விமலா கூறும் செவிச்செல்வம்

விமலா கூறும் செவிச்செல்வம், செ. க ணேசலிங்கம், குமரன் பப்ளிஷர்ஸ், விலை 90ரூ. கற்காலத்திலிருந்து மனித இனம் நாகரிகம் அடைந்தாலும் பெண் என்பவள் அடிமைப்பட்டவளாகவே இருப்பதைக் கதாசிரியர் தன்னுடைய நாவல்களில் குறிப்பிடத் தவறுவது இல்லை. இக்கதையின் நாயகி விமலா இசைக் கல்லூரி மாணவி. எனவே இசையின் தோற்றத்தையும், இருப்பையும், அதன் வணிக நோக்கத்தையும் பாத்திரங்கள் வாயிலாகவே விவரிக்கிறார். பெரும்பாலும் உரையாடல் வாயிலாகவே கதை நகர்கிறது. பாலின்பம், இசை இரண்டும் எப்படி வெறும் புலனின்பத்துக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும் மாற்றப்பட்டுவிட்டன என்று கதாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். நன்றி: தி […]

Read more

அருணாசலக் கவிராயர் முதல் ஆலந்தூர் மோகனரங்கன் வரை

அருணாசலக் கவிராயர் முதல் ஆலந்தூர் மோகனரங்கன் வரை, சு.முத்தையா, வசந்தா பதிப்பகம், பக்.112, விலை 70ரூ. தமிழ் இலக்கியத்தில் சுவை, பக்தி இலக்கியத்தில் மனிதநேயத்தை, ‘கண்ணன் பாட்டு’ மூலம் கூறிய ஆசிரியர், சிறுகதையின் யதார்த்தவாதம், ஈழத் தமிழ்ச் சிறுகதைகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, மு.வ.,வின் தேங்காய்த் துண்டுகள், சிற்பியின் தமிழ்ப் பணி உள்ளிட்டவற்றின் சிறப்புகளை இந்நூலில் வழங்கிஇருக்கிறார். நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கதைகள்

மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கதைகள், தீபம் எஸ். திருமலை, செந்தூரான் பதிப்பகம், பக். 200, விலை 90ரூ. தெனாலிராமன் குறும்பு, மிருகக்காட்சி சாலை கலாட்டா, ஞானம் வெளியே இல்லை, இறைவனுக்கு உதவிய இரண்யன், பொறுப்பான மருமகள், பெண்மணியால் நாட்டை ஆள முடியுமா? உங்களுக்கே தருகிறேன், தருமம் செய், இது என்ன கணக்கு கதைகள், படிக்கும் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

எச் 2 ஓ

எச் 2 ஓ, ஜோதி மகாதேவன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெ, பக். 68, விலை 50ரூ. ‘எச் 2 ஓ’ – இந்த தலைப்பு ஏற்படுத்திய ஆர்வத்தில் புத்தகத்தை திறந்து முதல் வரி வாசித்தால், ‘ஓசோன் பரவிய கிழக்கு கடற்கரை சாலை காற்று…’ என, ஆரம்பிக்கிறது நாவல். மிக நேர்த்தியான எழுத்து நடையால், சினிமா பார்ப்பது போல் கதைக்களம் காட்சிகளாய் விரிகிறது. சென்னையில் வேலை பார்க்கும் மிடில் கிளாஸ் இளைஞனுக்கும், ஹை கிளாஸ் அப்பார்டமென்ட்டில் வாழும், ஒரு பேரழகிக்கும் இடையேயான சுவாரசிய […]

