வெண்பா பாடும் பண்பாடு

வெண்பா பாடும் பண்பாடு, எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், பாற்கடல் பதிப்பகம், விலைரூ.91. பல்சுவையாக தொகுக்கப்பட்டுள்ள நுால். 52 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. சங்கக் கவிதைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறங்கூறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடல்களும், அவற்றுக்கான விளக்கங்களுமாக அமைந்து உள்ளது. நன்றி: தினமலர்,14/3/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2

தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2, சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.350. சங்கப் பாடல் வரிகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மிக விரிவாக கோட்டை ஆய்வுகள் மேற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. மன்னர்களுக்குள் ஏற்பட்ட பகைமை, பொறாமை, பணியாமை, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவற்றால் நடந்த போர்களுக்கெல்லாம் கோட்டைகளே தாக்குதல்களையும், தண்டனைகளையும் ஏற்று காலப்போக்கில் சிதிலமடைந்த விபரங்கள், வரலாற்றுச் சம்பவங்களின் குறிப்புகளோடு தரப்பட்டுள்ளன. அன்றைய நாடுகளின் அமைப்பு, வானளாவிய கோட்டைகளின் அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பக் கலைகள், […]

Read more

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும், அ.சுபா, காவ்யா, பக்.212, விலை ரூ.220. சங்ககால இலக்கியங்களான பத்துப் பாட்டும், எட்டுத்தொகை நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும்;சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நாலடியார் முதல் கைந்நிலை வரை உள்ள பதினெட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். இவ்விரு தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூல்களும் உள்ளன. அவற்றுள் அகப்பாக்கள் மட்டும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை இலக்கண, இலக்கியச் சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்கம், சங்கம் மருவிய […]

Read more

மேஜிக் ஆப் தி மைண்ட்

மேஜிக் ஆப் தி மைண்ட் ஆங்கிலம், ரவி வல்லூரி, ஏ.கே.எஸ்.பப்ளிஷிங் ஹவுஸ், விலைரூ.199 தன்னம்பிக்கை மற்றும் இறை நம்பிக்கை துணை கொண்டு மனதை பக்குவப்படுத்தும் வழிமுறைகளை, 50 அத்தியாயங்களில் எடுத்துரைக்கும் ஆங்கில நுால். தீபத்தால் நல்ல புத்தகங்களை படிக்கலாம்; எரிக்கவும் செய்யலாம். அது போல் மனம் வலிமையானது. இதை பயிற்சி அடிப்படையிலேயே செயல்படுகிறது. இதை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வோர் உயிரினமும் சுவாசிப்பதால் தான் உயிர் வாழ்கின்றன. சுவாசிப்பதை முறைப்படுத்துவதை பிரணாயாமம் உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துவதற்காக, ‘கிரியா’ என்ற முறையை பயன்படுத்துகிறோம். இந்த செயல்கள் வாயிலாக உள்ளம், […]

Read more

கண்டதும்… கேட்டதும்…

கண்டதும்… கேட்டதும்…, விஜயலெட்சுமி மாசிலாமணி, விஜயா பதிப்பகம், விலைரூ.70. பல நாடுகளில் கண்டதையும், கேட்டதையும் அனுபவப்பூர்வமாக எழுதியுள்ளார். பெண்கள் படும் துயர் பற்றியும் அக்கறையுடன் பதிவு செய்துள்ளார். சம காலத்தில் பல நிலையில் உள்ளோர் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புரட்சிக் கருத்துக்களை பதிவு செய்துள்ள பயண நுால். சிறுகதைகள் போல் உரையாடல் மொழியில் எழுதப்பட்டுள்ளது. சுவாரசியம் மிக்க சம்பவங்களைக் கொண்டது. நன்றி: தினமலர்,14/3/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

