தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு,  பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக் – 134, விலை ரூ.100. இந்தியா மற்றும் பிற நாடுகளில் தேனீ வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கும் இந்நூல், தேனீக்களின் வகைகளை அவற்றில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக விவரிக்கிறது. மனிதர்களின் உறுப்பு மண்டலம் போல் தேனீக்களின் உறுப்புகளை, அவற்றின் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது. மேலும் மனிதர்கள் குடும்பமாக வசிப்பது போல் தேனீக்களும் இராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ என்று கூட்டமைப்புடன் செயல்படுகின்றன என்பதை அழகாக விவரிக்கிறது. நூலின் முதல் பாதி […]

Read more

காரிகா வனம்

காரிகா வனம் (சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்) , தொகுப்பாசிரியர்: சுப்ரபாரதி மணியன், காவ்யா, பக்.176, விலை ரூ.180. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் 15 சிறுகதைகள் அடங்கிய நூல். ‘பெண்களின் பார்வையில் உலகைக் காண்பது’ இச்சிறுகதைகளில் காணக் கிடைக்கிறது. குடிகார கணவனால் சின்னாபின்னமாகிப் போன குடும்ப வாழ்க்கை, அதனால் நெறி தவறி வேறு ஒருவனுடன் தொடர்பு, அதைக் கண்டித்து வீட்டை விட்டு வெளியேறும் வளர்ந்துவிட்ட பிள்ளைகளைச் சித்திரிக்கும் ‘சூதாடியின் வாரிசுகள்’ சிறுகதை, வளர்ந்த மகன் அம்மாவுக்கு அடங்காமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் எதிர்த்து எதிர்த்துப் பேசுவது, […]

Read more

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், சாத்தான்குளம் அ.இராகவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.168, விலை ரூ.150.  பண்டைக்காலத்தில் இந்தியாவுக்குத் தெற்கே, இந்து மகாசமுத்திரத்தில் பூமியின் நடுக்கோடு வரை பரவிக் கிடந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு சாவக நாடு. அது தமிழகம் அல்லது லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாகும். கடல்கோள்களால் இந்நிலப் பரப்பின் பெரும்பகுதி அழிந்தது போக, சிதறுண்ட தீவுகளில் ஒன்றாக இன்றைய சாவகத் தீவு (ஜாவா) உள்ளது. இத்தீவு பண்டைய தமிழகத்தின் தொடர்ச்சி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல சான்றுகள் […]

Read more

வள்ளுவர் காட்டும் உவமைகள்

வள்ளுவர் காட்டும் உவமைகள்,  பு.சி. இரத்தினம்,  மணிமேகலை பிரசுரம், விலை 90ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு இல்லாத சிறப்புகளே இல்லை எனலாம். ஏழு சீர்களில், உலகமே வியக்கும் படியான பல கருத்துகளைக் கூறியுள்ள நுால் திருக்குறளாக இருப்பதால், பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீரிய கருத்துகளைக் கூற வந்த திருவள்ளுவர், அக்கருத்தை மேலும் தெளிவாக உணர, பல உவமைகளையும் கூறி விளக்குகிறார். உவமைகள் பாடல்களுக்கு மேலும் அழகு தருவதால், அவை அணிகளாகின்றன. பிறருக்கு உதவி செய்பவரிடம் உள்ள செல்வம், ஊர் நடுவே பயன்மரம் பழுத்தது போல […]

Read more

தேசத் தந்தை மகாத்மா காந்தி

தேசத் தந்தை மகாத்மா காந்தி,  இராம.மெய்யழகன்,  ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 200ரூ. இன்றைய உலகிற்கு ஏற்ற விதை புத்தகங்கள். அந்த வகையில், ‘தேசத் தந்தை மகாத்மா காந்தி’ என்ற புத்தகம், இன்று மற்றும் நாளைய எதிர்கால மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இருக்கும்.இப்புத்தகம் காந்தியடிகளின் பிறப்பு முதல், இறப்பு வரையில் உள்ள வாழ்க்கை வரலாறு, காந்தியடிகள் பெற்றோரின் நன்னடத்தையைப் பார்த்து, அதைப் போலவே தன்னுடைய வாழ்க்கை நெறிமுறைகளையும் அமைத்துக் கொண்டார். மகான் அவருடைய மனைவியை மதிப்பும், மரியாதையுடனும் நடத்தினார். அஹிம்சையின் மூலம் தன் […]