Read more

அறிந்த பழமொழிகளும் அறியாத விளக்கங்களும்

அறிந்த பழமொழிகளும் அறியாத விளக்கங்களும், முனைவர் விஜயலட்சுமி ராமசாமி, வனிதா பதிப்பகம், பக். 168, விலை 120ரூ. நம் முன்னோர் தம் பட்டறிவால் கண்டுணர்ந்த பழமொழிகள் எனலாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் கொண்ட பழமொழிகள் ஆழ்ந்த பொருள் கொண்டவை. ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பட்டறிவு ஆகியன மிகச் சுருக்கமாகப் பேச்சு நடையில் வெளிப்பட்ட ஒரு சொற்றொடரே பழமொழி. இவ்வாறு விளங்கும் பல்லாயிரக்கணக்கான பழமொழிகளும், 75 பழமொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு மக்கள் இதுவரை அறிந்து கொள்ளாத நிலையிலான விளக்கங்களை நுணுகி […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், ஆர்.சுப்பிரமணியம், சஞ்சய் புக்ஸ், விலை100ரூ. திருமால் அவதாரத்தில் கிருஷ்ணர் முக்கிய பங்கு வகிக்கிறார். கிருஷ்ணரின் பெருமைகளை வர்ணிக்கும் புராணம் ஸ்ரீமத் பாகவதம். இந்நூலில், கண்ணனின் பல நாமங்களை குறிப்பிடும் ஆசிரியர், விஷ்ணு சகஸ்ரநாமத்திலிருந்து மேற்கோள்களையும், பகவத் கீதையிலிருந்து சில ஸ்லோகங்களையும் எடுத்துக்காட்டாக விளக்கியிருக்கிறார். நன்றி: தினமலர், 15/10/2017

Read more

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம்

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம், புலவர் இரா.நாராயணன், வனிதா பதிப்பகம், விலை 160ரூ. திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி இயக்கத்தில் தொண்டினை இணைத்தவர். சிவ நெறிக் குடியில் பிறந்த இவர், இளமையில் சமண சமயத்தின் உயிரிரக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து சிறப்பு மிகப்பெற்று, தருமசேனர் எனும் பெயருடன் வாழ்ந்தார். பெற்றோர் இட்டபெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியார் வேண்டுதலால், சிவன் தருமசேனருக்கு சூலை நோய் தந்து, சிவனருள் திருநீற்றால் நோய்க் கொடுமையிலிருந்து […]

Read more

திருக்குறள் தெளிவுரை மற்றும் கருத்துரையுடன்

திருக்குறள் தெளிவுரை மற்றும் கருத்துரையுடன், மெய்ஞானி பிரபாகர் பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், விலை 295ரூ. முற்றிலும் தனது நடையில் வார்ப்புரை என்ற வகையில், ஆசிரியர் குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். எளிய முறையில் மக்களுக்கு குறள் சென்றடைய விரும்பிய வேள்வி தன் மனதில் உதித்ததாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அதைவிட இந்த எளிய உரை உருவாக தன் மனைவி செல்வி ஒத்துழைத்ததை குறிப்பிட்டிருப்பது சிறப்பு. பாவேந்தர் பாரதிதாசன் நடந்த பாதையில், எளிய முறையில் உரை அமைத்திருப்பதால், தமிழ் அறிந்த அனைவரும் இதைப் படிப்பது எளிது. ‘ஆற்றுவார் ஆற்றல் […]

Read more

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு)

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு), அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 495ரூ. இந்திய வரலாற்றில் மகாத்மாவுக்குப் பிறகு மகத்தான மனிதராகப் போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு. படிப்படியாக உருப்பெற்று விண்தொட்ட ஏவுகணைப்போல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்து அவர் சாதித்ததைச் சொல்லி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் அற்புத வரலாறு. கலாமின் சீடரும் நெருங்கிய நண்பரும் அவரது நூல்கள் பலவற்றுக்கு இணை ஆசிரியருமான பேராசிரியர் அருண்திவாரி எழுதிய ஆங்கில நூலின் செம்மை குறையாத தமிழ் வடிவம். நன்றி: குமுதம், […]

Read more

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், துரை மணிகண்டன், கமலினி பதிப்பகம், விலை 230ரூ. இந்நூல் கணினி, இணையம் குறித்து அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளைத் தொகுத்து உரைக்கிறது. இதனுள், ஐந்து அலகுகளில் செய்திகள் கூறப்பட்டுள்ளன. முதல் மூன்று அலகுகளில், கணினியின் தோற்றம், வரலாறு, கணினியின் அமைப்பு-வகைகள், வன்பொருள்-மென்பொருள் விளக்கம், உள்ளீட்டுக் கருவிகளான விசைப்பலகை, ஒளிப்பேனா, சுட்டி, பந்துருளை, தொடுசுட்டி, வருடி முதலிய உள்ளீட்டுக் கருவிகளின் விளக்கம். மற்றும் திரை, அச்சுப்பொறி, அச்சுப்பொறி வகைகள், ஒலிபெருக்கி, ஒளிபெருக்கி ஆகிய வெளியீட்டுக் கருவிகளின் விளக்கம், […]

Read more
1 359 360 361 362 363 505