சா
சா, கு.ஜெயபிரகாஷ், ஆதி பதிப்பகம், பவித்திரம், விலை: ரூ.120. சாவை அழைத்துவரும் மலர் நம்பிக்கையாக இருந்த ஒருவன் இறந்துவிட, அவனைச் சார்ந்தோர் அந்த இழப்பைக் குறித்து மனம் தளர்ந்து இரங்கலாகப் பாடுவது ‘கையறுநிலை’. தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட இலக்கண நூல்கள் இது குறித்துப் பேசியுள்ளன. தமிழ்க் கவிதை வரலாற்றில், சக மனிதர்களின் இழப்பின் துயரத்தை வெளிப்படுத்தும் கையறுநிலைப் பாடல்களுக்கு எப்போதும் ஒரு மதிப்புமிக்க இடம் உண்டு. பெரும்பாலும் போரில் இறந்துபோன மன்னர்கள் குறித்தோ, வீரர்கள் குறித்தோதான் இவ்வகைப் பாடல்கள் அதிகமும் பாடப்பட்டன. கு.ஜெயபிரகாஷ் […]
Read more