பிரபஞ்சம் தோன்றிய வரலாறு
பிரபஞ்சம் தோன்றிய வரலாறு, பெ. ஹரி கிருஷ்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 134, விலை 55ரூ.
பல நட்சத்திரக் குடும்பங்கள் அடங்கியது காலக்ஸி, பல காலக்ஸீஸ் கொண்டது பிரபஞ்சம். இருண்ட வெளியல் சிதறிக் கிடக்கும், வான் துகள்களிலிருந்து இறைவன் உருவாக்கியது. பிரபஞ்சம் என்பது ஆசிரியரின் வாதம், ஒவ்வொரு மதத்திலும், இறைவனுக்கு ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்து மதத்தில் சிவம் என்றும், பரமாத்மா என்றும் அழைக்கின்றனர். இந்தப் புத்தகத்தில் ஆத்மாவை மையப்படுத்தி, ஆசிரியர் இறைவனை உணர்த்தியிருக்கிறார். ஆன்மிகத் தூக்கலாகத் தெரியும் விஞ்ஞான நூல். -எஸ். குரு, நன்றி: தினமலர், 09/06/13.
—-
குபேர வன காவல், காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், பக். 432, பக். 175ரூ.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட 1919-1947 வாக்கில், படித்த இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் நடை, உடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பின்பற்ற முயன்ற காலத்தில், இந்தக் கதை நடைபெறுவதாய், கற்பனையை முடுக்கி விட்டிருக்கின்றனர் ஆசிரியர். சரித்திரம், சமூகம், மந்திர, மாந்திரீகம், அமானுஷ்யம் என்று எல்லாவற்றையும் கலந்து மிக சுவாரஸ்யமாக கதையை நடத்திச் சென்றிருக்கிறார், ஒரு வித்தியாசமான படைப்பைப் படித்திதின் திருப்தியைப் பெறலாம். -சிவா நன்றி: தினமலர், 09/06/13.
—-
தெய்வமணம் கமழும் திருத்தலங்கள், பனையபுரம் அதியமான், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 268, விலை 100ரூ.
திருவாரூர், திருச்சுழி, திருப்பறம்பியம், காஞ்சிபுரம், திருமயிலாடி, ஆரணி, திருப்பூந்துருத்தி, குறிஞ்சிப்பாடி, முன்னூர், திருச்செங்காட்டங்குடி எனப் புராதன புராணப் பெருமைகள் கொண்ட பல தலங்களைத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். கோயில் மற்றும் ஸ்வாமி படங்களும் அழகு. நன்றி: சக்தி விகடன், 19/3/2013.