ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம், என் மண் சார்ந்த காதலும் கலாச்சாரமும் (குறுங்காவியம்), மணவை பொன் மாணிக்கம்;, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.150.   உலகில் மனிதர்கள் தோன்றிய நாளிலிருந்து காதலும் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் காதலின் தன்மையும் காதலிப்பவர்களின் தன்மையும் மாறிக் கொண்டே வந்தாலும், காதல் எப்போதும் நிலைத்திருக்கிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள 12 கதைகளில் நம் அன்றாட வாழ்வில் பார்க்கிற பல காதலர்களைச் சந்திக்கலாம். நம்மோடு பழகுகிறவர்களை அவர்களில் உணரலாம். ஆனால் அவர்கள் நம்மிடம் அம்பிகாபதி – அமராவதி, பிருதிவிராஜ் – […]

Read more

அருமை அண்ணாச்சி

அருமை அண்ணாச்சி, வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ், விலைரூ.250.   தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் வறுமையான சூழலில் பிறந்தவர், உழைப்பை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, வியாபாரத்தின் மூலம் பொருள் ஈட்டி, பெருஞ்செல்வந்தராகியதை படிப்படியாக விவரிக்கும் அற்புத நுால். தவணை முறையில் பணம் வாங்கி, பொருள் விற்பனை முறையை அறிமுகப்படுத்தி, வியாபாரத்தில் வெற்றிவாகை சூடிய வி.ஜி.பி., நிறுவனர்களில் ஒருவர் வி.ஜி.பன்னீர்தாஸ். அவரது வாழ்க்கை போராட்டம் மற்றும் பொருளாதார வெற்றிகள் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. கதை சொல்வது போல், வாழ்வின் தடத்தை விவரிக்கிறது. கடித இலக்கிய […]

Read more

திரை உலகில் செல்வி ஜெயலலிதா

திரை உலகில் செல்வி ஜெயலலிதா, பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், விலை: ரூ.950. ஜெயலலிதா என்றவுடன் அவரது அரசியல் வாழ்க்கைதான் முந்திக்கொண்டு நினைவில் வருகிறது. அரசியல் வாழ்வில் அதிரடித் திருப்பங்களைச் சந்தித்தவர் என்பதால் இருக்கலாம். நடிப்பால் பிரபலமாகி, அரசியலில் அடியெடுத்துவைத்த அவரை, அரசியல் தவிர்த்து ஒரு நடிப்புக் கலைஞராக மட்டுமே சிறப்பிக்கிறது இந்தப் புத்தகம். 12 ஆண்டுகளில் ஜெயலலிதா நடித்தது மொத்தம் 121 படங்கள். தமிழில் நடித்த 87 படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தது மட்டும் 28. கதாநாயகனே மொத்தத் திரைப்படத்தையும் ஆக்ரமித்திருந்த காலத்தில், ஜெயலலிதா […]

Read more

என் பெயர் நுஜூத்

என் பெயர் நுஜூத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது!, நுஜூத் அலி, உடன் இணைந்து டெல்ஃபின் மினோவி, ஆங்கிலத்தில்: லிண்டா கவர்டேல், தமிழில்: சூ.ம.ஜெயசீலன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.180. யேமன் நாட்டின் கார்ட்ஜி கிராமத்தில் பிறந்த நுஜூத், ஒரு விஷயத்தில் தன் அம்மாவை விஞ்சிவிடுகிறாள். அம்மாவுக்கு 16 வயதில் திருமணம் நடக்க, நுஜூத்துக்கோ பத்து வயதிலேயே மணமாகிவிடுகிறது. அம்மாவுக்கு 16 குழந்தைகள் பிறந்தன. மூன்று முறை கரு கலைந்தது. நான்கு குழந்தைகள் இறந்துவிட்டன. அப்பாவுக்குக் கூலி வேலை. வறுமைக்கு வீட்டுப் பொருட்கள் […]

Read more

எண்களின் ஜாலங்கள்

எண்களின் ஜாலங்கள், இரா.சிவராமன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.100. தொடர் வரிசைகள் என்றால் என்ன? பிரமிப்பூட்டும் தொடர் வரிசைகள் எவை? கணிதத்தின் அற்புத பண்புகள் என்னென்ன? கூட்டுத் தொடர் வரிசை எண் அறைகளில் வண்ணமிடும் விளையாட்டு, கணிதத்தில் புதிதாக கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதா? உடனடியாக கூட்டலை கண்டறியும் முறை எது? கணிதத்தில் மிக அடிப்படை அம்சமாக கருதப்படுவது எது? இது போன்ற சிக்கலான் விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வரைபடங்கள், விளக்கங்கள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார் நுாலாசிரியர் முனைவர் இரா.சிவராமன். – […]

Read more

இளையோரே, இனியவை கேளீர்!

