விரும்பத்தக்க உடல்

விரும்பத்தக்க உடல் ; ஆசிரியர். உய்பெர் அதாத், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.150. வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலைப் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரீக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரீக்கின் தந்தை பெரும் செல்வந்தராகையால் இது சாத்தியமானது. இந்த அறிவியல் புரட்சியின் தலைமகன் செதெரீக் உடல் உபாதைகள், உளவியல் சிக்கல்கள் எனப் பல சவால்களை ஏற்கவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகிறான். இயற்கையின் முடிவினை எதிர்க்கவும், தவிர்க்கவும், துணியும் இந்த அறிவியல் […]

Read more

கருப்பட்டி

கருப்பட்டி, ஆசிரியர் : மலர்வதி,  காலச்சுவடு பதிப்பகம், விலை 175/- பெண்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே வட்டாரம் சார்ந்து எழுதுகிறார்கள். அதில் மலர்வதியும் ஒருவர். நாஞ்சில்நாட்டு மொழியும், அப்பகுதி மக்களின் வாழ்க்கையும் இவரது புனைவுகளில் அப்பிக் கிடக்கின்றன. ‘காத்திருந்த கருப்பாயி’, ‘தூப்புக்காரி’, ‘காட்டுக்குட்டி’ ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். வாசகர்களின் பெருவாரியான கவனம் பெற்ற ‘தூப்புக்காரி’ நாவலுக்கு சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்தது. ‘கருப்பட்டி’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. கருப்பட்டி என்பது வெறும் இனிப்புப் பொருளன்று; பண்பாட்டின் குறியீடும்கூட.  அந்நில வாழ்க்கையின் ஒரு […]

Read more

சோழர் அரசும் நீர் உரிமையும்

சோழர் அரசும் நீர் உரிமையும்; ஆசிரியர் : முனைவர் கி.இரா.சங்கரன், வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60/- நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்வதிலும், பகிர்வதிலும் பல்லவ அரசின் தொழில் நுட்பத்தை, சோழ மன்னர்களும் பின்பற்றினர். சோழர்களின் நீர் மேலாண்மை குறித்து, ஆவணங்கள் துணை கொண்டு எழுதப்பட்ட நுால். ஆய்வரங்குகளில் விவாதிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. நீர் உரிமை, நீர்ப் பாசனம், நில விற்பனை, நிலக் கொடை, நீர் பராமரிப்பு வரிகள் போன்ற செய்திகள் கல்வெட்டு, செப்பேடுகளால் அறியப்படுகின்றன. நீர் ஆதாரங்களைப் பராமரிக்க, எச்சோறு […]

Read more

சிக்கனம் சேமிப்பு முதலீடு

சிக்கனம் சேமிப்பு முதலீடு; ஆசிரியர் : சோம. வள்ளியப்பன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம். விலை 125/- பணத்தை மதிப்பது என்பது அதைச் சிக்கனமாகச் செலவு செய்வதும், குறிப்பிட்ட அளவு முயன்று சேமிப்பதும். சேமித்த பணத்தை அவ்வப்போது பாதுகாப்பாக முதலீடு செய்ய தெரிந்திருப்பது முக்கியம்.சேமிப்பதற்கும், முதலீடு செய்வதற்கும், பல பாதுகாப்பான முறைகள் உள்ளன. பயனுள்ள, 23 தலைப்புகளில் அது பற்றி தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. சீட்டு கட்டலாமா, தங்கத்தில் முதலீடு செய்யலாமா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது. அதிக வருமானம் பெற, சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டும்; […]

Read more

மங்களநாயகி ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி

மங்களநாயகி ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி; ஆசிரியர் : ஸ்ரீதரன் மணி, வெளியீடு: கிரி டிரேடிங் ஏஜன்சி , விலை 150/- தாயின் அம்சங்களாக விளங்கும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, ஆண்டாள், சத்தியபாமா, வேதவதி, பத்மாவதி பெருமை கூறும் நுால். மஹிஷாசுரனை அழிக்க, ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி அவதாரம் எடுப்பதும், போரில் தேவி மஹிஷாஸுரமர்தினி என்ற பெயர் பெறுவதும் விளக்கப்பட்டு உள்ளது. திருப்பாவைப் பாசுரங்களை விளக்கி, அதன் மூலம், ஸ்ரீதேவியின் புகழ் விவரிக்கப்பட்டுள்ளது. நரகாசுரன் வதம் வரலாறு விளக்கப்பட்டுள்ளது; தீபாவளி கொண்டாடுவதின் நோக்கமும் அருமையாக கூறப்பட்டு உள்ளது. இறுதிப் பகுதியில், […]

