கவிதை ஒளி

  கவிதை ஒளி, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 130ரூ. பேராசிரியர், பேச்சாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர் இரா.மோகன். அவர் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் கவி ஆளுமைகள் என்ற தலைப்பில் வ.சு.ப.மாணிக்கனார், ஈரோடு தமிழன்பன் போன்றோரின் ஆளுமைகள் குறித்தும் கவிதைக் கீற்றுகள் என்ற தலைப்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ பற்றியும் சுவைபட எழுதியுள்ளார். சங்கச் சித்திரங்கள் என்ற தலைப்பில் சங்க கால இலக்கியத்தின் சிறப்பை விவரிக்கிறார். இலக்கிய அன்பர்களுக்கு இனிய விருந்து. நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன், க.ஜெய்சங்கர்,  வசந்தவேல் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களுக்கு 5 ஆயிரம் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற கண்ணதாசன் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. கதை – வசனம், நாவல், வாழ்க்கை வரலாறு, திரைப்படத் தயாரிப்பு, அரசியல்… இப்படி பல துறைகளில் முத்திரை பதித்தவர். “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் மரணம் இல்லை” என்று தன்னம்பிக்கையுடன் பாடினார் என்றாலும், அது உண்மை. கண்ணதாசனின் பாடல்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது மட்மல்ல, என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். கண்ணதாசன் வாழ்க்கையும் திருப்பங்கள் நிறைந்தது. […]

Read more

குறுந்தொகை

. குறுந்தொகை, முனைவர் இர.பிரபாகரன், காவ்யா, விலை 700ரூ. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கிய நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. குறுகிய பாடல்களைக் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது. இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது. குறுந்தொகையில் உள்ள பாடல்கள் கற்பனை வளமும், கவிதை நயமும் நிறைந்த காதல் ஓவியங்கள். குறுந்தகைப் பாடல்கள் காதல் வாழ்க்கையின் பல்வேறு கூறுபாடுகளையும், காதலர்களின் உள்ளத்தையும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறும் சுவையான பாடல்கள். அத்தகைய குறுந்தொகை பாடலுக்கு முனைவர் இர.பிரபாகரன் (மேரிலாந்து, அமெரிக்கா) அழகிய […]

Read more

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல, ஏகலைவன், வாசகன் பதிப்பகம், விலை 70ரூ. கேள்விகள் கேட்கப் பழகுவோம், ஏளனங்களை ஏளனப்படுத்துவோம், தோல்விகளைத் தூர்வாருவோம், கோடுகளும் ஓவியமாகும், சாதனைகள் சாத்தியமே என்பன போன்ற தலைப்புகளில் கவிஞர் ஏகலைவன் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் நம் நெஞ்சில் நம்பிக்கை ஊட்டுகிறார். நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., முனைவர் க.பன்னீர்செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ. ஒரு துணை நடிகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர். கடும் உழைப்பினால் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் ‘வசூல் மன்னன்’ ஆனால். கலைஞருடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.க. வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றினார். 10 ஆண்டுகள் தமிழக முதல்- அமைச்சராக பதவி வகித்து, புகழின் உச்சியில் இருக்கும்போதே மறைந்தார். இது ஒரு புறம் இருக்க, துப்பாக்கியால் சுடப்பட்டு, யமனுடன் போராடி வெற்றி பெற்றார். ஏழை எளிய மக்களுக்கு உதவி, […]

Read more

சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டம்

சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டம், அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் நளீமி, இலக்கியச் சோலை, விலை 120ரூ. உலகில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் மிகப் பெரிய அளவில் வாழும் சிறுபான்மை சமூகம், இந்திய முஸ்லிம்களே. இலங்கையிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினரே. ஒரு பன்மைச் சமூகத்தில் வாழ்கின்ற முஸ்லிம் சிறுபான்மையினரின் வாழ்வியல் பற்றிய சிந்தனையை முஸ்லிம்கள் மத்தியில் கட்டியெழுப்ப இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு)

பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு), விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 110ரூ. பெருந்தலைவர், படிக்காத மேதை, பச்சைத் தமிழர், கர்ம வீரர், கறுப்பு காந்தி, கிங் மேக்கர் என்று மக்களால் மகிழ்வோடும், பெருமையோடும் அழைக்கப்பட்டவர்  காமராஜர். தனக்கென எதையும் தேடாமல் ஏழை மக்களின் நல்வாழ்வு மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு இறுதி வரை ஏழைப் பங்காளனாக வாழ்ந்தவர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். சுதந்திரம் பெற்ற பிறகு 9 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டியவர். ‘இன்றைக்கு […]

Read more

மனம் மயக்கும் கலை

மனம் மயக்கும் கலை, ஹிப்னோ ராஜராஜன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், விலை 380ரூ. ஹிப்னாடிசம் என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதற்கு, ‘தூக்கம்’ என்று பொருள். ஏதாவது ஒரு காரணத்தால் ஒருவரைத் தூங்க வைப்பது. ஒருவரை தூங்க வைத்து அவர் மனதை நம் வசப்படுத்தி, அவர் மனதில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பது அல்லது அவரது உடலில் உள்ள நோய்த் தன்மையைப் போக்கிக் குணமாக்குவது. ஹிப்னாடிசம், அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி செய்யக் கூடிய மனம் சார்ந்த மருத்துவக் கலை. இதை மனோவசியம் அல்லது யோக […]

Read more

மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா, விலை 400ரூ. இந்த நூற்றாண்டின் மலைக்க வைக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சை முறைகளை எளிய தமிழில் தெளிவாக விளக்கும் நூல். சாதாரண மக்களின் மருத்துவ சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் எளிய தமிழில் எழுதி, எண்ணற்ற வாசகர் கூட்டத்தை உருவாக்கி இருப்பவர், மருத்துவ இதழியலாளர் டாக்டர் கு.கணேசன். தினமலர், ‘என் பார்வை’ பகுதியில் இவரது கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இதுவரை, 38 மருத்துவ புத்தகங்கள் எழுதி உள்ளார். அவற்றில் இருந்து […]

Read more

நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்

நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம். நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது? நேரத்தின் முக்கியத்துவம், நேரத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது, எதிலெல்லாம் நேரத்தைமிச்சம் பிடிக்கக்கூடாது? என, நேரம் குறித்து பல செய்திகளைச் சுவைபட, தனக்கே உரிய எளிய நடையில், 94 சிறு தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார், லேனா தமிழ்வாணன். முதல் தலைப்பில், நாம் நிர்வகிக்க வேண்டிய மூன்று அம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை நேரம், பணம், வாழ்க்கைத் துணை. இம்மூன்றையும் நாம் நிர்வகிக்க அறிந்து கொள்ளாவிடில், அவை நம்மை நிர்வகித்துவிடும் என்று கூறி, நேரத்தை […]

Read more
1 356 357 358 359 360 505