கசாயம், கஞ்சி, சூப் வகைகள்

கசாயம், கஞ்சி, சூப் வகைகள், கோவை பாலா, கவின் பப்ளிகேஷன்ஸ், விலைரூ.250. உணவே மருந்து என்ற கொள்கை அடிப்படையில் வெளியாகியுள்ள நுால். மூலிகைகளில் இருந்து கசாயம் தயாரிக்கும் செய்முறை, முதல் பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. 127 வகை கசாயம் தயாரிப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. எளிதில் செரிக்கும் கஞ்சி வகைகளின் செய்முறையும் ஒரு பகுதியில் இடம் பெற்றுள்ளது. 87 வகை கஞ்சிகளின் செய்முறை உள்ளது. ‘சூப்’ வகைகள் தயாரிப்பு தனி பிரிவாக கூறப்பட்டுள்ளது. இதில், 15 வகை சூப்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. நலமாக வாழ விரும்புவோர் […]

Read more

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.344, விலை ரூ.375. பண்டைய புத்தகங்கள், வரலாற்று மாந்தர்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் திருக்குறள், அதன் ஆசிரியர் வள்ளுவர் தொடர்பான ஆராய்ச்சி விஷயத்தில் ஒரு பிரத்தியேக சிறப்பும் சர்ச்சையும் உண்டு. குறள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும், தங்களது உயர்வு நவிற்சியால், வள்ளுவனையும் குறளையும் தம்முடையதாக மட்டுமே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் காரணமாகிவிடுகிறது. அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் […]

Read more

கருப்பர் கோவில் திருவிழா

கருப்பர் கோவில் திருவிழா, மனோ.இளங்கோ, எம்.ஜெ.பப்ளிகேசன் ஹவுஸ், விலைரூ.200. தமிழகத்தில் சிலை கடத்தல் செய்திகளை படிக்கிறோம். இந்த காலத்தில் மட்டுமில்லை, பழங்காலங்களிலும் சிலை கடத்தல் நடந்துள்ளது. கோவில், அதை சார்ந்த சமூகம், சிலை கடத்தல், வழக்கு, தீர்ப்பு என, இந்த காலத்திற்கு ஏற்ற நாவல் இது. ‘சாமி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்… சாமி என் பக்கத்தில இருக்கணும் என்று தான் எடுக்கிறேன்… நான் ஒரு நாள் தான் சாமி சொத்த தின்னுறேன்…’ ‘ராவணன், குபேரன் மீது, மதுரை சிறையில் கலவரம் செய்ததாக, போலீசார் […]

Read more

கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும்

கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும், ச.ந.பார்த்தசாரதி, மகாலட்சுமி பதிப்பகம், விலைரூ.150. கோதை என்றும் ஆண்டாள் என்றும் அழைக்கப்படும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவைப் பாசுரங்களின் விளக்கவுரையும், கோவிந்தன் என்று போற்றப்படும் கண்ணனின் மேன்மை குறித்தும் கூறும் நுால். தமிழ் இலக்கியங்களில் பாவை நோன்பு குறித்தும், திருப்பாவையின் அமைப்பு குறித்தும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். சுவையாக உள்ளது. கண்ணன் குறித்து, 18 தலைப்புகளில் விளக்கியுள்ளார். திருப்பாவைப் பாடல்களின் விளக்கம், மிக எளிய முறையில், பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடல் விளக்கம் முடிந்ததும் துணுக்குச் செய்தி என்ற […]

Read more

திருவாசகத்தில் மெய்ப்பாடு

திருவாசகத்தில் மெய்ப்பாடு, ஜெ.கலைவாணி, அகலன் வெளியீடு, விலைரூ.100. திருவாசகத்தில் மெய்ப்பாடு என்னும் பொருண்மையில் அமைந்த இந்நூல், திருவாசகத்தில் இடம்பெறும் பாடல்களை கவித்துவம் மிக்கதாகவும், பொருள் புலப்பாட்டுத்தன்மை மிக்கதாகவும் மாற்றும் திறன் மெய்ப்பாட்டுக்கிருப்பதை பல்வேறு சான்றுகள் மூலம் நுாலாசிரியர் நிறுவுகிறார். தமிழில் தமிழ் மண்ணைப் போற்றும் ஆய்வு முறைகள் உருவாகவேண்டும். தமிழிலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டு தமிழிலக்கியங்களை ஆய்வு செய்யும் போக்கு வளர வேண்டும் என்ற நுாலாசிரியரின் விழைவு நுால் முழுவதும் இழைந்தோடக் காணலாம். இலக்கியமும் மெய்ப்பாடும், காலந்தோறும் மெய்ப்பாடு, திருவாசகத்தில் மெய்ப்பாடு என்ற கோணத்தில், வரலாற்றுக் […]

