உயிர்ச்சுழி

உயிர்ச்சுழி, பாரதிபாலன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.192, விலை 180ரூ. எந்த வீட்டில் இருக்கிறது இப்போது திண்ணை. புழுதி அடங்க எந்த வாசலும் தெளிக்கப் படுவதில்லை. புள்ளியிட்ட கோலமின்றி புழுதி அடித்துப் பூத்துக் கிடக்கிறது. ‘செம்மண் கோலமோ, மாக்கோலமோ, நெளி கோலமோ நெஞ்சில் மட்டும் தான். ஸ்டிக்கரிலே எல்லாம் வந்தாச்சு கிழித்து எறிவதற்குச் சவுகரியம்’ என்று பண்பாட்டுச் சிதைவை ஆதங்கத்தோடு சுட்டி, ‘நம்முடைய அடையாளங்களை நம் தாய் மண்ணில் இன்னமும் தோண்டி எடுக்க முடியும்’ என்ற நுாலாசிரியர், பல்வேறு இதழ்களில் வெளியான, 16 சிறுகதைகள் […]

Read more

அலர்ஜி

அலர்ஜி, டாக்டர் கு.கணேசன், கிழக்கு பதிப்பகம், பக். 135, விலை 140ரூ. டாக்டர் ஆன நுாலாசிரியர் தமிழ் நுாலாக இதைப் படைத்திருப்பது சிறப்பாகும், உடலில் ஒவ்வாத கிருமிகளை வெளியேற்றும் முறையை சுருக்கமாக அலர்ஜி எனலாம். இதற்கான மருத்துவ விளக்கங்களை தரும் ஆசிரியர், சாதாரணமாக காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருந்துகளை இஷ்டப்படி வாங்கிச் சாப்பிட்டு ஒவ்வாமையை வரவேற்கக்கூடாது என்கிறார். அழகுசாதனப் பொருட்கள், அதிக வெயிலில் அலைச்சல் உட்பட பல அலர்ஜி கூறுகளை ஏற்படுத்தும் என்ற அவரது கருத்துக்கள் உட்பட பல விஷயங்கள் பலருக்கும் பயன்படும். நன்றி: […]

Read more

நம்மாழ்வார்

நம்மாழ்வார், முகிலை ராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 96, விலை 100ரூ. தற்போது துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்குருகூரில் தோன்றியவர் நம்மாழ்வார் என்னும் மாறன். இவரது காலத்திற்குப் பின், இந்த ஊர் ஆழ்வார்திருநகரி எனப் போற்றப்படுகிறது. குறுநில மன்னனான காரிக்கு மகனாகப் பிறந்தும், அரச வாழ்க்கையைத் துறந்து, திருக்குருகூரில் உள்ள ஆதிநாதர் கோவிலில் நிற்கும் புளிய மரத்தடியில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். யாரிடமும் பேசாமலும், எந்தச் செயலிலும் ஈடுபடாமலும் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரைப் பார்த்ததும் அசைந்து கொடுத்து அவரது கேள்விக்குத் தத்துவ விளக்கமாகப் […]

Read more

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள், சி.வீராகு, சத்யா பதிப்பகம், பக். 178, விலை 100ரூ. உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றனர். ஆனால், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் சாதனையாளராகத் திகழ்பவர்கள் ஒரு சிலரே. அந்தச் சாதனையாளர்களைப் பற்றிய தொகுப்பே இந்நுால். சாதனையாளர்களை துறை அடிப்படையில், அறிவியல், சட்டம், இயல், இசை, நாடகம், வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள், புரட்சியாளர்கள், நீச்சல், மனிதாபிமானம், சிந்தனையாளர் எனப் பகுத்து எளிமையாகவும், அழகாகவும், அவர்களின் சாதனைகளை எடுத்துரைக்கிறது இந்நுால். ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும், தலைவராகவும் திகழ்ந்த அப்துல் கலாமில் துவங்கி, கிரேக்க நாட்டு பிளேட்டோவில் முடிகிறது […]