இளையோரே, இனியவை கேளீர்! (நன்னெறிக் கதைகள்), பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.360. பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில் அடைத்தோ தருவதைப் போன்று, பல நல்ல கருத்துகளை குட்டிக் கதைகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த நுாலின் ஆசிரியர். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்ததைப் போன்று, இந்த நுாலில் உள்ள இரு பக்க கதைகளில் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். நுாலின் தலைப்பு, ‘இளையோரே […]

Read more

மகத்தான மாமனிதர்கள்

மகத்தான மாமனிதர்கள், பெ. சுபாசு சந்திரபோசு, நிவேதிதா நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை, விலைரூ.150. புத்தர் முதல் ஓஷோ வரை, 27 அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புதிய நோக்கில் தரும் நுால். புத்தருக்கு உலகியல் வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை என்பதை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.எல்லாம் தெரிந்தவராக அறியப்படும் சாக்ரடீஸ், ‘ஒன்றும் தெரியாது’ என்ற தொடரை அடிக்கடி பயன்படுத்தியவர் என்ற உண்மையை விளக்குகிறது. சமத்துவச் சிந்தனையாளராக இயேசு கிறிஸ்துவைக் காட்டியுள்ளார். திருவள்ளுவர் சொன்ன பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் முத்திரை வாசகத்தைப் பிறப்பால் எல்லாரும் ஒன்று தான் […]

Read more

தகைசால் தமிழறிஞர்கள்

தகைசால் தமிழறிஞர்கள், புலவர் சுப்பு.லட்சுமணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.200. வீரமாமுனிவர் காலம் தொட்டு, அண்மையில் மறைந்த சிலம்பொலி செல்லப்பன் வரை இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களின் வரலாற்றுச் சுருக்கம் இந்த நுாலில் அடங்கியுள்ளது. ஆறுமுகநாவலர், வள்ளலார், பாரதி, பாரதிதாசன், வ.உ.சி., – உ.வே.சா., மறைமலை அடிகள் என பட்டியல் நீள்கிறது. பிறப்பு, கல்வி, இலக்கியப்பணிகள், மறைவு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அறிஞர்களின் பட்டியல் அகர வரிசையில் அமைந்துள்ளதும், படங்களுடன் பிரசுரம் ஆகியுள்ளதும் சிறப்பு. அறிஞர்களின் வரலாற்றைக் கூறும் நல்ல கையேடு. – பின்னலுாரான். நன்றி: தினமலர். […]

Read more

ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்

ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள், பதிப்பக வெளியீடு, நக்கீரன் பதிப்பகம், விலைரூ.225. இந்தியாவின் இளம் அரசியல் தலைவர் ராஜிவ் கொலை பின்னணியில், பல உறுத்தலான காட்சிகள் ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளன. புலனாய்வு இதழியல் என்ற தன்மையில் சாதாரண பொதுமக்களுக்கு, ராஜிவ் படுகொலையில் தொடர்புடைய அனைத்து வகை தகவல்களையும் வழங்கியுள்ளது. ஒவ்வொரு குறிப்புகளும், படங்களும், தேதி மற்றும் நேரம் வாரியாக மிகவும் துல்லியமாக அச்சேற்றியுள்ளனர்.இதை முழுமையாகப் படித்து முடித்தால், ராஜிவ் படுகொலைக்கான காரணமாகப் பலதரப்பட்ட பிரச்னைகள் புதிய கண்ணோட்டங்களாக விரியும். இந்திய மக்களுக்குப் பல உண்மைகள் இன்னமும் […]

Read more

அரவான் களப்பலி

அரவான் களப்பலி, கே.பாலகங்காதரன், அருள்நிதி நுாலகம், விலைரூ.330. மகாபாரதத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் வந்து, மிகப்பெரிய விஷயங்கள் செய்தவர் அரவான். பஞ்ச பாண்டவர்களின் குணநலன், அவர்களின் சிறப்புகள், பாஞ்சாலியின் வரலாறு, உலுாபி என்ற நாகக்கன்னி யார்? அவர் அர்ஜுனன் மீது வைத்துள்ள காதல் எத்தகையது போன்ற வரலாற்றை இந்நுால் விவரிக்கிறது. தெருக்கூத்து, நாடகம் வாயிலாக அறிந்த அரவான் களப்பலி நிகழ்வை, இன்றைய தலைமுறை அறியும் விதமாக, பல மனிதர்களை சந்தித்து விளக்கம் பெற்று எழுதியுள்ளார் ஆசிரியர். அரவானை தெய்வமாக திருநங்கையர் வழிபட்டு வருவதையும், களப்பலி எதற்கு, […]

Read more
1 53 54 55 56 57 505