முதியோர், போஸ்கோ மற்றும் வாடகைச் சட்டங்கள்

முதியோர், போஸ்கோ மற்றும் வாடகைச் சட்டங்கள், வெ.முருகன், சி.சீதாராமன் அண்டு கோ, மொத்த விலை: ரூ.365 உரிமைகள் அறிவோம்… குற்றவியல் சட்டங்களைத் தீர்ப்பு விவரங்களுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட வழக்கறிஞர் வெ.முருகன், தொடர்ந்து முக்கியமான சட்டங்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துவருகிறார். முதிய குடிமக்களின் மற்றும் பெற்றோர்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் 2007, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போஸ்கோ) 2012, தமிழ்நாடு நிலக்கிழார்களின் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகளை மற்றும் பொறுப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2017 ஆகியவை வெ.முருகனின் தமிழாக்க வரிசையில் சமீபத்திய வரவுகள். இயற்றப்பட்ட சட்டத்துடன் […]

Read more

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு வேணுகோபால், வானதி பதிப்பகம், விலை 50ரூ. நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும், வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர்   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026683.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம்

வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம், வை.கண்ணன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 140, விலை 120ரூ. வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்’ நுாலில், பப்பாளி, முருங்கை உள்ளிட்ட, 17 மூலிகைகளின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. குடியிருக்கும் வீட்டில் எந்த பகுதியில் எந்த மூலிகையை பயிர் செய்து பயன் பெறலாம்? எப்படி பயிரிட வேண்டும் என்னும் செய்திகளை எளிமையாக விளக்குகிறது இந்நுால். ஒவ்வொரு வீட்டிலும் மூலிகை தோட்டம் அமைப்பதால், சிறு சிறு உபாதைகளுக்காக மருத்துவரை நாடவேண்டிய அவசியமிருக்காது என்ற விழிப்புணர்வை உணர்த்துகிறார் நுாலாசிரியர் கண்ணன். நன்றி: தினமலர், 8/12/19 […]

Read more

கோளும் குறளும்

கோளும் குறளும், நெல்லை வசந்தன், புதிய தலைமுறை பதிப்பகம் வெளியீடு, பக். 120, விலை 80ரூ. கையடக்க நுாலில், வாழ்க்கைக்கு வழிகாட்டும் குறள், ஜோதிடத்தை தெளிவாக சுட்டிக்காட்டுவதையும், மறுபிறப்பை உணர்த்துவதையும், முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட நுால். ஆசிரியர் ஜோதிட நுணுக்கம் தெரிந்தவர் என்பதால் இப்புதிய பார்வை காணப்படுகிறது. – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், 8/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029988.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும், 12 தொகுதிகள், பள்ளத்தூர் பழ.பழனியப்பன், திருவரசு புத்தக நிலையம், விலை 3880ரூ. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் கூறப்பட்ட நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதுவது என்பது மிகப்பெரிய சாதனையாகும். இன்றைய மக்கள் எளிதில் படித்து மகிழும் வண்ணம், பழகு தமிழில் உரை எழுதியுள்ளார் பழனியப்பன். பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத்திற்கு முன்பு உரை எழுதியிருந்தாலும், அவை மணிப்பிரவாள நடையில் (வடமொழியுடன்கூடிய தமிழ்ச்சொற்கள்) இருப்பதால், இக்காலத்தவர் படிக்கையில், அயர்ச்சியே ஏற்படும். அதைத் தவிர்க்க இப்பெரும் முயற்சி எனலாம். ‘சொட்டுச்சொட்டென்ன’ என்ற […]

Read more

வைணவம் வளர்த்த மகான்கள்

வைணவம் வளர்த்த மகான்கள், ஆர்.வி.பதி, நிவேதா பதிப்பகம், விலை 150ரூ. வைணவம் வளர்த்தவர் என்றதும் பன்னிரு ஆழ்வார்களையே நினைப்போம். ஆனால், வைணவத்தை எங்கும் பரப்பிய, 32 மகான்களை, இந்த நுாலில் மிகச் சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளார். வைணவ குரு மரபில் முதல்வர் நாராயணர், இரண்டாம் ஆச்சார்யர் பெரிய பிராட்டியார், பின், விஷ்வக்சேனர் இவரே நம்மாழ்வாராக அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய் மொழியாகப் பாடியவர். பெருமாள் கோவில்கள் தலையில் சாத்தப்படும் ஸ்ரீசடாரி, நம்மாழ்வார் சடகோபன் பெயரால் வழங்கப்படும் பெருமாள் பாதங்கள். பல நுாற்றாண்டுகளுக்கு முன், ‘திருமலை […]

Read more

தண்டோராக்காரர்கள்

தண்டோராக்காரர்கள், சு.தியடோர் பாஸ்கரன், தமிழில்: அ.மங்கை, அகநி வெளியீடு, விலை: ரூ.220 நம்பினார். காங்கிரஸ் ஆதரவாளரான அவர், சினிமா நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம் ஆகிய தலைவர்களோடும் நாராயணன் தொடர்புகொண்டிருந்தார். தனது வீட்டில் மிகுந்த விளம்பரத்தோடு அந்நியத் துணி எரிப்பை நடத்திவிட்டு, அவர் கதர் அணியத் தொடங்கினார். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தலைவர் என்ற முறையில், அவர் காங்கிரஸ் நிகழ்வுகள் பலவற்றைக் குறித்த செய்திச்சுருள், குறும்படங்களையும் தயாரித்திருந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் நாட்டுத் திரைப்பட மையங்களுக்குப் பயணித்தார். ‘தி இந்து’ […]

Read more

மனசு போல வாழ்க்கை 2.0

மனசு போல வாழ்க்கை 2.0, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.100 மனம் குறித்த அலசல் கட்டுரைகள், கேள்வி-பதில் பகுதியின் தொகுப்பே இந்தப் புத்தகம். இதைப் படிக்கும் வாசகருக்குத் தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் உதவும். நன்றி: தமிழ் இந்து, 1/2/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நிலமடந்தைக்கு

நிலமடந்தைக்கு, நரோலா, தடாகம் வெளியீடு, விலை: ரூ.100 ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை நிலவுரிமை பெறுவதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தம்பதியர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இளமைக் காலம் தொடங்கி இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் வரை என அவர்களுடைய எழுபதாண்டு கால சமூக வாழ்க்கையைச் சுருக்கமாக அறிந்துகொள்வதற்கான புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து, 20/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ

ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ, அதுல்ய மிஸ்ரா, ரூபா வெளியீடு, விலை: ரூ.295 சேலத்தில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் போஸ், ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று மணிப்பூர் மாநிலத்தில் பணியாற்றுகிறார். மணிப்பூர்-மியான்மர் எல்லைப் பகுதியில் மோரே என்ற சிற்றூரில் அன்றைய பர்மாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ் அகதிகள் பெருமளவில் வசித்துவருகின்றனர். திருமணமாகாத ‘தாத்தா’ என்று அழைக்கப்பட்டுவரும் தமிழர் ஒருவர், தொடர்ந்து செடிகளை வளர்த்து பொட்டல் காடுகளை உருமாற்றுகிறார். இவரைச் சந்தித்த பிறகு அந்த அதிகாரியிடம் ஏற்பட்ட மனமாற்றம் எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது என்பதை நாவலாக்கியிருக்கிறார் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான […]

Read more
1 148 149 150 151 152 505