Read more

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும்

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக். 192, விலை 180ரூ. தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நுால். இந்நுாலின் கருத்துகள் சில, பிராய்டின் கனவுக் கோட்பாட்டுடன் ஒத்துப் போவதை ஒப்பிட்டு ஆய்ந்துரைக்கிறது இந்நுால். தொல்காப்பியன் அகம், புறம் என மனித வாழ்வைப் பகுப்பது போன்று பிராய்டு காமத்தையும், மூர்க்கத்தையும் மனித உள்ளுணர்ச்சிகள் என்று காட்டுகிறார் என ஒப்பிட்டுக் காட்டுகிறது. சிக்மண்ட் பிராய்டைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில், அவரது கனவு நுாலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளைத் தொல்காப்பியம் கூறும் உள்ளுறை, […]

Read more

இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் – திருக்கோயில்), குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம், பக்.472, விலை ரூ.750. இராஜேந்திர சோழனின் வரலாற்றை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் விடுபட்டுப் போனவற்றை விரிவாக எழுதும் நோக்கில் இந்த வரலாற்று நூல் படைக்கப்பட்டுள்ளது. முதலாம் இராஜ ராஜனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் (கி.பி.1012 – 1044) வரலாற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது. நூலின் முதல் பகுதியில் பிற்காலச் சோழர் மரபு பற்றி சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.முதலாம் ராஜேந்திரன் […]

Read more

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.88, விலை ரூ.75. நூலாசிரியர் பல நிறுவனங்களில் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்திய அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருக்கிறார். 16 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்நூலில் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அனைவருக்கும் தேவையான பல அரிய கருத்துகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் முன்னேற எந்த ஒரு மனிதருக்கும் லட்சியங்கள் இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைய உழைப்பு மிக அவசியம். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்ய வேண்டும். பிற மனிதர்களுடன் பழகும்போது […]

Read more

மனிதனல்ல மகான்

மனிதனல்ல மகான், டி.எஸ்.பவுணன், காவ்யா, பக். 128, விலை 130ரூ. மனிதன் எப்போதும் மனிதனாக வாழ்வது இல்லை. அவனுள் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கிறது. நல்ல தன்மைகள் மிகுந்துள்ள மனிதன் தன் மனித நிலையிலிருந்து உயர்ந்து, ‘மகான்’ எனும் உயர்ந்த நிலையை அடைகிறான். அத்தகைய உயர்ந்த நிலையை அடையும் சாதாரண மனிதனின் கதை தான் இந்த நாவல். நாவலின் தலைமை மாந்தர் வசந்தன். சித்தியின் அடியிலிருந்து தப்பித்து, வீட்டை விட்டு சிறுவயதிலேயே ஓடி வந்த வசந்தனின் வாழ்வில், உறவுகள் எப்படி மலர்ந்தன? அவன் எவ்வாறு மகான் […]

Read more

உலகெனும் வகுப்பறை

உலகெனும் வகுப்பறை (கட்டுரைகள்), எஸ்.சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக்.496, விலை ரூ.400. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், திரட்டு நூல்கள், கட்டுரை நூல் என ஏறத்தாழ 90 நூல்களை எழுதிய நூலாசிரியரின் படைப்புலக அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. “சமூக அக்கறையற்ற படைப்புகள் குப்பைகளாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, அது சமுதாயத்துக்கு எதிரானது' என படைப்புகளின் நோக்கம் குறித்த தெளிவான புரிதலுடன், தன்னைக் கவர்ந்த பல படைப்புகளைப் பற்றி தனது கருத்துகளை தெளிவாக நூலாசிரியர் இந்நூலில் முன் வைத்திருக்கிறார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இவர் எழுதிய […]

Read more

காவிரி மாகத்மியம்

காவிரி மகாத்மியம், வே.மகாதேவன், இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம், பக்.206, விலை ரூ.100. காவிரியின் மகிமை இதிகாச-புராணங்களில் மட்டுமல்லாமல் பழந்தமிழ் இலக்கியங்களிலும் பெரிதும் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது. பொன்னி எனும் காவிரி புராணப் பெருமையுடையது.” காவிரியின் மகிமை இதிகாச-புராணங்களில் மட்டுமல்லாமல் பழந்தமிழ் இலக்கியங்களிலும் பெரிதும் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது. பொன்னி எனும் காவிரி புராணப் பெருமையுடையது. அத்தகைய காவிரி நதியின் நதி மூலத்தையும் ரிஷிமூலத்தையும் பெருமையாக விரித்துரைக்கிறது இந்நூல்.தேவாரப் பாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டவை காவிரிக் கரையில் அமைந்தவை என்கிற பெருமைக்குரியவை. அகத்திய […]

Read more
1 152 153 154 155 156 505