உலகத் தமிழ்க் களஞ்சியம்

உலகத் தமிழ்க் களஞ்சியம், (3 தொகுதிகள்), உமா பதிப்பக வெளியீடு, விலை: ரூ.3,000 தமிழ், தமிழர்களை முதன்மைப்படுத்தி தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், ஆளுமை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் கலைக்களஞ்சியம் இது. 900 இலக்கணக் குறிப்புகள், 700 தாவரங்களைப் பற்றிய குறிப்புகள், 100 ஆறுகளைப் பற்றிய விவரங்கள், 800 இதழ்களைப் பற்றிய குறிப்புகள் என 39 பிரிவுகளில் 16,000-க்கும் மேற்பட்ட செய்திகளை உள்ளடக்கியிருக்கும் இந்நூல் 2,500 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 22-1-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027683.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மஸ்னவி

மஸ்னவி, ஜலாலுத்தீன் ரூமி, தமிழில்: நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம், ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் வெளியீடு, மொத்த விலை: ரூ. 3,700 (7 தொகுதிகள்) உலகின் கவிதைப் பேரிலக்கியங்களுள் பாரசீக சூஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ‘மஸ்னவி’யும் ஒன்று. 27,000 வரிகளில் ஆறு பாகங்களாக வெளியான கவிதைப் பொக்கிஷம் இது. கி.பி. 1258-ல் எழுதத் தொடங்கி 1273-ம் ஆண்டு தனது மரணம் வரை எழுதிய நூல் ‘மஸ்னவி’. இந்த நூலை ஏழு தொகுதிகளாக நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம் மொழிபெயர்த்திருக்கிறார். ரூமியின் ‘மஸ்னவி’ பெருந்தொகுப்பு தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய […]

Read more

என்றும் காந்தி

என்றும் காந்தி, ஆசை, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.250 சென்னைப் புத்தகக்காட்சியில் சூடாக விற்பனையாகும் புத்தகங்களுள் ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ நூலும் ஒன்று. காந்தியின் 150-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் விதமாக வெளிவந்த இந்தப் புத்தகம் அனைத்துத் தரப்பினரும் காந்தியை அறிந்துகொள்ளும் பொருட்டு எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல். காந்திக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.‘ நன்றி: தமிழ் இந்து, 21-1-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029787.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சுவேதாச்’வதர உபநிஷத்

சுவேதாச்’வதர உபநிஷத், பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 280, விலை 350ரூ. ‘சுவேதம்’ என்றால் வெண்மை; துாய்மையையும் குறிக்கும். ‘அச்வதரம்’ என்பது குதிரை இனம். ஐவகை பிராணன்களையும் – புலன்களையும் குதிரை உவமையால் காட்டி வேதாந்த ரகசியத்தை ப்ரம்மம் மூலம் கூறுகின்றன. அனந்தம், சத்தியம், ஞானம் பற்றிய ரகசிய கேள்விக்கு விடை இப்புத்தகம் என்றால் மிகையாகாது. இறவா நிலைக்கு இட்டுச் செல்லும் வேதாந்த ரகசியம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – த.பாலாஜி நன்றி: தினமலர், 19/1/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

திருக்கேதீச்சரம் சிவபூமி

திருக்கேதீச்சரம் சிவபூமி, மறவன்புலவு க.சச்சிதானந்தன், காந்தகளம், பக்.72, விலை 80ரூ. தல வரலாற்றில் பண்டைய தமிழ்ச் சொற்களின் மூலம் ஆசிரியர் வாசகர்களை வியக்கச் செய்கிறார். கேது முனிவர் வழிபட்ட சிவன் பற்றிய சிறப்பைச் சொல்கிறது இந்நுால். காலக் கணக்கை திருவள்ளுவர் ஆண்டு, தி.பி., – தி.மு., என புதியதாய் விளக்கம் தருகிறார். மகா துவட்டாபுரம் முதல் கத்தோலிக்கர் காலம் வரை வாழ்ந்த மன்னர்கள் மற்றும் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளைச் சொல்கிறது இந்நுால். எளிய விலையில் புராதன சொற்கள் அடங்கிய குறுநுால் எனலாம். நன்றி: தினமலர், […]

