திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள், கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 48ரூ. கிருபானந்த வாரியார் இந்த நூலில் 31 திருக்குறளைக் கூறி, அவற்றுக்கு பரிமேலழகர் உள்ளிட்ட சிலர் அளித்த விரிவுரைகளைத் தெரிவித்து, அந்தக் குறள்கள் வெளிப்படுத்தும் நீதிக்குத் தக்க சிறுகதைகளையும் சொல்லி இருக்கிறார். அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் அமைந்துள்ள இந்தக் கதைகள் அனைத்தும் படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 31/10/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000022890_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

பாட்டி சொன்ன பழங்களின் கதைகள்

பாட்டி சொன்ன பழங்களின் கதைகள், மலரடியான், கார்குழலி பதிப்பகம், விலை 150ரூ. ஆரஞ்சு, இலந்தை, நாவல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது, பேரக் குழந்தைகளுக்கு பாட்டி கதை சொல்லும் பாங்கில் தரப்பட்டு இருக்கின்றன. இந்தக் கருத்துகள், சிறுவர்கள் மனதில் பதியும் வண்ணம் தந்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 31/10/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழ்நூல் வரலாறு

தமிழ்நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், ஜீவா பதிப்பகம், பக். 440, விலை ரூ.360. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள், நிகண்டுகள், புராணங்கள், தல புராணங்கள், தனிப்பாடல் திரட்டு போன்றவை குறித்தும், தமிழ் வளர்த்த பெüத்தர்கள், கிறிஸ்தவர்கள், சைவ மடங்கள் குறித்தும், முஸ்லிம் புலவர்கள் குறித்தும் தெளிவாகவும், விரிவாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நூலைப் பற்றிக் கூறுமிடத்தும் அந்நூலிலுள்ள சில பாடல்களை ஆசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டுகிறார். இந்நூலில் முற்கால, இடைக்கால, பிற்கால நூல்களைப் பற்றியும் அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பது மட்டுமல்ல, […]

Read more

தானம், கொடை செட்டில்மெண்ட்

தானம், கொடை செட்டில்மெண்ட், அ.பரஞ்ஜோதி, ராஜாத்தி பதிப்பகம், விலைரூ.110. தான ‘செட்டில்மென்ட்’ எழுதுவது என்பது, பல சட்டங்களுடன் தொடர்புள்ளது. அவற்றை எல்லாம் புரிந்து கொள்வது கடினம். பல சட்ட நுால்களையும் உன்னிப்பாகப் படித்தால் தான், இந்த சட்டத்தின் அடிநாதம் புலப்படும். பல சட்டங்களையும் படிக்கும் சிரமத்தை போக்கும் வகையில், பல சட்டங்களில் உள்ள விதிகளையும் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது இந்த நால். தானம், கொடை வழங்குவதற்கான விதிகளை எளிமையாக விளக்குகிறது. சட்ட விளக்கங்களுடன், செயல் மாதிரிகளும் தரப்பட்டுள்ளன. எளிமையான விவரிப்பு, தானம், கொடை வழங்கும் பொருள் […]

Read more

வாட்டர் மெலன்

வாட்டர் மெலன், கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழில்:கே.நல்லதம்பி, வெளியீடு: யாவரும் பதிப்பகம், விலை: ரூ.180. புலப்பெயர்வின் தமிழ் வாழ்க்கை நவீன வாழ்வின் மிகப் பெரிய துயரங்களுள் ஒன்று அகதி வாழ்க்கை! 2020-ன் கணிப்பின்படி, தங்கள் நாடுகளை விட்டுப் பிற நாடுகளுக்குப் புகலிடம் தேடிச் சென்ற 28.10 கோடி அகதிகள் இருக்கிறார்கள். உலகின் மொத்த மக்கள்தொகையில் இது 3.6%. இதைத் தவிர, ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டிலேயே அகதிகள் காணப்படுகிறார்கள். இந்தியாவுக்குள் சுமார் 10 கோடி உள்நாட்டு அகதிகள் காணப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசும், ஏழ்மை நிறைந்த […]

