கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை, டாக்டர் ஓ.சோமசுந்தரம், ஆசிரியா வெளியீடு, விலை 350ரூ. அடுத்த ஆண்டு, 150வது பிறந்த நாளை கொண்டாடும் சிறப்பிற்குரிய மருத்துவமனையின் சேவைகளைச் சொல்கிறது இந்நுால். கிழக்கிந்திய கம்பெனியின் துவக்க கால தொடர்புகளை கூறும் இந்நுால் வரலாற்று அறிஞர்களால் உருவாக்கப்பட்டதன்று; தாம் கண்டதையும், கேட்டதையும், உற்றதையும் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், சிகிச்சை முறைகளையும் விளக்கும் இந்நுால், இன்றைய மாணவர்களுக்கு சிறந்த வரலாற்றுப் படிப்பினையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, டாக்டர் மா.இராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், பக். 312, விலை 260ரூ. பல்லவ மன்னர்களின் முன்னோர் யார், அவர்கள் தமிழர்களா என்ற கேள்விகளுக்கு, இன்னும் தீர்க்கமான விடை அறிவிக்கப்படவில்லை. பல்லவர்கள் கிரந்தம் எழுத்துகளை அறிமுகப்படுத்தினர்; பின், அவர்களே தமிழில் கல்வெட்டுகளை அமைத்தனர். வடமொழியை ஆதரித்த அவர்கள் தான், தமிழ் சிறக்கவும் உதவினர். தமிழகத்தில் கல்லாலும், மலையைக் குடைந்தும் கோவில்கள் கட்டி, கட்டடக் கலையை வளர்த்தனர். இந்நுால், பல்லவ மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள, வாசகர் இடையே ஆர்வத்தை துாண்டும். – சி.கலாதம்பி நன்றி: […]

Read more

வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்

வீட்டில் ஒரு மூலிகை தோட்டம், வை.கண்ணன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 120ரூ. ‘வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்’ நுாலில், பப்பாளி, முருங்கை உள்ளிட்ட, 17 மூலிகைகளின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. குடியிருக்கும் வீட்டில் எந்த பகுதியில் எந்த மூலிகையை பயிர் செய்து பயன் பெறலாம்? எப்படி பயிரிட வேண்டும் என்னும் செய்திகளை எளிமையாக விளக்குகிறது இந்நுால். ஒவ்வொரு வீட்டிலும் மூலிகை தோட்டம் அமைப்பதால், சிறு சிறு உபாதைகளுக்காக மருத்துவரை நாடவேண்டிய அவசியமிருக்காது என்ற விழிப்புணர்வை உணர்த்துகிறார் நுாலாசிரியர் கண்ணன். நன்றி: தினமலர், இந்தப் புத்தகத்தை […]

Read more

மனம் செய விரும்பு

மனம் செய விரும்பு, இசைக்கவி ரமணன், வானதி பதிப்பகம், பக். 80, விலை 70ரூ. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று சிறு வயதில் படித்திருக்கிறேன். ‘மனம் செய்ய விரும்பு’ என்கிற இந்த நுாலின் தலைப்பே எனக்கு நேர்மறை எண்ணங்களை உண்டு பண்ணியது. ஒரு சிறிய நுாலில் ஒப்பற்ற கருத்துகளை கூறி மனதை பலப்படுத்தும் வித்தையை கற்றுத் தந்திருக்கிறார் ரமணன். மனம் விரும்பி ஒரு செயலை செய்யும் போது உறவுகள் பலப்படும். இன்றைய காலத்தில் மனம் புண்படியாக பேசுவது, வெறுப்புணர்வை வளர்ப்பது, தெய்வங்களையும், […]

Read more

சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, விலை 450ரூ. இலக்கியம் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது’ என்று சொல்வர். உருவத்திலும், உணர்விலும், உள்ளடக்கத்திலும் அது எத்தனையோ மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது. அந்த வகையில் கவிதைகளால் தன்னை புதுப்பித்துக் கொண்ட கவிஞர் சிற்பி குறித்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் வெளிவந்திருக்கிறது சிற்பியின் படைப்புக்கலை நுால். ஒரு சிறந்த கவிஞனின் அனைத்து பரிமாணங்களும் இலக்கிய உலகிற்கு முறையாக சொல்லப்படவேண்டும் என்ற முயற்சியின் பலன் தான் இந்தப் புத்தகம். சிற்பி படைத்த ‘உத்திகள்’ குறித்தான பாலாவின் […]