Read more

சிவபுராணம்

சிவபுராணம், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.220. சைவர்களின் வழிபடு தெய்வ மாக விளங்குபவர் சிவபெருமான். அவர் பெருமைகள், ஆற்றல் அளவிடற்கரியவை. பிரும்மம் என்ற பரமாத்மா, பிரம்மாவைத் தோற்றுவித்து, அவர் மூலம் இவ்வுலகம் உண்டாக்கப்பட்டது என்பர். இந்த நுாலில், ருத்ர பகவான் வரத்தால், பிரம்ம தேவர் உலகில் உயிரினங்களைத் தோற்றுவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. சிவனுடன் சேர்வதற்குப் பார்வதி தேவி விரதமிருந்த இடம் ‘கவுரி சிகரம்’ என்றும், சிவனின் யோகத்தைக் கலைத்த மன்மதன் எரிந்து சாம்பலானதும், மன்மதனே கிருஷ்ணனின் மகனாக பிரத்தியும்னன் என்ற பெயரில் […]

Read more

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 2

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 2, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.290. கேரளாவைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி, தன் குருவுக்கு வந்த வாதநோயை, தனக்கு மாற்றுமாறு வேண்டிக் கொண்டார். குரு நலம் பெற, நாராயண பட்டத்திரிக்கு வாதநோய் ஏற்பட்டு உடலை வருத்தியது. இந்த நோயை தீர்க்குமாறு, கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை வேண்டுகிறார். வெறும் வேண்டுதலாக இல்லாமல் பாடல்களாக பாடுகிறார். 10 ஸ்லோகங்கள், ஒரு தசகம் வீதம் 1,000 ஸ்லோகங்கள் இயற்றுகிறார். ஒவ்வொரு தசகத்தையும் பெருமாளிடம் படித்து காட்டி, சரி செய்ததாக வரலாறு […]

Read more

கந்த புராணம் மூலமும் உரையும்

கந்த புராணம் மூலமும் உரையும், முனைவர் சிவ.சண்முகசுந்தரம், பாரி நிலையம், விலைரூ.4600. கம்பராமாயணத்திற்கு இணையாகப் போற்றப்படும் பெருமை வாய்ந்த பக்தி இலக்கிய நுால் கந்த புராணம். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என, ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 135 படலங்களுடன், 10 ஆயிரத்து, 345 பாடல்களைக் கொண்டது. கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பெற்றது. முருகனின் தோற்றம், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்படுதல், இளவயது திருவிளையாடல், சூரனை வதம் செய்தல், சூரனுக்கு அருள் வழங்கிய திறம், […]

Read more

எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா

எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா, முனைவர் இரா.இராமகிருட்டினன், நர்மதா பதிப்பகம், விலைரூ.175 சிறப்பு மிக்க இந்திய கலை பொக்கிஷங்களை அடக்கியுள்ள அஜந்தா, எல்லோரா பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். வரலாற்று பின்னணியுடன் ஆய்வுப் பார்வையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்த நுால், ஒன்பது இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அஜந்தா குடவரை பற்றி முழுமையான அறிமுகத்தை முதல் இயலில் விளக்குகிறது. உரிய படங்கள் செய்திகளை புரிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளன. கலை வரலாற்றை தெளிவாகக் கூறுகிறது. கையைப் பிடித்து, நேரில் அழைத்துச் சென்று காட்டுவது போல் கட்டுரைகள் அமைந்துள்ளன. பவுத்த, […]

Read more

எனது அரசியல் பயணம்

எனது அரசியல் பயணம், தி.ராமசாமி, செந்தமிழன் வெளியீடு, விலைரூ.75. தமிழ் மண்ணில் கம்யூனிஸ்டுகளின் தியாகங்கள் மறைந்து கிடக்கின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களையும், தியாகங்களையும் எடுத்துரைக்கிறது இந்த நுால். முதல் பகுதியில் நுாலாசிரியரை உருவாக்கிய தலைவர்களையும், மூத்த ஆளுமைகளையும் பற்றி கூறப்பட்டுள்ளது. அடுத்த பகுதியில் போராட்ட அனுபவங்கள், இயக்க வளர்ச்சி, பேரிடர் காலங்களில் இயக்கத்தின் சேவை என அரசியல் பயண அனுபவங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களையும், தியாகங்களையும், அடுத்த தலைமுறை அறிந்து கொள்வதை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன். […]

Read more
1 2 3 4 5 9