Read more

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ, ஆசிரியர் : டாக்டர் தங்க.ஜெய்சக்திவேல், வெளியீடு: டெஸ்லா பதிப்பகம், விலை 175/- பேரிடர் காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவும், ஹாம் ரோடியோ தொழில்நுட்பம், அதை பயன்படுத்தும் விதம் பற்றிய தகவலை உள்ளடக்கிய நுால். எளிமையான, 13 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களின் போது, தொலைபேசி சேவைகள் செயலிழக்க வாய்ப்பு உண்டு. அது போன்ற நேரங்களில், அமெச்சூர் வானொலி என்ற, ‘ஹாம்’ சேவை முக்கிய பங்காற்றும். மீட்பு நடவடிக்கைகளில் உதவும். அந்த சேவையை பற்றி விளக்குகிறது இந்த நுால்.ஹாம் […]

Read more

கற்பனையான உயிரிகளின் புத்தகம்

கற்பனையான உயிரிகளின் புத்தகம்; ஆசிரியர்; ஹோர்ஹே லுாயிஸ் போர்ஹெஸ், வெளியீடு: எதிர், விலை 450/- பிரபல லத்தின் அமெரிக்க எழுத்தாளர், போர்ஹெஸ் எழுதிய நுாலை, தமிழாக்கம் செய்துள்ளார் கார்த்திகை பாண்டியன். உலகில் கற்பனையாக உருவாக்கப்பட்ட உயிரினத் தோற்றங்களை, மிகவும் வினோதமாக அணுகியுள்ளது இந்த நுால். மானுட வளர்ச்சியில், கற்பனை சித்திரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. நம்பிக்கையாக, தத்துவத்தின் பிம்பமாக, செயலின் ஊற்றுக்கண்ணாக என, எப்படி வேண்டுமானாலும் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். நம்மூர், கருடன் உருவமும் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. கற்பனையாக படைத்த உருவங்களின் […]

Read more

திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்

திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்; ஆசிரியர் : எடப்பாடி அழகேசன், வெளியீடு: மணிமேகலை பிரசுரம், விலை 750 ரூ. உலக அற இலக்கியங்களுள் ஈர்ப்பு மிக்கது திருக்குறள். சாமானியர் வாழ்வில் நிகழும் நல்லவை, கேட்டவை அனைத்திற்கும் திருக்குறள் நெறிகளைப் பொருத்திப் பார்க்க முடியும். குறள் நெறிகள் எளிதாக மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் அதிகாரத்திற்கும் ஒரு கதையென, 133 சிறுகதைகளின் தொகுப்பாக வந்திருக்கும் நுால்.வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நீண்ட கதைகளாக்கித் திருக்குறள் அதிகாரங்களோடு பொருத்திக் கூற முனைந்திருக்கிறார். எளிய நடையில் […]

Read more

அறிவுரை கூறும் நெறிமுறை

அறிவுரை கூறும் நெறிமுறை  ஆசிரியர் : மெர்வின், வெளியீடு: மெர்வின் பதிப்பகம், விலை 100/- வாழ்க்கையில் வெற்றி பெறும் வழிமுறையை அறிவுரைத்துள்ள நுால். சந்திக்க வருபவர்களை, அன்பு, மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியத்தை அழகாக வலியுறுத்துகிறது. நன்மை, தீமையை அறிந்து, ஒரு செயலை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கூறுகிறது. பிறருக்கு அறிவுரை கூறும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் உள்ளடக்கியது. – வி.விஷ்வா. நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

பஷீர் நாவல்கள்

பஷீர் நாவல்கள்; ஆசிரியர் வைக்கம் முகம்மது பஷீர், தமிழில்: குளச்சல் யூசுப், சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.575/- தனிமனிதரின் உலகம் மிகப் பெரிய வெளிச்சங்களைத் தன்னகத்தே மிக ஆழத்தில் வைத்திருக்கிறது. ஆழத்தில் படிந்திருக்கும் அதிசயங்களைத் திறந்து காண்பித்தவர் பஷீர். எண்ணங்களிலும் வாழ்விலும் என்றுமே குறைந்திடாத பேரன்புகளைக் குழந்தைமையின் மாசில்லா வார்த்தைகளில் இலக்கியமாக்கியவர். வெவ்வேறு தருணங்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பஷீரின் எட்டு நாவல்களையும் தொகுத்து ‘காலச்சுவடு’ வெளியிட்டிருப்பது தமிழ் வாசகர்களுக்கான ஒரு அழகிய பரிசு. வைக்கம் முகம்மது பஷீரின் நுட்பமான எழுத்துகளையும், இழையோடும் நகைச்சுவையையும், […]

Read more
1 2 3