செயின்ட் ஜார்ஜ் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 175ரூ. சென்னை மாநகரின் முக்கிய அடையாளம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640ம் ஆண்டு, வர்த்தக நோக்கில் இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் பாதுகாப்புக்காக கட்டிய கோட்டை இது.இன்று, தமிழக அரசு நிர்வாகம் செய்யும் முக்கிய கோட்டையாகவும் விளங்குகிறது.  அத்துடன், இந்திய ராணுவக் குடியிருப்பு மற்றும் இந்திய கடற்படை ஆகியவையும் இங்கு தான் அமைந்துள்ளன. பிரஞ்சுப் படையினர் இரு முறை ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டு, இக்கோட்டையைக் கைப்பற்றிய வரலாறும் இருக்கிறது! நானுாறு […]

Read more

டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன்

டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன், பாலகணேஷ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 50ரூ. ‘இம்சை அரசன் புலிகேசி’யின், 12 விட்ட சித்தப்பாவின் வம்சமாக இருந்திருக்கலாமோ என நினைக்க வைக்கிறான் கதையில் வரும் மன்னன். அவன் ஆளும் நாட்டில், அரண்மனை வேலை ஆட்களுக்கு கூட மூன்று மாத சம்பள பாக்கி வைக்கும் அளவுக்கு, பஞ்சம், ‘பாப் டான்ஸ்’ ஆடுகிறது. இப்படியான சூழலில் இந்த மன்னனுக்கு ஒரு ஆசை வருகிறது. அது, நம்ம ஊர் ஷாப்பிங் மால்கள் மாதிரியான ஒரு கட்டடத்தை கட்ட வேண்டும் […]

Read more

அரங்கில் மலர்ந்த கம்பன்

அரங்கில் மலர்ந்த கம்பன், கவிஞர் அரு.நாகப்பன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. நூலாசிரியரின் இலக்கியப் பணியின் பொன் விழா வெளியீடாக வந்துள்ள இந்நூலில், அவர் பங்கேற்ற கவியரங்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டு உள்ளன. கம்பன் கண்ட கருணை, பக்தி, சமுதாயம், மரவுரி, அரசியல் மாண்பு, வாலி, கணையாழி, அனுமன், கைகேயி, கம்பன் ஒரு தெய்வம் போல, பல தலைப்புகளில், பல்வேறு சான்றோர் தலைமையில் அரங்கேறிய கவிதைகள் இதில் அடக்கம். ‘தன்னையே இறைவனுக்குத் தானளித்தால் தானய்யா அன்னையாய் வந்திருந்து அருட்பாலைச் சுரந்திடுவான்’ (பக். 36) என பக்தி […]

Read more

டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5)

டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5), பாமதி மைந்தன், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 48ரூ. பரந்த உலகில் பார்க்கும் காட்சிகள் எல்லாமே ஒவ்வொரு பாடம் சொல்லும். நாம்தான் அதனை கவனிப்பதில்லை. அந்த உண்மையே கருவாகி, கற்பனையில் கதைகளாகி, உருவெடுத்து நற்பண்புகளும் நல்லொழுக்கமும், பக்தியும் வளர்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணத்தில் படித்து முடித்தாலும் மனத்தில் பல கணங்கள் தங்கி கனக்கச் செய்யும் சிறப்பான கதைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி, பரத்வாஜ் ஸ்வாமிகள், சங்கர் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. வாராஹி வடிவங்களின் தத்துவம், கலப்பையால் கவலை நீக்குபவள், உலக்கையால் ஊழ்வினை நீக்குபவள், வரும் பகையை அழித்து நல்வழி காட்டுபவள். வாராஹியை எப்படி வழிபட வேண்டும் என்பதை கூறுகிறது, இந்நூல். வேத தத்துவத்தை மிகவும் எளிமையாக்கி உலக மாந்தர்களுக்கு அளித்திருக்கிறது எனலாம். நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

