என் சரித்திரம்

என் சரித்திரம், உ.வே.சாமிநாதையர், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.400. புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.395   டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றான ‘புத்துயிர்ப்பு’ நாவல், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தன்வரலாற்று நூலான ‘என் சரித்திரம்’ என இரண்டு முக்கியமான புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது ‘அடையாளம்’ பதிப்பகம். விலை குறைவு என்பதற்காகத் தயாரிப்பில் ஏதும் சமரசம் இல்லை. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இரண்டு புத்தகங்களுக்கும் தலா ரூ.400 என்பதாக விலை நிர்ணயித்திருக்கிறார்கள். நன்றி: தமிழ் இந்து, […]

Read more

அருளே ஆனந்தம்

அருளே ஆனந்தம், பி.சுவாமிநாதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200 மகா பெரியவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் அவரது அறநெறி உரைகளையும் சிந்தனைகளையும் ‘காமதேனு’ வார இதழில் பி.சுவாமிநாதன் தொடராக எழுதினார். அது இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. தொடரோடு இணைந்து வெளியான ஏ.பி.ஸ்ரீதரின் தத்ரூபமான ஓவியங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் இடம்பெற்றிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 20/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஏர்வாடியார் கருவூலம்

ஏர்வாடியார் கருவூலம், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், பக். 114, விலை 70ரூ. கலைமாமணி ஏர்வாடியார் எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இந்த நுாலின் ஆசிரியர், ஏர்வாடியாரின் படைப்புலகம் குறித்து இரு பெரும் தகுதிகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். ஒன்று, ஏர்வாடியார் தன் படைப்புகள் மூலம் எவ்வாறு மற்றவர்களை ஈர்த்தார் என்பது. மற்றொன்று, அவர் தன் திறனாய்வுகள் மூலம் எவ்வாறு படைப்பாளிகளை ஊக்குவித்தார் என்பது. சரியாகச் சொன்னால் இந்த நுாலாசிரியரான கவிஞர் ரவியை, அவர் எவ்வாறு ஊக்குவித்தார் […]

Read more

ஆதார் கார்டு A to Z

ஆதார் கார்டு A to Z, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 230ரூ. இந்திய மக்களின் ஆதாரத்திற்கான அடையாளமாக இருக்கும், ‘ஆதார்’ அடையாள அட்டை பற்றி, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிமை தமிழிலும், விளக்கங்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார், இதன் ஆசிரியர். ஆதார் அடையாள எண் பெறுவது எப்படி என்பது துவங்கி, ‘ஆன்லைன்’ மற்றும் அலுவலகத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது எப்படி என்பது வரை விபரமாக குறிப்பிட்டு உள்ளார். ஆதார் மையங்கள் எங்கெங்கு உள்ளன; தொலைந்து போனால் மீண்டும் பெறுவது எப்படி […]

Read more

மனம் சொல்லுமே மகிழ்ச்சி

மனம் சொல்லுமே மகிழ்ச்சி, ந.ஸ்ரீதர், மணிமேகலைப் பிரசுரம், பக். 96, விலை 80ரூ. அன்றாட நிகழ்வை சுட்டிக்காட்டி, அதன் மூலம் நமக்கு வாழ்க்கையின் புரிதலை, ‘மனம் சொல்லுமே மகிழ்ச்சி’ என்ற நுாலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வழியே காட்டுகிறார். நாளை நிகழவுள்ள நிகழ்வுக்காக, இன்றுள்ள பொழுதை வாழ வழியில்லாமல் தவிக்கும் மனிதர்களுக்கு, ‘நம் மனதில் உள்ள குப்பைகள்’ என்ற தலைப்பில் புத்துணர்ச்சி மலரச் செய்யும் பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

உடல் அரசியல்

உடல் அரசியல், ஜெகாதா, மீனாட்சி புத்தக நிலையம், பக்.232, விலை ரூ.200. உடல் மொழி பற்றி கேள்விப்பட்டிருப்போம். பேசும்போதும், பேசுவதற்கு மாற்றாகவும் உடல் மொழி உதவுகிறது. இந்த “உடல் அரசியல்’ நூல் கூட ஒருவிதத்தில் உடலின் பேச்சை – உடலின் மொழியை – நாம் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகிறது. நான் என்று ஒருவர் தன்னை நினைத்துக் கொள்வது அவருடைய சிந்தனை, மனோபாவம் ஆகியவை மட்டுமல்ல, இந்த உடலும் சேர்த்துத்தான் என்பதால் உடலைப் பற்றி தெரியாத விவரங்களை இந்நூல் சொல்லித் தருகிறது. நமது உடலில் உள்ள […]

Read more

சிலம்பொலியார் பார்வையில்

சிலம்பொலியார் பார்வையில், கே.ஜீவபாரதி,  ஜீவா பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. நூலாசிரியர் தொகுத்த”பட்டுக்கோட்டையார் பாடல்கள்' என்ற நூலுக்கும், நூலாசிரியர் எழுதிய புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும் மற்றும் அப்துற்-றஹீம் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு ஆகிய நூல்களுக்கும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். சிலம்பொலி செல்லப்பனாரின் 85 -ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு நூலாசிரியர் எழுதிய கட்டுரை பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் சிறப்புகளை சிலம்பொலி செல்லப்பனார் எடுத்துக் கூறுகிறார். “மக்களின் இன்றைய தேவைக்கேற்ற புதுமையான […]

Read more

உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து,

உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து, இரா.திருநாவுக்கரசு; இரண்டு பாகங்கள்; குமரன் பதிப்பகம், ஒவ்வொரு பாகமும் பக்.168, விலை ரூ.150. தினமணி இளைஞர்மணியில் தொடராக வெளிவந்த 52 கட்டுரைகளின் நூல் வடிவம். ஒருவர் தன்னையறிந்தால், தன் திறமைகளை, ஆற்றலை அறிந்தால் வாழ்வில் உயர முடியும். மனிதன் உடம்பால் ஆனவன். அவனுக்கு மனம் இருக்கிறது. எண்ணங்கள், குறிக்கோள்கள் இருக்கின்றன. வாழ்வில் முன்னேற திட்டமிட வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க வேண்டும். கட்டுபாட்டோடு இருக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும். […]

Read more

அறம் கூறும் ஆத்திசூடி

அறம் கூறும் ஆத்திசூடி, துரை. சக்திவேல், மணிமேகலைப் பிரசுரம், பக். 160, விலை 100ரூ அறம் செய விரும்பு முதல், சக்கர நெறி நில் வரையிலான அவ்வையின் நீதி போதனைகளை, புனைப்புக் கதை வடிவில் சித்திரக் காட்சிகளுடன் எளிய நடையில் படைத்துள்ள ஆசிரியர் சக்திவேல் பாராட்டிற்குரியவர். கணினி மயமான இன்றைய வாழ்க்கைச் சூழலில், நன்னெறி புகட்டும் அறக் கருத்துகளை  சிறார்களுக்கு வழங்கும் நல்ல வாழ்வியல் நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – த.பாலாஜி நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள்

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள், எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. உலகம் தோன்றியபோதே தமிழகமும் தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டமும் எப்படி தோன்றியது என்று வரலாறு இருக்கிறது. ஆனால், மதுரை எப்போது தோன்றியது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மாவட்டம் என்கின்றனர் சிலர். எனவே, கோவில் மாநகர், அரசியல் நகரம், துாங்கா நகரம், பண்பாட்டு நகரம், கடம்பவனம் என, பல்வேறு […]

Read more
1 149 150 151 152 153 505