Read more

வேதாந்த மரத்தில் சில வேர்கள்

வேதாந்த மரத்தில் சில வேர்கள்,  கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.80, விலை ரூ.80. நூற்பெயர் குறிப்பிடும் வேதாந்த மரம் மகாகவி பாரதியாரேதான்! அந்த மகாமரத்தின் சில வேர்களை மட்டுமே கண்டு இன்புற்று இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள கட்டுரைகளைப் படைத்ததாக ஆசிரியர் கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி குறிப்பிடுகிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள ஏழு மணியான கட்டுரைகளைச் சிந்தனைக் கோவைகள் எனலாம். “மந்திரம் போல் வேண்டுமடா என்ற கட்டுரையில், சொல் என்பது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வெறும் ஊடகம் அல்ல, அதற்கு திடமான உருவமும் செயலும் உண்டு என்பதாக […]

Read more

விலகி நடக்கும் சொற்கள்

விலகி நடக்கும் சொற்கள், ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, பக்.160, விலை175ரூ. சிந்தையள்ளும் கட்டுரைகள்! ‘அம்மாக்களும், அடையாளச் சிக்கலும்!’ என்ற முதல் கட்டுரையில் ஆசிரியர் சொல்வார்; ‘குழந்தைகள் அழகானவை. பூக்களை போன்றவை. எல்லா உயரிய விஷயங்களைப் போல அவையும் தீவிர கவனத்தைக் கோருபவை. ‘அந்தப் பராமரிப்பின் சுமையை ஏற்க ஆழ்ந்த காதலும், பொறுமையும், புரிந்துணர்வும் வேண்டும். அதற்கு தயாரில்லை எனில் நிகழும் வன்முறைகளைத் தடுக்கவே முடியாது!’ தமிழ் சினிமா: கோடுகளை அழிக்கும் ரப்பர்! என்ற கட்டுரையில் பேசுவார்; ‘‘பொறுக்கித்தனத்தில் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகனும், […]

Read more

இங்கே நிறுத்தக் கூடாது

இங்கே நிறுத்தக் கூடாது, அ.முத்துலிங்கம், நற்றிணை பதிப்பகம், பக்.128, விலை ரூ.150. நூலாசிரியரின் 12 சிறுகதைகளும் இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு.மனைவியின் பெண்ட்லி காரை இரவல் வாங்கி பயணிக்கிறார் பரமேஸ்வரன். பூச்சு வேலை செய்யும் மூசாவை உடன் அழைத்துச் செல்கிறார். அவன் அகதி. இனிமேல் இழப்பதற்கு அவனிடம் ஒன்றுமே இல்லை. பலவிதமான துயரங்கள் நாலா பக்கமும் அழுத்தியபோதும் அவன் நிம்மதியாகத் தூங்கிவிடுகிறான். தன்னை மறந்து ஒரு குழந்தை போல உறங்கும் அவனைக் கண்டு வியந்து நிற்கிறார் பரமேஸ்வரன். இதுதான் நூலின் தலைப்பைக் கொண்டுள்ள […]

Read more

சொல் அல்ல செயல்

சொல் அல்ல செயல்,  அதிஷா,  விகடன் பிரசுரம், பக்.264, விலை ரூ. 215. நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை நாமே சமரசப்படுத்திக் கொண்டும் நியாயப்படுத்திக் கொண்டும் இது தவறில்லை என்று செய்யும் பல்வேறு செயல்கள் தவறுதான் என்று ஆணித்தரமாக உடைத்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அதிஷா. உதாரணமாக, நாகரிக உலகில் கடன் அட்டைகள், ஆடம்பர செல்லிடப்பேசிகள் இவற்றை வாங்குவதற்காக கடன் வாங்கும் அவலத்தை நண்பர் ரவியின் தற்கொலை மூலம் உணர்த்துகிறார். வாழ்க்கையில் அனைவரும் தமக்கு விருப்பமானதை விட்டு விட்டு பிறரின் விருப்பத்துக்காக ஓடுவதையும், அதே நேரத்தில் […]

Read more

இன்பம் நல்கும் இசைத்தமிழ்

இன்பம் நல்கும் இசைத்தமிழ், தொகுப்பாசிரியர்: மு.கலைவேந்தன்,  தமிழ் ஐயா வெளியீட்டகம், பக்.368, விலை ரூ.500. கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் இசைத் தமிழ் குறித்த 56 கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் நான்கு ஆங்கிலக் கட்டுரைகள். வேதநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், அண்ணாமலை ரெட்டியார், வேதநாயக சாஸ்திரியார் முதலானோர் வளர்த்த இசைத்தமிழ் பற்றியும், அவர்களது இசைத்திறன் குறித்த தகவல்களையும் சில ஆய்வுக் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. தமிழிசைக்கலை, இசைப் பெயரமைவு, இசைக் கருவிகளின் பெயரமைவு போன்றவற்றை ஒரு கட்டுரை சிறப்பாக விளக்குகிறது. மூன்றாம் நந்திவர்மன் காலத்திய இசைக்கலை […]

Read more
1 162 163 164 165 166 505