Read more

புன்னகை ஒரு அரிய ரோபோ

புன்னகை ஒரு அரிய ரோபோ, மோகன் சுந்தரராஜன், அறிவியல் ஒளி, விலைரூ.90. கணினிகள் மட்டுமல்லாது ரோபோக்களின் செயல்பாடும் இனி பெருகிவிடும். அறிவியலின் வளர்ச்சியில் நாடு மேலும் முன்னேற்றம் கண்டுவிடும். இன்றைய தலைமுறை புரிந்து கொள்ளும் வகையில், ஒரு தொடர்கதை மாதிரி ரோபோக்களின் செயல்பாடுகளை அறிவுப்பூர்வமாக விவரிக்கிறார் இந்த நுால் ஆசிரியர். இது போன்று ஒரு ரோபோவுக்கு வைத்துள்ள பெயரே புன்னகை. ரோபோக்களை மனித கட்டளைக்குப் பணிய வைத்து, மனிதன் நலம் பெற உதவி செய்கின்றனர் என்பதை புரியும்படி விளக்கும் கதை. இன்று பழைய வரலாறு […]

Read more

உலகம் பிறந்த கதை!

உலகம் பிறந்த கதை!. சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், விலைரூ.200. புதிர்களின் உறைவிடம் இந்த பிரபஞ்சம். அறிவியல் இந்த புதிர்களுக்கு விடை தேடி விடுவிக்கிறது. இயற்கையை மிஞ்சிய பேராற்றல் இருக்க முடியாது. இந்த பேராற்றலில் அறிவியல் தேடி கண்டடைந்த தகவல்கள் கொண்ட நுால். நுால் மூன்று பெரும் பிரிவாக உள்ளது. முதல் பிரிவு, வான மண்டலம் பற்றியுள்ளது. அடுத்து, புதிர்கள் நிறைந்த பூமி பற்றியதாக உள்ளது. உயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது மற்றொரு பிரிவாக உள்ளது. இந்த பெரும் பிரிவுகளில் துணை தலைப்புகள் வகுக்கப்பட்டு, முறைப்படி […]

Read more

பெரியார் திரைக்கதை

பெரியார் திரைக்கதை, ஞானராஜசேகரன், காவ்யா, விலை 280ரூ. சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்ற ‘பெரியார்’ என்ற சினிமாவின் திரைக்கதை, ஒவ்வொரு காட்சிவாரியாக முழு விவரமாகத் தரப்பட்டு இருக்கிறது. திரைப்படத்தை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும் இந்த நூல் மூலம், பெரியாரின் வாழ்வில் நடந்த ஏராளமான ஆச்சரியங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 13/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், க.நா.சுப்ரமண்யம், தேநீர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.180. தமிழின் முக்கிய இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமண்யம் தான் நடத்திய “இலக்கிய வட்டம்’ இதழில் 1963 – 65 காலகட்டத்தில் எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இலக்கியத்தைப் படைப்பது, வாசிப்பது, விமர்சிப்பது என்ற அடிப்படையில் விரியும் க.நா.சு.வின் இலக்கியப் பார்வையை விளக்குவதாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. இலக்கியப் படைப்பு என்பது தனிமனித சிருஷ்டி. படைப்பாளியின் உள்ளத்தில் திரண்டு எழுகிற ஓர் உணர்ச்சியின் உந்துதலில் ஏற்படுவது என்பது நூலாசிரியரின் கருத்து. வாசிப்பவனின் ரசனை, வாசிப்பனுபவம் […]

Read more

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 230ரூ. பாட்டி தனது பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பாணியில், தமிழகத்தின் பாரம்பரியமான 75 குட்டிக் கதைகள் ஒவ்வொன்றும் முழுப்பக்கப் படங்களுடன் தரப்பட்டு இருககின்றன. வளரும் தலைமுறை குழந்தைகள் படித்துப் பயன்பெறவேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 13/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 5 8