சமூகம் என்பது தீவுகள் அல்ல

சமூகம் என்பது தீவுகள் அல்ல, ஜி.மணிலால், வசந்தா பதிப்பகம், பக்.160, விலை ரூ.200. “இன்றைய மனித வள மேம்பாட்டிற்கு அடிநாதமாய் இருப்பது ஆதிமனிதனின் அறிவார்ந்த ஆற்றலே. “உன்னை நீ நேசி. பிறகு பிறரை நேசிப்பது எளிதாகிவிடும். “எதையும் நம்புவதற்கு எதையும் நம்பாமல் இருப்பதும் ஒரே வழி. “வாழ்க்கை என்பது சமூகநலன் கருதி மேற்கொள்ளப்படும் தியாகமே.”வாழ்க்கைக்கு ஆதாரம் குடும்பம். வீடு செழித்தால் நாடு செழிக்கும். “வாழ்க்கையில் பிறரை வஞ்சித்து, ஏமாற்றி அதன் மூலம் உயர்ந்த நிலைக்கு வருவது என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் செயல்முறையாகும். […]

Read more

சங்க இலக்கியத்தில் குறிப்பு வினைகள்

சங்க இலக்கியத்தில் குறிப்பு வினைகள் (சொல்லடைவுடன்), சு.அழகேசன், சுதா பதிப்பகம், பக்.996, விலை ரூ.700. தொல்காப்பியம் முதல் இன்றைய இலக்கணங்கள் வரை குறிப்பு வினையின் இலக்கணங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது. தமிழ் இலக்கணத்தில் வினைகள் தெரிநிலை வினை, குறிப்பு வினை என இருவகைப்படும். வினைகளை வெளிப்படையாக உணர்த்துவன தெரிநிலை வினைகள்; குறிப்பாக உணர்த்துவன குறிப்பு வினைகள். இக்குறிப்பு வினைகள் பெரும்பாலும் காலத்தை உணர்த்துவதாகவே அமையும். தொல்காப்பியர் குறிப்பு வினைகளைப் பயன்படுத்தும்போது, ஆக்கப்பொருள் இல்லாத போதும், ஆகு எனும் வினையைப் பயன்படுத்தியுள்ளார். (எ.கா) நிலைத்து ஆகும்மே, பொருட்டு ஆகும்மே, […]

Read more

அரபு நாடுகளின் அரசியல்

அரபு நாடுகளின் அரசியல், கடற்காகம், முஹம்மது யூசுஃப், யாவரும் பதிப்பகம், விலை: ரூ.395 இராக், குவைத், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஈரான் போன்ற அரபு நாடுகளின் அரசியலை இந்நாவல் பேசுகிறது. சுற்றுச்சூழல் போர் என்ற தொழில்நுட்பத்தை வல்லரசு நாடுகள் பயன்படுத்தி, செயற்கை சுனாமி, நிலநடுக்கத்தை உருவாக்குவதை விவரிக்கிறது. வானில் கருமேகம் சூழும்போதெல்லாம், ஈரானிய பார்சி மொழியில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் சமீரா டீச்சர் கதாபாத்திரம் ஒரு கவிதை. அரபு மண் என்றாலே பாலைவனம், ஒட்டகம், வறட்சி என்றே பழக்கப்பட்ட நமக்கு அதன் இன்னொரு முகத்தைப் பற்றி […]

Read more

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும், ப.திருமாவேலன், பரிசல் வெளியீடு, விலை: ரூ.140 காமராஜருக்கு முன்பே திராவிட இயக்கத்தால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர், ஓமந்தூர் ராமசாமி. இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதாலும், ஆலய நிர்வாகங்களில் அரசின் கண்காணிப்பை வலுப்படுத்தியதாலும் உள்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்த அவர், உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்து, முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. தீவிர காந்தியராகவும் பழுத்த ஆன்மீகவாதியாகவும் விளங்கிய ஓமந்தூராரை ஆதரித்து, 1948 ஏப்ரலில் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதிய இரண்டு தலையங்கங்கள் வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிடுவதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு ரூ.3,000 பிணை கோரப்பட்டது. அந்த […]

Read more

குட்டிஇளவசரன்

குட்டிஇளவசரன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, (தமிழில்: ச. மதனகல்யாணி, வெ. ஸ்ரீராம்), க்ரியா வெளியீடு இரண்டாம் உலகப் போரில் விமானியாகச் செயல்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியர், மனித உலகின் அழியாத அடிப்படை குணாம்சங்களையும் அன்பின் ஆற்றலையும் கவனப்படுத்தி எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல். நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிறந்த சிறுகதைகள் பதிமூன்று

சிறந்த சிறுகதைகள் பதிமூன்று, தமிழில்: வல்லிக்கண்ணன், என்.பி.டி. இந்தத் தொகுப்பில் 13 இந்திய மொழிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களின் சிறார் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சுந்தர ராமசாமியின் தமிழ்க் கதை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே எழுதிய திகில் கதை உள்ளிட்டவையும் உண்டு. நன்றி: தமிழ் இந்து, 27/11/19   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818   ஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட் (தமிழில்: எம். பி. […]

Read more

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, மாணிக்கவாசகர் பதிப்பகம், விலை 75ரூ. இயல், இசை, நாடகம் என மொழியையே மூன்றாகப் பகுத்து வளர்த்த பண்டைத் தமிழகத்தில், வளர்ச்சி பெற்றிருந்த கலைகள் ஏராளம். நமது கலை உன்னதங்கள் பலவற்றை இழந்துவிட்டோம், இப்போதும் இழந்துவருகிறோம். புகழ்பெற்ற தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய இந்த நூல் நமது கலைச் செழுமையின் முக்கியத்துவம், பின்னணி பற்றி எடுத்துரைக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000017806.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சிறுவர் நாடோடிக் கதைகள்

சிறுவர் நாடோடிக் கதைகள், கி. ராஜநாராயணன், அன்னம்-அகரம், கரிசல் பகுதி எழுத்துக்கு அடையாளம் தந்த மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என அழைக்கப்படும் கி.ரா., மக்களின் சொல்வழக்கில் இருந்த பல கதைகளை ஆவணப்படுத்தியுள்ளார். அவர் தொகுத்து எழுதிய சிறார் நாடோடிக் கதைகளின் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிள்ளை பாடிய தந்தை தமிழ்

பிள்ளை பாடிய தந்தை தமிழ், ஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, […]

Read more

அலர்ஜி

அலர்ஜி, கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.140 ‘சூரியனுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளும், எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பது பொதுவான மருத்துவ விதி. ஆனால், நடைமுறையில் எவற்றால், எப்போது, எப்படி அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், முன்னெச்சரிக்கையுடன் பெரும்பாலான நோய்களைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும். அலர்ஜி நோய்களின் கொடிய முகத்தை அவற்றை அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள். குறிப்பாக, பனியிலும் குளிரிலும் மழையிலும் ஆஸ்துமா வந்து அலறுபவர்கள் அநேகம் பேர். ‘எக்சீமா’ எனும் தோல் அழற்சி நோயால் உடலெங்கும் அரிப்பு எடுக்கத் தொடங்கினால் […]

Read more
1 163 164 165 166 167 505