கர்ஜனை

கர்ஜனை (பாகம் – 1) (பாகம் 2), இளையவேள் ராதாரவி, நக்கீரன் பதிப்பகம், விலைரூ.560 நடிகர் ராதாரவியின் வாழ்க்கை சம்பவங்களை சுவாரசியமாகக் கூறும் நுால். இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. ‘நக்கீரன்’ இதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. பிரபல நடிகர் எம்.ஆர்.ராதா, சிறையில் இருந்து விடுதலையானதில் இருந்து துவங்குகிறது. தகவல்கள் பரபரப்பு சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. இயல்பான செய்தி மொழியில் மொத்த வாழ்க்கை வரலாறும் சொல்லப்பட்டு உள்ளதால், வாசிக்க சுலமாக உள்ளது. முதல் புத்தகம் 60 இயல்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது பாகம், துணிவே துணை என நம்பிக்கை […]

Read more

மூளைக்குள் வாருங்கள்

மூளைக்குள் வாருங்கள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.212, விலை ரூ.220. புலன்களின் மூலமாக மூளைக்குள் செல்லும் தகவல்கள் எல்லாம் மூளையில் பதிய வைக்கப்படுவதில்லை. நிறைய தகவல்களை மூளை வீணடித்துவிடுகிறது. தகவல்களை சரி பார்க்காமலேயே சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தகவல்களை எடிட் செய்து தனக்குள் பதிந்து வைத்துக் கொள்கிறது. அவகாசம் கொடுத்தால் மூளை சரியாக தர்க்கம் செய்யும். அவசரப்படுத்தினால் மூளை குறுக்கு வழியைக் கடைப்பிடிக்கும். மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் – டெம்போரல் லோப் இரண்டும் சேர்ந்துதான் தற்காலிக நினைவுகளை வைத்திருக்கின்றன. இப்பகுதி சேதமடைந்தால் பார்த்தது, கேட்டது […]

Read more

101 கேள்விகள் 100 பதில்கள்

101 கேள்விகள் 100 பதில்கள், முனைவர் சு.தினகரன், அறிவியல் வெளியீடு, விலைரூ.80. பொதுமக்களிடையே அறிவியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள நுால். கேள்வி – பதில் பாணியில், அறிவியலுக்கு விளக்கங்கள் அமைந்துள்ளன. சாதாரணமாக அன்றாடம் எழும் கேள்விகளை, மிக எளிமையாக விளக்கி புரிய வைக்கிறது இந்த நுால். மழை நேரத்தில் எவ்வாறு கொசு சமாளிக்கிறது என்ற கேள்விக்கு தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சூழலியலை மிக எளிய அறிவியல் உண்மைகள் மூலம் விளக்குகிறது. அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால். நன்றி: தினமலர், 31/10/21 இந்தப் […]

Read more

சைவ சித்தாந்தம்: அடிப்படைகள்

சைவ சித்தாந்தம்: அடிப்படைகள், முனைவர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலைரூ.50. சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள், தத்துவத்தை எளிய நடையில், இனிய தமிழில் வழங்கியுள்ள நுால். தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தின் விளக்கம், அதன் பயனை எளிமையாக சொல்கிறது. பரம்பொருள் உயிர்களை ஈடேற்றும் கருவியாக இது உள்ளது. உயிர்களை ஆணவத்திலிருந்து விடுவிக்க தொடர்ந்து இயங்கும் கூத்தப் பெருமானை பற்றி விளக்குகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நுால். – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி: தினமலர், 31/10/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

ஜானகிராமம்

ஜானகிராமம், கல்யாணராமன், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.1175. பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய ஆய்வு மற்றும் அலசல் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். அவரது பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பில், 102 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று ஆங்கிலத்தில் உள்ளது. ஜானகிராமன் படைப்புகளை படித்து நுட்பங்களை உள்வாங்கி, கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு பார்வைகள் இடம்பெற்றுள்ளன. ஒரே படைப்பை பற்றி, பல கோணங்களில் அலசல்களும் உள்ளன. பேராசிரியர், எழுத்தாளர், வாசகர், மொழிபெயர்ப்பு வல்லுனர், பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாளர் என பல தரப்பினரும் […]