Read more

மதுரை வீரன் கதைகள் மறுபார்வை

மதுரை வீரன் கதைகள் மறுபார்வை, சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.290, விலை 230ரூ. வீரமும், விவேகமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவன் மதுரை வீரன். இவன், காசியிலே பிறந்து பொம்மண சீமையிலே வளர்ந்து, மதுரையிலே தெய்வமாகிறான். மதுரையில் தெய்வமானதால் இவன் மதுரை வீரனாகிறான். சாதாரண மனிதனைப் போலவே மதுரை வீரனுக்கும் காமம், கொள்ளை, கொலை ஆகிய தீய பண்புகள் இருந்துள்ளன. இவனைப் பற்றிய கதையை தற்காலத்தில் பரப்பிய பெருமை திரைப்படத்தையே சாரும். எனினும், மதுரை வீரனைக் கதைப் பாடல்களும், வில்லுப் பாடல்களும், கூத்துப் பாடல்களும், கோலாட்டப் பாடல்களும் […]

Read more

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள்

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், பக்.223, விலை 250ரூ. செல்லமுத்து வருவாய் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், கவிஞர் என்ற எழுத்து பணியில் இருந்து ஓய்வு பெறாமல் தொடர்கிறார். காலத்தால் அழியாத என்.எஸ்.கிருஷ்ணனின் கலையுலக பயணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர் பாடி, நடித்த, 176 பாடல்களையும், மதுரம் அம்மையாருடன் இணைந்து நடித்த, 74 படங்களையும் நுால் வழியே தொகுத்து அளித்ததன் மூலம் சினிமா மீதும், கலைவாணர் மீதும் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது. கலை வித்தகனின் நடிப்பு, குணம், […]

Read more

புலம்பெயர்ந்த பறவைகள்

புலம்பெயர்ந்த பறவைகள், டாக்டர் டி.எம்.ரகுராம், திசை எட்டும் வெளியீடு, பக்.76, விலை 60ரூ. உலகப் புகழ் பெற்ற மூத்த கவிஞர் சச்சிதானந்தன் துவங்கி, இளம் கவிஞர்கள் வரை பலரின் படைப்புகள் அடங்கிய மலையாள மொழிக் கவிதைகளின் தொகுப்பு இந்நுால். ‘வயல் வெளியின் மடியில் கனவுகளால் வலைகள் பின்னி, காற்றுடன் வேடிக்கை பேசி செடியுடன் சேர்ந்து நின்ற காலம். என் மெய்யும் மனமும் அன்று மிருதுவாய் இருந்தது. ஈரத்தின் துடிப்பு செடியிலிருந்து வேறுபட்டு எங்கோ தொலைதுாரம் சென்றடைவதற்குள், காற்று என் ஜீவனின் ஆதாரமான நீரனைத்தும் வற்ற […]

Read more

செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியச்கூறுகள்

செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியச்கூறுகள், வே.நிர்மலர் செல்வி, நெய்தல் பதிப்பகம், பக். 272, விலை 300ரூ. ஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன், வாய்மொழி இலக்கியமே அனைத்து மொழியிலும் தோன்றியிருக்கும். அந்த வகையில் காலங்காலமாக வாய்மொழியில் நிலைபெற்ற இலக்கியங்களே நாட்டுப்புற இலக்கியங்கள் என அச்சாக்கம் பெற்றன. இதுவே, தனிப்பெரும் துறையாக உருப்பெற்றது. நாட்டுப்புறவியல் தொடர்பான பல கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற பலரது சிந்தனைகளை இந்நுால் உள்ளடக்கியுள்ளது. நுாலில் மொத்தம், 27 கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலான ஒப்பீட்டு நிலையிலானவை. இவை, செவ்விலக்கியங்களில் நாட்டுப்புறக் […]

Read more

மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன், ஜெயசூர்ய குமாரி, சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை 250ரூ. சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில், 20 வயது இளைஞர்கள் சமூக வலைதள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள் செய்து கொண்டிருக்க, 18ம் நுாற்றாண்டில் அதே இளம் வயதில் ஒரு ஒப்பற்ற மாவீரனாக விளங்கிய நெப்போலியனின் நிகரற்ற வரலாறே இந்நுால்! பிரெஞ்சின் சூழ்ச்சியாலும், ஆயுத பலத்தாலும், கொடுமைகளாலும் கொந்தளித்திருந்த கார்சிகாவில், கருவில் குழந்தையைச் சுமந்து கணவனோடு போர்க்களத்தில் இருந்த வீரப்பெண்மணி வெட்டீசியாவுக்கு, ஆகஸ்ட் 15, 1769ம் ஆண்டு பிறந்த சரித்திர நாயகன் தான் […]

Read more
1 151 152 153 154 155 505