றி பெற மன உறுதி தான் முக்கிய தேவை. அது, பாதையை வகுத்து, பயணத்தை துாண்டும். இத்தகைய பண்பை பெறும் வழிமுறையை சொல்லும் நுால்.பத்து தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பது பற்றி தனியாக விளக்கப்பட்டுள்ளது. சிறிய உதாரணங்கள் நிறைந்துள்ளன. மன உறுதி ஏற்பட்டு விட்டால், விடாமுயற்சி தொடர்ந்து வரும். முயற்சியால் செயல் கைகூடும். முன்னேற விரும்புவோருக்கு உதவும் எளியநுால். -கிருஷ்ணவேணி. நன்றி: தினமலர். […]

Read more

அறிவுரை கூறும் நெறிமுறை

அறிவுரை கூறும் நெறிமுறை; ஆசிரியர் : மெர்வின், வெளியீடு: மெர்வின் பதிப்பகம், விலை 100/- வாழ்க்கையில் வெற்றி பெறும் வழிமுறையை அறிவுரைத்துள்ள நுால். சந்திக்க வருபவர்களை, அன்பு, மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியத்தை அழகாக வலியுறுத்துகிறது. நன்மை, தீமையை அறிந்து, ஒரு செயலை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கூறுகிறது. பிறருக்கு அறிவுரை கூறும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் உள்ளடக்கியது. – வி.விஷ்வா. நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

இலங்கையில் இராமாயணத் தேடல்கள்

இலங்கையில் இராமாயணத் தேடல்கள்; ஆசிரியர் : டாக்டர் ஷியாமா சுவாமிநாதன், வெளியீடு: செங்கைப் பதிப்பகம், விலை ரூ. 150/- இலங்கையில், ராமாயண சம்பவம் நடந்த இடங்களை விளக்கும் நுால். இலங்கையின் மலைப்பிரதேசமான நுவாரலியாவில், ‘சீதாஎலியா’ என்ற வனப் பிரதேசம் இருக்கிறது. அங்கே சீதா, நீராடி பொழுதைக் கழித்ததாகச் சொல்லப்படுகிறது. இலங்கையும், ராமாயணமும் பிரிக்க முடியாத ஒன்று. இந்த நுாலைப் படித்தால், இலங்கையில் அந்த இடங்களை தேடி பயணிக்கும் ஆசை ஏற்படும். -பேராசிரியர் இரா.நாராயணன். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

குதிப்பி

குதிப்பி, ம.காமுத்துரை, வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.400/- அதிக அளவில் இலக்கியக்கவனம் பெறாமல் இருந்த நாவிதர்கள், சோழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வண்ணார்கள், நாகசுரக் கலைஞர்கள் குறித்து சமீப காலங்களில் காத்திரமான படைப்புகள் தமிழில் வெளிவருகின்றன. அவை வாசக கவனத்தையும் குவித்திருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான், சமையல் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘குதிப்பி’ நாவலையும் பார்க்க வேண்டும். சாரதி என்ற சமையல்காரரின் குவாட்டர் பாட்டில் மூடித் திறப்பில் நாவல் தொடங்குகிறது. சாரதியின் மகன் சரவணன் குவாட்டர் பாட்டிலைத் தூக்கி வெளியே எறிவதில் நாவல் முடிவடைகிறது. […]

Read more

நிழல்களின் உரையாடல்

நிழல்களின் உரையாடல்; ஆசிரியர்,மார்த்தா த்ராபா, தமிழில்: அமரந்த்தா, காலக்குறி – யாழ் வெளியீடு, விலை: ரூ.250. ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒரு வீட்டில் சந்தித்துக்கொள்ளும் இரண்டு பெண்களின் உரையாடல்தான் ‘நிழல்களின் உரையாடல்’ நாவல். உருகுவே நாட்டில் மோன்தேவீதேயோ நகரத்தில் புகழ்பெற்ற முன்னாள் நாடக நடிகை ஐரீனுக்கும், அவளைவிட இளையவளுமான தொலோரெஸுக்கும் நடக்கும் உரையாடல் அது. இரண்டு பெண்களுக்குள் நடக்கும் உரையாடல், இரண்டு பெண்களும் உரையாடலின் இடையில் தங்கள் மனதில் அசைபோடும் எண்ணங்கள், கதையைக் கூறும் மூன்றாவது குரல் என்று மாறி மாறி வெளிப்பட்டு, […]

Read more

ஐம்பேரியற்கை

ஐம்பேரியற்கை; மாற்கு, தமிழினி வெளியீடு, விலை: ரூ.300/- 2018-ல் வெளிவந்த இந்நாவல் நல்லூர் என்ற கற்பனைக் கிராமத்தைப் பற்றியது. அரசு உதவிகளைப் பெற மறுக்கிறார்கள் அவ்வூர் மக்கள். உண்மை நிலையறிய விரும்பும் மாவட்ட ஆட்சியர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பயணியாக அந்த ஊருக்குச் செல்கிறார். நல்லூரின் வாழ்க்கைமுறைதான் சரியானது எனத் தெளிந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார். மக்கள்விரோத கொள்ளைத் திட்டங்களுக்கு அனுமதியளிக்க மறுத்து, தனது பதவியிலிருந்தும் விலகிவிடுகிறார். மக்களுக்குத் தனது பதவியால் ஏதாவது நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்று உண்மையாகவே நம்பி, […]

Read more

எண்பதுகளின் தமிழ் சினிமா

எண்பதுகளின் தமிழ் சினிமா; ஸ்டாலின் ராஜாங்கம், நீலம் வெளியீடு, விலை: ரூ.150. எண்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களைச் சமூக, அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகியிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘எண்பதுகளின் தமிழ் சினிமா: திரைப்படங்களின் ஊடான தமிழ்ச் சமூக வரலாறு’ என்ற புத்தகம் ஒரு முக்கியமான வரவு. எண்பதுகளில் வெளியான சினிமாக்கள் என்னென்ன விஷயங்களைக் கையாண்டன, சமூகங்களை – குறிப்பாக, சாதிய உரையாடல்களை – சினிமாக்கள் எப்படிப் பிரதிபலித்தன, சினிமாக்களைச் சமூகங்கள் எப்படி உள்வாங்கிக்கொண்டன என்று சமூகத்துடன் திரைப் பிரதிகள் நிகழ்த்திய ஊடாட்டங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது […]

Read more
1 2 3