Read more

நாம் வணங்கும் சித்தர்கள்

நாம் வணங்கும் சித்தர்கள், த.உத்திரகுமாரன், பூம்புகார் பதிப்பகம், விலைரூ.575. பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்த சித்தர்களின் ஆன்மிகக் கருத்துகளை தெளிவாக, எளிய தமிழ் நடையில் விளக்கும் நுால். பெயர் மட்டுமே தெரிந்த சித்தர்களின் வரலாறும், அவர் தம் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளலாம். படிப்போருக்கு இன்பம் பயக்கும். ஜாதிப் பாகுபாடு கூடாது என்பதை சிவவாக்கியர், அவ்வையார், பாரதியார், குதம்பைச்சித்தர் பாடல்கள் மூலம் விளக்குகிறார்; அஷ்டமா சித்திகள் எட்டையும் விளக்கியுள்ளார்; அஷ்டாங்க யோகங்களையும் விளக்கி, தத்துவங்கள் 96 என்பதை பட்டியலிட்டுள்ளார். திருக்குறளுடன் ஒப்பிட்டுள்ளார். அபிராமி பட்டர், ராமலிங்க அடிகளார் […]

Read more

திறனாய்வியல்

திறனாய்வியல், ச. சிவகாமி, மாதவி பதிப்பகம், விலைரூ.100. திறனாய்வு செய்வது எப்படி என்ற வினாவிற்கு ஏற்ற விடையாய், வருங்காலத் திறனாய்வாளருக்கும் வாசல் திறக்கிறது. ஆய்வுக் கட்டுரை ஆக்கம் என்னும் முன்னுரையாய் அமைந்த முதல் கட்டுரை, திட்டமிடல், செயல்படல், முழுமையாக்கல் எனத் திறனாய்வுக் கட்டுரை எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்பதை விரிவாக விளக்கிச் செல்கிறது. பொருண்மைச் சிந்தனை என்ற கட்டுரை, எவ்வகைப் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்பதை முன்வைக்கிறது. திருவுந்தியார் என்னும் கட்டுரை, சைவ இலக்கியத்தை -சைவ சித்தாந்தத்தை ஆய்கிறது. நாட்டுப்புறவியலின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற […]

Read more

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு, ரஜனி ரஜத், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150. தினமலர் வாரமலர் இதழில் வெளியாகும், அந்துமணி கேள்வி – பதில்கள் பகுதியை பற்றிய ஆய்வு நுால். அரசியல், திரைப்படம், நாட்டு வளர்ச்சி, பொருளாதாரம், அறிவியல், சுற்றுப்புறச் சூழல், குடும்பம், பெண்கள் பற்றி அந்துமணி பதில்களை வகைப்படுத்தி அலசப்பட்டுள்ளது. சமுதாய விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்றவற்றில் அந்துமணி பதில்கள் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. […]

Read more

வியக்கவைக்கும் விண்வெளி கருந்துளைகள்

வியக்கவைக்கும் விண்வெளி கருந்துளைகள், நடராஜன், ஸ்ரீதர், ரெ. சந்திரமோகன், மணிமேகலைப் பிரசுரம், விலை 115ரூ. இயற்பியல் அதிசயங்களில் ஒன்று விண்வெளி கருந்துளை. அதீதமான ஈர்ப்பைக் கொண்டு உள்ளது. அதன் ஈர்ப்பாற்றல் பற்றிய நூல். எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்கள் அதன் வழி அமைய நேர்ந்தால் வெகுதூர கிரகங்களுக்குச் செல்வது இயலாத காரியமாகிவிடும். கருந்துளை பற்றிய அரிய தகவல்கள் நிறைந்த நூல். -ராம. குருநாதன். நன்றி: தினமலர், 31/10/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031389_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

நாளாம் நாளாம் திருநாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம், வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.280. அகங்காரத்தில் ஆரம்பிப்பதாக நினைத்த எழுத்தாளருக்கு அள்ளித்தரும் அன்னையின் வரம் அந்த நிமிடமே கிடைத்தபோது மனம் மைசூர்ப்பாகாய் கரைந்துவிட்டது. துணையாக கண்ணீர் சேர்ந்து உப்புச்சீடையாக மாறிவிட்டது. சில நேரங்களில் யாரும் தான் கேட்கமாட்டார்களே என நிஜமான, ‘மைண்ட் வாய்சில்’ மனசுக்குள்ளேயே பேசிய நிகழ்வு நடந்திருக்கும். உடனடியாக நிறைவேறும் போது அதை அனுபவிக்க முடியாமல் மனம் தடுமாறும். இங்கும் அப்படித்தான் அன்னையின் அன்பை நினைந்து மனம் கரைந்து உப்புச்சுவடுகளின் வழியே அப்பனை […]

Read more
1 2 3 4 8