விதையாக இரு

விதையாக இரு, முன்னோர்கள் சொன்ன முன்னேற்றச் சிந்தனைகளின் தொகுப்பு, த.இராமலிங்கம், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.210. தமிழ் இலக்கியங்களில் நம் முன்னோர் கூறிச் சென்ற கருத்துகள் இன்றைய வாழ்வுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை விளக்கும் நூல்.தமிழின் அறநெறி நூல்களாகிய இன்னா நாற்பது, இனியவை நாற்பது, விவேகசிந்தாமணி, நீதி வெண்பா, திரிகடுகம், வெற்றி வேற்கை ஆகியவை மட்டுமல்ல, சங்க இலக்கிய நூலான புறநானூற்றிலும் கூறப்பட்டுள்ள வாழ்க்கைநெறிகள் நமது வாழ்வுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் […]

Read more

உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும்

உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும், மு. விவேகானந்தன், முன்றில் வெளியீடு, விலைரூ.400 உலகில் மதங்கள் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும், சைவத்திற்கு உயர்வான சமயமில்லை என்பதை எடுத்துரைக்கவும் எழுதப்பட்டுள்ள நுால். சமயம் தோன்றிய வரலாறு, தொன்மை சமயங்கள், இந்திய வரலாற்றில் சமயங்கள், மக்கள் தொகை அடிப்படையில் சமயங்கள், சைவ சித்தாந்த சாத்திரங்கள், சமயங்கள் ஒப்பீடு, சைவத்தின் சிறப்பு என ஏழு இயல்களாகப் பகுத்து, அரிய தகவல்களை மிகுந்த முயற்சியோடு தேடி ஆராய்ந்து தொகுத்து எழுதியுள்ளார். தமிழகத்தில் சமயம் வளர்ந்த வரலாற்றையும், இந்திய அளவில் சமய […]

Read more

அண்ணல் அம்பேத்கர்: உணர்வுகளின் உயிர்மம்

அண்ணல் அம்பேத்கர்: உணர்வுகளின் உயிர்மம், பசுபதி தனராஜ், கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், பக்.336, விலை ரூ.300. அம்பேத்கரின் வாழ்க்கையை – சிந்தனைகளை- பணிகளை- சாதனைகளை அறிமுகப்படுத்தும் நூல். அம்பேத்கரின் இளமைப் பருவத்தில் அவர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகள்,அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பள்ளிப் படிப்பை முடித்த அம்பேத்கரின் சிந்தனையை பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட் எழுதிய “கெளதம புத்தர்’ என்ற புத்தகம் மாற்றி அமைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இண்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்ற அம்பேத்கர் மேல் படிப்பு படிக்க வசதியில்லாமல் […]

Read more

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை)

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை), சு.சண்முகசுந்தரம், காவ்யா,  பக்.1550, விலை ரூ.1600 தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) படத்தில் பாடல் எழுதிய மதுரகவி பாஸ்கரதாஸில் தொடங்கி, கடந்த ஆண்டு வெளியான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளவர்கள் வரையிலான முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் குறித்த செய்திகளும் அவர்கள் எழுதிய ஓரிரு பாடல் வரிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எல்லாமே அறிந்த பெயர்கள்; எல்லாமே அறியாத தகவல்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், […]

Read more

உப்புச் சுமை

உப்புச் சுமை, ஐ.கிருத்திகா, தேநீர் பதிப்பகம், விலைரூ.160. செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கையுடன் துவங்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, விவசாயத் தொழில் செய்யும் ஏழைக் குடும்பத்துடன் நிறைவடைகிறது. செருப்பு தைக்கும் தொழிலாளி, தன் மகன் இதே தொழிலைச் செய்து சிரமப்படக் கூடாது என்று கவலைப்படுகிறான். விவசாயத் தொழில் செய்யும் வேலாயி, தன் மகன் வயலை விற்கப் போவதை நினைத்து உயிரை விடுகிறாள். தொழிலாளர் வாழ்க்கையை உற்றுப் பார்த்து, ஒவ்வொரு நிகழ்வையும் தன் எழுத்தில் நெசவு செய்திருக்கிறார் கிருத்திகா. உப்புச்சுமை என்ற கதை, உப்பு கரைவதைப்போல் […]

Read more
1 6 7 8 9