Read more

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, ஆசிரியர் : மு.நீலகண்டன்,  கனிஷ்கா புத்தக இல்லம், விலை160ரூ. பரந்து காணப்படும் பவுத்த சமய வரலாற்றில், ‘கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு’ என்ற பகுதியை எடுத்து, ஆசிரியர் நீலகண்டன் கொங்கு நாட்டில் பவுத்த மத வளர்ச்சியை சிறப்பாகவும், மிக நுணுக்கமாகவும் காட்டியுள்ளார். புத்தரது பெயரைக் கொண்ட புலவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்தனர் என்பதையும் இவரது நுாலின் மூலம் அறியலாம். கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக அழைக்கப்படும் கரூர் என்னும் கருவூர்ப் பற்றியும், கரூரில் வாழ்ந்த சங்கப் […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, ஆசிரியர் : இரா. மோகன், வெளியீடு: வானதி பதிப்பகம், விலை 150 ரூ. மூல நுாலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அணிந்துரைகள் ஏற்படுத்தும். ஏற்றுக்கொண்ட நுாலின் ரசமான பகுதிகளை ஆசிரியர் குறிப்பிடுவது நேர்த்தியானது. மு.வ.,வின் செல்லப் பிள்ளை’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அழைக்கப் பெறும் இரா.மோகன், சாகித்ய அகாடமிக்காக எழுதிய கு.ப.ராஜகோபாலன், கல்கி, முடியரசன், மீரா குறித்த ஆய்வு நுால்கள் எல்லாம் தனிப் பெரும் சாதனை எனச் சொல்லலாம். அணிந்துரை அணிவகுப்பு என்ற இந்த நுாலிலும் ஆழம் […]

Read more

சிந்தனை, செயல், வெற்றி

சிந்தனை, செயல், வெற்றி,  மெ.ஞானசேகர், கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்,  பக்.260, விலை ரூ.200,  சிந்தனை, செயல், வெற்றி என்ற தத்துவத்தைப் பின்பற்றினால் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதற்கான வழிகளை பல்வேறு வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய எடுத்துக்காட்டுகளுடன் கூறியுள்ளார் நூலாசிரியர். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் நம்மைவிட மேலானவர் என்று நினைப்பது நல்லது. அத்துடன் நம்முடைய கற்பனை, சிந்தனை, முன்னேற்றத்துக்கான செயல்பாடுகள், நேர்மறை எண்ணங்கள், பழக்க வழக்கங்களில் சிறிய அளவிலான மாற்றம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே போதும், நாம் எண்ணிய வாழ்க்கையைப் […]

Read more

பாரதி ஓர் ஆச்சரியம்

பாரதி ஓர் ஆச்சரியம்,  ஜெ.கமலநாதன்,  குமரன் பதிப்பகம், பக்.96, விலை ரூ.50. “பாரதி என்ற மகாகவிஞனிடம் நான் காணும் ஐந்து மிகப் பெரும் பெருமைகளை நீங்கள் உணரும்படி செய்வதே இந்நூலின் நோக்கம்” என்று கூறும் நூலாசிரியர் அந்த ஐந்து பெருமைகளைப் பற்றி இந்நூலில் எடுத்துரைத்துள்ளார். உரை விளக்கம் எதுவும் தேவையில்லாமல், எளிய நடையில் பாரதியார்தான் தமிழில் முதன்முதலில் கவிதை புனைந்தார்; அதற்குப் பின் அவர் மரபைப் பின்பற்றி பலரும் கவிதைகள் எழுதினர். தமிழில் புதிய போக்கு உருவாக பாரதி காரணமாக இருந்தார். இது பாரதியின் […]

Read more

நகுலன் கதைகள்

நகுலன் கதைகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா, பக்.349, விலை ரூ.350. ஐந்து குறு நாவல்கள், 32 சிறுகதைகள், இரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் என 1959 முதல் 1995 வரை கணையாழி உள்பட பல்வேறு இதழ்களில் வெளியான நகுலனின் 39 கதைகளின் தொகுப்பு இது. சில கதைகள் விடுபட்டுள்ளன. யதார்த்த நிகழ்வுகளை காட்சிப்படுத்தி தேவைக்குத் தக்க சில இடங்களில் புனைவை சேர்த்து இரண்டையும் வாசகரால் பிரித்தறிய முடியாதவாறு ஒவ்வொரு கதைகளும் உள்ளன. சிறுகதைகளில் வர்ணனைகளை மிகவும் மட்டுப்படுத்தி ஓரிரு நிமிடங்களில் கதைகள் முற்றுப் பெறுகின்றன. […]

Read more
1 134 135 136 137 138 505