பீனிக்ஸ் முற்றுப்பெறாத சித்திரம்

பீனிக்ஸ் முற்றுப்பெறாத சித்திரம், எஸ்.டி.எஸ்.இராசதேவன், சுவாதி பதிப்பகம், விலை 150ரூ. நூலாசிரியர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மற்றும் குறுக்கிட்ட தடைக்கற்களைப் படிக்கற்களாக்கியதன் மூலம் பல்வேறு வெற்றி, தோல்விகளைப் பெற்றுள்ளார். அதன் மூலம் பெற்ற படிப்பினைகளை பாடமாக அமைத்து, இந்த நூலை படிப்போர் தம் வாழ்க்கையிலும் வெற்றி நடைபோட்டு முன்னேற வழிகாட்டி உள்ளார். நன்றி: தினத்தந்தி,25/10/2017.

Read more

இரண்டு விரல்கள்

இரண்டு விரல்கள், ராம்பிரசாத், வாதினி வெளியீடு, பக். 80, விலை100ரூ. சீராளன் போன்ற எண்ணற்றோரால் கட்டமைக்கப்படும் உலகில், சாம் போன்றோர் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கின்றனர். தகுதியுடைய வாழ்வனுபவம் சரியானவர்களிடத்தே போய் சேர வைக்க, ஒரு குற்றத்தால் தான் முடியும் என்பது இக்காலகட்டத்தின் நிர்ப்பந்தமாக இருப்பதை இந்த குறுநாவல் பேசுவதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 8/10/2017.

Read more

அழிவின் விளிம்பில் அந்தமான்

அழிவின் விளிம்பில் அந்தமான், பேரா.பொ.முத்துக்குமரன், முனைவர் ம.சாலமன் பெர்னாட்ஷா, என்.சி.பி.ஹெச்., விலை 370ரூ. இயற்கையின் தாய்மடியாக திகழ்ந்த அந்தமான் தீவு பற்றிய முழுமையான ஆவணம் இந்நூல். இயற்கை வளமிக்க ஒரு தீவு, பேராசையும் சுயநலமும் மட்டுமே கொண்ட மனிதர்களின் ஆக்கிரமிப்பால் இன்றைக்கு சிதைந்துபோன அவலத்தை தக்க வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. வரலாற்றுச் சுவடுகளில் சோழர்களும் சைலேந்திர அரசர்களும் பலமுறை கடந்து சென்றபோதெல்லாம் சிதைவுறாத இந்த பூமி, ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டது என்பதை தெளிவாக இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. படங்கள், வரைபடங்கள் யாவும் […]

Read more

ஆண்டாளம்மா தேசம் (கட்டுரைகள்)

ஆண்டாளம்மா தேசம் (கட்டுரைகள்), எஸ்.ரமேஷ், ஷேக்ஸ்பியர்ஸ் டெக்ஸ், விலை 150ரூ. ஆண்டாள் அரசுபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரை மையமாக வைத்து அங்கே நடப்பது போன்ற பல நிகழ்வுகளை கற்பனையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையையும் படித்து முடிக்கும்போது நிஜமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது. மெல்ல நகைக்கவைக்கும் நடையில் கதைபோல் இருப்பது கூடுதல் சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

டோக்கன் நம்பர் 18

டோக்கன் நம்பர் 18, திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. பத்துப்பேர் எழுதிய இருபது கதைகளின் தொகுப்பு. மண்வாசம் வீசுவது, மனதை அழுத்துவது, காதலைச் சொல்வது என்று ஒவ்வொரு கதையும் தனித்தனி பாதையில் பயணிக்கச் செய்கிறது. ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த பத்து எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து நூலாக்கி இருப்பது வித்தியாசமான முயற்சி. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

நெசவு

நெசவு, சுப்ரபாரதிமணியன், சிற்பி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களின் மானத்தைக் காக்கும் துணியை நெய்திடும் நெசவாளர்கள், தங்கள் தன்மானத்தைத் தக்கவைத்துக் கொள்ள நடத்திடும் போராட்டமான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் கதைகள், சில கட்டுரைகள். நெய்யும் ஆடையின் தரம் நாளுக்குநாள் உயர்வதும், நெய்பவன் வாழ்வாதாரம் தாழ்வதும் அருமையாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி

வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி, மெர்வின், குமரன் பதிப்பகம், விலை 70ரூ. நோய் வந்தால் அதைப் போக்கிக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்யும் நாம், நோயைவிடக் கொடியதான எதிர்மறை எண்ணங்களை அகற்ற எந்த முயற்சியும் செய்வதில்லை. அதைச் செய்தாலே வாழ்வில் வெற்றிகளும் வளர்ச்சியும் நிச்சயமாகும். அதற்கான வழியினை உலக அறிஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மூலம் விளக்கிச் சொல்லும் அற்புதமான நூல். நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

மருதத்திணை

மருதத்திணை, மீனா சுந்தர், புதுப்புனல், பக். 100, விலை85ரூ. ஆண்டுதோறும் நடக்கிறது நதிநீர் கிரிக்கெட்; காவிரிப் பந்தை விரட்டி அடித்து எப்போதும் சதம் போடும் நடுவணரசு; மேன் ஆப் த மேட்ச் கருநாடகர்கள்; பீல்டு அவுட் ஆவதென்னவோ தமிழக விவசாயிகள்!’ என்ற கவிதை, இன்றைய தமிழக – கர்நாடக மாநில நதிநீர் பிரச்னையை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது. நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

சாத்தனார் அருளிய மணிமேகலை

சாத்தனார் அருளிய மணிமேகலை, வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களம் மூன்று காப்பியங்கள் மட்டுமே முழுமையாக கிடைத்துள்ளன. வளையாபதி, குண்டலகேசி காப்பியங்கள் இரண்டும் முழுமையாக கிடைக்கவில்லை. முழுமையாகக் கிடைத்த காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை, கடைச்சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலையைக் கதை வடிவில் எழுதியுள்ளார். நூலாசிரியர் 30 காதைகளைக் கொண்ட இக்காப்பியத்தை ஒவ்வொரு காதைக்கும் பல கிளை தலைப்புகளுடன் எளிய மொழிநடையில் கதையாக எழுதியிருப்பது இன்றைய தலைமுறை வாசகர்களையும் வாசிக்கத் தூண்டும் நல் முயற்சி. நன்றி: தி […]

Read more

நதியோடு நாமும்

நதியோடு நாமும், இராஜேஸ்வரி கோதண்டம், நிவேதிதா பதிப்பகம், விலை 160ரூ. தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலிருந்து நல்ல பல நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கும் ‘ராஜம்பாட்டி’ (இதுதான் நாவலாசிரியரின் புனைபெயர்) இந்திய நதிகளின் போக்கிலேயே தானும் பயணித்து, சுவைபட இந்நூலை எழுதியுள்ளார். கங்கை, ஹுக்ளி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை என இந்திய நதிகள் பலவற்றைப் பற்றியும் மனம் தோய்ந்து எழுதியுள்ளார். கங்கை பாயும் காசி பற்றி எழுதுகையில், மகாகவி பாரதியார் அங்கு வாழ்ந்த காலத்தைப் பற்றியும் சேர்த்தே பதிவு செய்துள்ளார். […]

Read more
1 358 359 360 361 362 505