திருக்குறள் சிந்தனைகள்

திருக்குறள் சிந்தனைகள், க.ப.அறவாணன், தமிழ்க் கோட்டம் வெளியீடு, பக். 72, விலை 50ரூ. ‘உலக நீதி இலக்கியங்களும் தமிழ் நீதி இலக்கியங்களும், திருக்குறள் ஒரு சமூக இயல் பார்வை, திருவள்ளுவர் செய்த புதுமைகள், கன்பூசியசும் திருவள்ளுவரும், திருக்குறள் ஏன் கல்வெட்டுகள் ஆக்கப்பட வேண்டும். திருவள்ளுவர் தெய்வக் கோட்பாடு, தமிழகத்தில் திருவள்ளுவம் தோற்றதேன்?’ ஆகிய ஒரு கட்டுரைகளின் தொகுப்பு. ‘கடவுள், வழிபாடு, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தாத சீனம், கிரேக்கம், ரோம் ஆகியன மேம்பாடு அடைந்ததும், மாறாக அவற்றைப் போற்றிய தமிழகம், இஸ்ரேல் ஆகியன துன்புற்றதும் சுட்டிக்காட்டத்தக்கன […]

Read more

கம்ப்யூட்ராலஜி

கம்ப்யூட்ராலஜி, காம்கேர் புவனேஸ்வரி, விகடன் பிரசுரம், பக் 448, விலை 310ரூ. மூலை முடுக்குகளில் வாழும் பாமரருக்கும் உலகின் சாளரங்களைத் திறந்து காட்டிய பெருமை கணினிக்கே உரித்தாகும். பூகோளத்தின் எந்த பகுதியையும் இன்று மடியின்மேல் பார்த்து மகிழ முடியும். விண்வெளிக் கோள்களின் இயக்கத்தையும் வீட்டு மேசையில் பார்க்க இயலும். வங்கிக்கணக்குகளை உள்ளங்கையிலேயே பரிவர்த்தனை செய்ய முடியும். உள்ளூரையே சரியாக புரியாதோர் மலிந்த காலம் சென்று உலகைப் பெருமளவில் புரிந்து வியக்கும் கிளர்ச்சியான அனுபவங்களை படையலிட்டது கணினி. கணினியோடு இணைய இணைப்பை ஏற்படுத்தியது மனித இனத்தின் […]

Read more

தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்

தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார், டாக்டர் உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக். 798,விலை 400ரூ. அனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல், அவற்றைத் தமிழ் அன்னையின் அழகிய ஆபரணமாக வடித்துத் தந்தவர் தமிழ்த் தாத்தா. உ.வே.சா., 87 ஆண்டு காலம் (1855 – 1942) வாழ்ந்தபோதிலும், ‘என் சரித்திரம்’ நூல் மூலம், தம் வாழ்நாளின், 44 ஆண்டு கால (1889 முடிய) வரலாற்றை நயம்பட ஒரு புதினம் போல சுவைபட […]

Read more

அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள்

அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள், மவ்லவி பி.எம்.கலீலூர் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 100ரூ. சென்னை பள்ளிவாசல் ஒன்றில் இமாமாகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்கள் பல எழுதி பிரசித்திப் பெற்றவர். இவர் முன்னாள் ஜனாதிபதியான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகளைச் சேகரித்து இந்நூலில் தொகுத்துள்ளார். அப்துல் கலாம் இஸ்லாமியராக இருந்தும், அந்த முறையில் அவர் வாழவில்லை என்ற கோணத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சில எழுப்பிய விமர்சனங்கள், எவ்வளவு தவறானவை என்பதை தக்க ஆதாரங்களோடு, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையிலும் […]

Read more

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும், நீதிநாயகம் து.அரிபரந்தாமன், நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் அறக்கட்டளை, பக். 88, விலைரூ.75. ‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும் 39’ – இந்நூலின் முதல் கட்டுரை. இது தவிர இன்னும் ஏழு கட்டுரைகள் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி.யில் நூலாசிரியர் ஆற்றிய உரை, அவர் நீதிபதியாகப் பதவியேற்றபோது ஆற்றிய உரை, பணிநிறைவு பெற்ற போது ஆற்றிய உரை, ‘பொதுபள்ளிக்கான மாநில மேடை 39’ அமைப்பு நீட் பற்றி வெளியிட்ட துண்டறிக்கை, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்யக் கோரி நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை, இயற்கை […]

Read more
1 360 361 362 363 364 505